search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இரட்டை என்ஜின் ஆட்சி"

    • பா.ஜனதா 5 மாநில தேர்தலுக்கு முன்பாக 10 மாநிலங்களில் ஆட்சி செய்து வந்தது.
    • நான்கு மாநிலங்களில் கூட்டணி ஆட்சியில் இடம் பெற்றுள்ளது.

    4 மாநிலத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கைக்கு முன்பாக இது பாராளுமன்ற தேர்தலுக்கான அரையிறுதி போட்டி போன்றது. இந்த அரையிறுதி போட்டியில் பா.ஜனதாவுக்கு பாடம் கற்பிக்கப்படும் என எதிர்க்கட்சிகள் வர்ணித்தன.

    ஆனால், ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கரில் காங்கிரசிடம் இருந்து பா.ஜனதா ஆட்சியை கைப்பற்றியது. மேலும், மத்திய பிரதேசத்தில் அமோக வெற்றி பெற்றது. எதிர்க்கட்சிகள் குறிப்பாக காங்கிரஸ் சற்று எதிர்பார்த்திருக்காது. ராஜஸ்தானில் மீண்டும் ஆட்சி அமைப்பதில் அசோக் கெலாட் மிகுந்த நம்பிக்கையுடன் இருந்தார். ஆனால், அவரது நம்பிக்கையை பா.ஜனதா சிதைத்துவிட்டது.

    இந்த மூன்று மாநில வெற்றிகள் மூலம் பா.ஜனதா மிகுந்த உற்சாகத்தில் உள்ளது. ராஜஸ்தான், சத்தீஸ்கர் மாநிலத்தில் ஆட்சியை பிடிப்பதற்கு முன்பாக பா.ஜனதா உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், குஜராத், அசாம், ஹரியானா, உத்தரகாண்ட், திரிபுரா, மணிப்பூர், கோவா, அருணாச்சல பிரதேசம் ஆகிய 10 மாநிலங்களில் ஆட்சி செய்து வந்தது.

    இந்த நிலையில் அதில் ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்கள் இணைந்து 12 ஆக அதிகரித்துள்ளது. மேலும் மகாராஷ்டிரா, மேகாலயா, நாகாலாந்து, சிக்கிம் ஆகிய மாநிலங்களில் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது.

    மத்திய அரசின் நலத்திட்டங்கள் மாநில அரசுகளுக்கு சென்றடைய மத்தியிலும், மாநிலத்திலும் ஒரே அரசு இருக்க வேண்டும். இரட்டை என்ஜின் அரசு இருந்தால்தான் மக்கள் பயனடைவார்கள் என்பதை பா.ஜனதா தாரக மந்திரிமாக கொண்டுள்ளது. தற்போது இந்த இரட்டை என்ஜின் ஆட்சியில் மேலும் இரண்டு மாநிலங்கள் இணைந்துள்ளன.

    ×