search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "எதுக்களிப்பு பிரச்சினை"

    • எல்லோருக்கும் இருக்கின்ற ஒரு வகை பிரச்சனை ஆகும்.
    • ஐந்து வேளை என பிரித்து சாப்பிடுங்கள்.

    சாப்பிட்டதும் எதுக்களித்தல் என்பது எல்லோருக்கும் இருக்கின்ற ஒரு வகை பிரச்சனை ஆகும். வயிற்று பகுதியில் உள்ள அமிலம் உணவுக் குழாய் வழியாக உயர்வதால் இந்த பிரச்சினை ஏற்படுகிறது.

    பொதுவாக நமது உடலின் உள்பகுதியில் உணவுக்குழாய்க்கும். வயிற்றுக்கும் இடையே ஒரு வால்வு உள்ளது. இந்த வால்வு பலவீனம் அடையும்போது வயிற்றில் இருக்கும் அமிலம் மேலே வருகிறது. இந்த அமிலத்தை கட்டுப்படுத்தும் பணியைத் தான் வால்வு செய்யும்.

    ஆனால் அது பலவீன டைந்து விடுவதால்தான் நாம் சாப்பிட்ட பின்னர், வயிறு முழுவதும் நிரம்பிவிடும் நேரத்தில் அந்த அமிலம் உணவுடன் கலந்து மேலே வருகிறது. இதனால்தான் அடிக்கடி எதுக்களிப்பு ஏற்பட முக்கிய காரணமாக இருக்கிறது. இது ஜீரணத்துக்கான பிரச்சினை மட்டும் இல்லை. அந்த வால்வு பலவீன மடைந்து விடுவதால்தான் இதுபோன்று ஏற்படுகிறது.

    தவிர்க்க வேண்டிய உணவுகள்:

    அமில உணவுகளான ஆரஞ்சு, லெமன், ஆரஞ்சு ஜூஸ், லெமனேடு, க்ரான்பெர்ரீஸ் மற்றும் திராட்சை போன்ற உணவுகளை தவிருங்கள். இந்த மாதிரியான உணவுகள் எதுக்களித்தல் பிரச்சனையை உண்டுபண்ணுகிறது. சாலட் போன்றவற்றில் சுவையூட்ட பயன்படுத்தும் வினிகர் கூட இந்த பிரச்சினையை உண்டு பண்ணும். இதற்கு பதிலாக ஆப்பிள் சிடர் வினிகரை பயன்படுத்தலாம்.

    காரமான உணவுகள், தக்காளி, பால்பொருட்கள், பர்கர், பீட்சா மற்றும் ஸ்டீக்ஸ் போன்ற உணவுகளை தவிர்ப்பது நல்லது. இந்த மாதிரியான உணவுகள் ஜீரணிப்பதை தாமதமாக்கி வயிற்றில் நீண்ட நேரம் உணவை தங்க வைப்பதால் எதுக்களித்தலை ஏற்படுத்துகிறது.

    கொஞ்சம் கொஞ்சமாக நான்கு, ஐந்து வேளை என பிரித்து சாப்பிடுங்கள் சாப்பிட்ட பிறகு 3 மணி நேரம் வரை படுக்காதீர்கள். நல்ல காற்றோட்டமான ஆடைகளை அணியுங்கள்.

    ×