search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அந்தியூர் கொண்டையம்பாளையம்"

    • தண்ணீரானது பாலம் தொடங்கும் இடத்திலும், முடியும் இடத்திலும் தேங்கி நின்றுள்ளது.
    • பாலம் பகுதியில் போடப்பட்டுள்ள தார்சாலையில் விரிசல் ஏற்பட்டு வருகிறது.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ளது நகலூர் ஊராட்சி. இந்த ஊராட்சிக்கு உட்பட்டது கொண்டையம்பாளையம், செலம்பன் குட்டை கிராம ங்கள்.

    இந்த கிராமங்களுக்கு செல்வதென்றால் கொண்டையம்பாளையம் ஏரிக்குச் செல்லும் நீர் வழி பாதையில் உள்ள தரைவழி பாலத்தை கடந்து தான் செல்ல வேண்டும்.

    ஏரி நிரம்பும் போதெல்லாம் தரைப்பாலம் ஏரிக்கு மிக அருகிலேயே உள்ளதன் காரணமாக தரைப்பாலம் ஆனது மூழ்கி விடும்.

    இதன் காரணமாக இந்த கிராமங்களுக்குச் செல்லும் பாதையானது துண்டிக்க ப்பட்டு சுமார் 8 கிலோமீட்டர் தூரம் இப்பகுதி கிராம மக்கள் சுற்றி வர வேண்டிய சூழ்நிலை இருந்து வந்தது.

    இதன் காரணமாக அப்பகுதி யில் மேம்பாலம் அமைத்து தரவேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்து வந்த நிலையில் நெடுஞ்சா லைத்துறை மூலம் அப்பகுதி யில் சுமார் ரூ.4 கோடியே 40 லட்சம் மதிப்பீட்டில் மேம்பாலம் அமைப்பத ற்கான பூமி பூஜை போட ப்பட்டு பணிகள் தொடங்க ப்பட்டன.

    பணிகள் தொடங்கப்பட்ட போது அவ்வப்போது ஏரி க்கு தண்ணீர் வந்து அப்ப குதியில் தண்ணீர் தேங்கி விட்டதன் காரணமாக பாலம் கட்ட தாமதமாகி கொண்டே வந்தது.

    மேலும் பாலம் பகுதியில் தார் சாலை அமைப்பது என சுமார் 7 கோடி ரூபாய் வரை செலவு செய்யப்பட்டு கடந்த சில மாதங்களுக்கு முன்பு பணிகள் முழுமை யாக முடிக்கப்பட்டன.

    இந்த நிலையில் ஏரியின் நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த வாரம் கனமழை பெய்ததன் காரணமாக கொண்டயம்பாளையம் ஏரிக்கு தண்ணீர் வரத்து அதிகமானது.

    தற்போது கொண்டையம்பாளையம் ஏரி அதன் முழு கொள்ளளவை எட்டி உள்ள நிலை யில் தண்ணீரானது பாலம் தொடங்கும் இடத்திலும் முடியும் இடத்திலும் சுமார் 3 அடி உயரம் வரை தேங்கி நின்றுள்ளது.

    இதன் காரணமாக கொண்டைபாளையம் கிராமத்திற்கு செல்லும் பாதையானது துண்டிக்க ப்பட்டு மீண்டும் அவர்கள் 8 கிலோமீட்டர் தூரம் சுற்றி த்தான் செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

    இதற்கிடையே தண்ணீர் முழுமையாக தேங்கி நிற்பதன் காரணமாக பாலம் பகுதியில் போடப்பட்டுள்ள தார்சாலையில் விரிசல் ஏற்பட்டு வருகிறது.

    இது குறித்து அப்பகுதி பொது மக்கள் தெரிவிக்கையில், பாலத்தின் இருபுறமும் தண்ணீர் தேங்கி நின்று தற்போது பாலத்தை உபயோ கப்படுத்த முடியாத சூழ்நிலை உள்ளதாகவும்,

    நாங்கள் அந்தியூர் செல்ல வேண்டுமென்றால் சுமார் 8 கிலோமீட்டர் தூரம் சுற்றி தான் செல்ல வேண்டும் எனவும், இதன் காரணமாக வேலைக்கு செல்வோர், மருத்துவமனைக்கு செல்வார் உள்ளிட்டோர் பாதிக்க ப்படுவதால் தங்களுக்கு பாலத்தை மறுசீரமைப்பு செய்து போக்குவரத்தை சீர் செய்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×