என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "நீர்ப்பாசன மேம்பாடு கழகம்"
- முதல்கட்டமாக மாநிலத்தில் உள்ள 108 ரேசன் கடைகள் கே-ஸ்டோர்களாக மாறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- கேரள நீர்ப்பாசன உள்கட்டமைப்பு மேம்பாட்டு கழகம் தயாரிக்கும் ஹில்லி அக்வா என்ற பெயரில் தரமான தண்ணீர் பாட்டில் வழங்கப்பட உள்ளது.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலத்தில் சுமார் 2 ஆயிரம் ரேசன் கடைகள் உள்ளன. இதன் மூலம் பொதுமக்களுக்கு கோதுமை உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்தநிலையில் கேரள மாநிலத்தில் உள்ள ரேசன் கடைகளில் மக்களுக்கு வங்கி மற்றும் பிற ஆன்லைன் சேவைகளை வழங்கும் நடவடிக்கைகள் தொடங்கப்பட்டு உள்ளன.
ரேசன் கடைகள் மூலம் கூடுதல் பொருட்கள் மற்றும் டிஜிட்டல் சேவைகளை வழங்குவதற்காக கே-ஸ்டோர்கள் என மறுபெயரிடவும் கேரள அரசு முடிவு செய்திருக்கிறது. முதல்கட்டமாக மாநிலத்தில் உள்ள 108 ரேசன் கடைகள் கே-ஸ்டோர்களாக மாறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கே-ஸ்டோர்கள் தொடங்கப்பட்ட பிறகு அதன் மூலமாக ரூ10ஆயிரம் வரையிலான பரிவர்த்தனைகள், பயன்பாட்டு பில் செலுத்துதல் (மின்சாரம் மற்றும் தண்ணீர் உள்பட), 5கிலோ எடையுள்ள சிறிய எல்.பி.ஜி. சிலிண்டர்கள், சபரி மற்றும் மில்மா தயாரிப்புகள் வழங்குதல் உள்ளிட்டவைகள் பொது மக்களுக்கு கிடைக்கும்.
இந்நிலையில் ரேசன் கடைகள் மூலமாக பொது மக்களுக்கு தண்ணீர் பாட்டில்கள் விற்பனை செய்ய கேரள அரசு முடிவு செய்துள்ளது.
அதன்படி ஒரு லிட்டர் தண்ணீர் பாட்டில் 10 ரூபாய்க்கு வழங்கப்படும். மாநில நீர்ப்பாசன துறையின் கீழ் இயங்கும் பொதுத்துறை நிறுவனமான கேரள நீர்ப்பாசன உள்கட்டமைப்பு மேம்பாட்டு கழகம் தயாரிக்கும் ஹில்லி அக்வா என்ற பெயரில் தரமான தண்ணீர் பாட்டில் வழங்கப்பட உள்ளது.
இந்த தண்ணீர் பாட்டில் வெளிச்சந்தையில் இது ரூ15 வரை விற்கப்படுகிறது. சபரிமலை சீசனை கருத்தில் கொண்டு முதல்கட்டமாக கோட்டயம், இடுக்கி மற்றும் பத்தனம்திட்டா மாவட்டங்களில் உள்ள ரேசன் கடைகளுக்கு தண்ணீர் பாட்டில்கள் விற்பனைக்கு அறிமுகப்படுததப்படுகிறது.
அதன் தொடர்ச்சியாக மற்ற மாவட்டங்களில் உள்ள ரேசன் கடைகளிலும் தண்ணீர்பாட்டில் விற்பனையை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.