என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "நீதிபதி அர்ச்சனா புரி"
- கடந்த 2019-ம் ஆண்டில் விபத்தில் கணவனை இழந்த பெண் ஒருவர் இழப்பீடு பணத்தைக் கோரியிருந்தார்.
- மறுமணம் செய்து கொண்ட காரணத்தைக் கூறி டெல்லி ஐகோர்ட் அவருக்கு இழப்பீட்டை மறுத்தது.
புதுடெல்லி:
கடந்த 2019-ம் ஆண்டில் விபத்தில் கணவனை இழந்த பெண் ஒருவர் இழப்பீடு பணத்தைக் கோரியிருந்தார். கணவரின் பெற்றோர் தொடர்ந்த வழக்கில் அவர் இடையில் மறுமணம் செய்துகொண்ட காரணத்தைக் கூறி டெல்லி ஐகோர்ட் இழப்பீட்டை மறுத்தது.
இதை எதிர்த்து அப்பெண் தொடர்ந்த வழக்கில் பஞ்சாப்-அரியானா நீதிமன்றம் இந்தக் கருத்தை அவருக்கு சாதகமாகக் கூறியுள்ளது.
இந்நிலையில், இந்த வழக்கு பஞ்சாப் மற்றும் அரியானா ஐகோர்ட் நீதிபதி அர்ச்சனா புரி முன் விசாரணைக்கு வந்தது. அப்போது,
மறுமணம் செய்துகொண்டதாலேயே ஒரு பெண்ணுக்கு அவரது கணவரின் விபத்திற்கான இழப்பீட்டுப் பணத்தை தர மறுப்பது சரியல்ல என தெரிவித்தார்.
இதுதொடர்பாக அவர் கூறுகையில், இறந்தவரின் விதவையான ரஜினி மறுமணம் செய்துகொண்டதால், அவரது உரிமைக் கோரிக்கையை இழக்க இது ஒரு காரணமாக இருக்கமுடியாது என்பதை கவனிக்க வேண்டும்.
விதவையின் மறுமணத்துக்கும், அவளுக்கு ஏற்பட்ட இழப்பின் காரணமாகவும், இழப்பீடு பெறுவதற்கான உரிமையுடன் அவளுக்கு எந்தத் தொடர்பும் இல்லை.
அவரது கணவரின் இயற்கைக்கு மாறான மறைவின் விளைவாக மறுமணம் செய்து கொள்வதற்கான அவளது முடிவு முழுக்க முழுக்க அவளுடைய தனிப்பட்ட விருப்பம், அதை யாரும் சொல்ல முடியாது என தெரிவித்துள்ளார்.
மேலும், விபத்தில் இறந்தவரின் தந்தைக்கும் இழப்பீட்டில் உரிமை உள்ளது எனவும் நீதிபதி அர்ச்சனா புரி தெரிவித்தார்.