என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "பாம்புகள் பிடிபட்டன"
- வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்
- காப்பு காட்டில் விட்டனர்
ஜோலார்பேட்டை:
திருப்பத்தூர் மாவட்டம், நாட்டறம்பள்ளி அடுத்த செங்கான் பகுதியை சேர்ந்தவர் நந்தகுமார். இவர் அதே பகுதியில் ஆயில் அரைக்கும் கடை வைத்துள்ளார். இந்த நிலையில் வழக்கம் போல் இன்று காலை ஆயில் கடையை திறந்தார். அப்போது கடையின் உள்ளே பாம்பு இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதனையடுத்து உடனடியாக நாட்டறம்பள்ளி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார். தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று 5 அடி நீளமுள்ள சாரை பாம்பு பிடித்தனர்.
ஜோலார்பேட்டை அடுத்த திரியாலத்தை சேர்ந்தவர் வேலன். நேற்று இரவு இவரது வீட்டின் பின்புறம் மின் விளக்கு போடுவதற்கு சென்றார்.
வீட்டின் பின்புறம் பாம்பு இருந்தது. தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவம் இடத்திற்கு சென்று 6 அடி நீளமுள்ள நல்ல பாம்பை பிடித்தனர்.
இதேபோல் நாட்டறம்பள்ளி அடுத்த ஆத்தூர்குப்பம் பகுதியில் வீட்டில் புகுந்த 5 அடி நீளமுள்ள சாரை பாம்பை பிடித்தனர்.
நேற்று இரவு மற்றும் இன்று காலை தொடர்ந்து 3 பாம்புகள் பிடிக்கப்பட்டது. பாம்புகளை திருப்பத்தூர் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். வனத்துறையினர் அருகில் உள்ள காப்பு காட்டில் விட்டனர்.