search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆரஞ்சு அலெர்ட்"

    • மக்கள் கவனமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
    • பேரிடர் மீட்பு படையினரும் தயார் நிலையில் வைக்கப்பட்டிருக்கின்றனர்.

    திருவனந்தபுரம்:

    வங்கக்கடலில் உருவாகி யிருக்கும் "டானா" புயல் தீவிர புயலாக மாறியிருக்கிறது. இதன் காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது.

    "டானா" புயல் காரண மாக கேரள மாநிலத்திலும் மழை பெய்து வருகிறது. மத்திய கிழக்கு அரபிக் கடலில் கர்நாடகா கடற் கரை பகுதியில் புயல் நிலை கொண்டிருப்பதன் காரணமாகவே கேரளாவில் மழை பெய்து வருகிறது.

    அங்கு வருகிற 27-ந்தேதி வரை கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் பல மாவட்டங்களுக்கு ஆரஞ்சு மற்றும் மஞ்சள் எச்சரிக்கையும் விடுத்துள்ளது.

    கோட்டயம், எர்ணாகுளம் இடுக்கி, திருச்சூர் ஆகிய 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலார்ட்டும், திருவனந்த புரம், கொல்லம், பத்தினம் திட்டா, ஆலப்புழா, பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு ஆகிய 7 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலார்ட்டும் விடுக்கப்பட்டு உள்ளது.

    இந்த மாவட்டங்களில் மக்கள் கவனமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். மேலும் அந்த மாவட்டங்களில் பேரிடர் மீட்பு படையினரும் தயார் நிலையில் வைக்கப்பட்டிருக்கின்றனர்.

    • தமிழகத்தில் 27-ந்தேதி வரை லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு.
    • தாழ்வான பகுதிகள், சாலைகளில் மழைநீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது.

    தமிழக கடலோர பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென் மேற்கு-மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

    இதன் காரணமாக தமிழகத்தில் 27-ந்தேதி வரை லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. இன்று (22-ந்தேதி) அநேக இடங்களில் மழை பெய்யும். ஒரு சில இடங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

    இதையடுத்து சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று இரவு முதல் கனமழை பெய்து வருகிறது. இதனால் தாழ்வான பகுதிகள், சாலைகளில் மழைநீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது.

    இந்நிலையில், சென்னை உள்பட 20 மாவட்டங்களில் அடுத்த இரண்டு மணி நேரத்திற்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    அதன்படி, கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், விழுப்புரம், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராணிப்பேட்டை, வேலூர், சிவகங்கை, திண்டுக்கல், கோவை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, அரியலூர் மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் அடுத்த இரண்டு மணி நேரத்திற்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.

    மேலும், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் மழை நீடிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×