search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தெலுங்கானா போராட்டம்"

    • போலீஸ்காரர்களை கொத்தடிமைகளாக பணி செய்ய வைக்கப்படுவதாக குற்றம்சாட்டினர்.
    • போலீஸ்காரர்களின் மனைவிகள் நடத்தி வரும் போராட்டத்திற்கு எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

    தெலுங்கானா மாநிலத்தில் போலீஸ்காரர்களுக்கு நீண்ட நேரம் பணி வழங்கப்படுகிறது. அவர்களுக்கு விடுமுறை இல்லாமல் பணிச்சுமை ஏற்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

    இதனால் போலீஸ்காரர்கள் பலர் வீட்டிற்கு செல்லும் நேரத்தை குறைத்து அதிக நேரம் பணியில் ஈடுபடுகின்றனர்.

    போலீஸ்காரர்கள் வீட்டுக்கு வருவதை தவிர்த்து வருவதால் அவர்களுடைய மனைவிகள் மற்றும் குழந்தைகள் அரசை கண்டித்து போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.

    நேற்று முன்தினம் நல்கொண்டா, நிஜாமாபாத்தில் உள்ள டிச்பல்லி, வாரங்கலில் உள்ள மாமன்னூர் மற்றும் சிர்சில்லா ஆகிய இடங்களில் போலீஸ்காரர்களின் மனைவிகள், குழந்தைகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    நேற்று 2-வது நாளாக ஜோகுலாம்பா கட்வால் மற்றும் சிர்சில்லா ஆகிய இடங்களில் பல்வேறு பட்டாலியன்களைச் சேர்ந்த போலீஸ்காரர்களின் மனைவி, குழந்தைகள் குடும்பத்தோடு நடுரோட்டில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அவர்கள் கைகளில் பல்வேறு கோரிக்கை அடங்கிய பதாகைகளை ஏந்தி கோஷம் எழுப்பினர். போலீஸ்காரர்களை கொத்தடிமைகளாக பணி செய்ய வைக்கப்படுவதாக குற்றம்சாட்டினர்.

    உரிமைகளை பாதுகாக்க வேண்டும். விடுப்பு இல்லாமல் நீண்ட நேரம் பணி செய்ய வைப்பதை நிறுத்த வேண்டும் என வலியுறுத்தினர்.

    "எங்களது கணவர்கள் வீட்டில் அதிக நேரம் செலவிடுவதில்லை. கடமை என்ற பெயரால், வீட்டுக்கு வருவதே இல்லை. எங்களிடமிருந்து விலகி இருக்க வைக்கப்படுகிறார்கள் என்றனர்.

    போலீஸ்காரர்களின் மனைவிகள் நடத்தி வரும் போராட்டத்திற்கு எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. 

    • தெலுங்கானா மக்களுக்கு காங்கிரஸ் இழைத்த கொடுமைகளை எப்போதும் நினைவில் வைத்திருக்கிறார்கள்.
    • 1952 முதல் 2014 வரை நூற்றுக்கணக்கான தெலுங்கானா இளைஞர்களின் உயிரைப் பறித்ததற்கு உங்கள் கட்சி மட்டுமே காரணம்.

    திருப்பதி:

    ஐதராபாத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் பேட்டி அளித்தார். அப்போது தெலுங்கானா போராட்டத்தின்போது ஏற்பட்ட உயிரிழப்புக்கு மன்னிப்பு கேட்டார்.

    மேலும் சந்திரசேகர ராவ் வரலாற்று மாணவர் அல்ல. ஆந்திர பிரதேசத்தின் பெரும்பகுதி மெட்ராஸ் மாகாணத்தின் ஒரு பகுதியாக இருந்தது. ஐதராபாத் மாநிலம் இருந்தது.

    தெலுங்கு பேசும் மாநிலத்தை உருவாக்குவதற்கான ஒரு பெரிய இயக்கம் அப்போது இருந்தது. அப்படித்தான் தெலுங்கு பேசும் மக்கள் அனைவரையும் ஒன்றிணைத்து ஒரே ஆந்திர பிரதேசம் உருவாக்கப்பட்டது.

    ஒரு மாநிலத்தை உருவாக்குவது அல்லது ஒரு மாநிலத்தை பிரிப்பது குழந்தைகளின் விளையாட்டு அல்ல என கூறினார்.

    இதுகுறித்து பிஆர்எஸ் செயல் தலைவர் கே.டி. ராமராவ் கூறியிருப்பதாவது:-

    மிகவும் தாமதம் சிதம்பரம் ஜி. தெலுங்கானா மக்களுக்கு காங்கிரஸ் இழைத்த கொடுமைகளை எப்போதும் நினைவில் வைத்திருக்கிறார்கள்.

    1952 முதல் 2014 வரை நூற்றுக்கணக்கான தெலுங்கானா இளைஞர்களின் உயிரைப் பறித்ததற்கு உங்கள் கட்சி மட்டுமே காரணம்.

    இப்போது, நீங்கள் எவ்வளவு முயற்சி செய்தாலும், தெலுங்கானா மக்கள் காங்கிரஸ் எங்கள் மீது செய்த அட்டூழியங்களை எப்போதும் நினைவில் வைத்திருப்பார்கள். மறக்க மாட்டோம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    ×