search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தீரஜ் குமார் சாகு"

    • நாட்டிலேயே ஒரு சோதனையில் பிடிபட்ட மிக அதிக தொகை இதுவாகும்.
    • தீரஜ் சாகுவின் செயலுக்கும், கட்சிக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று காங்கிரஸ் அறிவித்துள்ளது.

    புதுடெல்லி:

    காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மேல்சபை எம்.பி தீரஜ் குமார் சாகு. ஜார்க்கண்ட் மாநிலத்தில் இருந்து இவர் எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டார்.

    தீரஜ்குமார் சாகு தொடர்புடைய பால்டியோ சாகு குழுமத்துக்கு மேற்கு ஒடிசாவில் பவுத் டிஸ்டிலெரி என்ற மதுபான ஆலை உள்ளது. மிகப் பெரிய அளவில் மதுபானங்களை உற்பத்தி செய்வதில் இந்நிறுவனமும் ஒன்று.

    பால்டியோ சாகு குழுமத்தினர் வரி ஏய்ப்பு செய்வதாக கிடைத்த தகவலையடுத்து, ஒடிசாவின் சம்பல் பூர், ரூர்கேலா, பொலாங்கிர், சுந்தர்கர் மற்றும் புவனேஸ் வரில் இந்த குழுமத்துக்கு சொந்தமான இடங்களிலும், தீரஜ்குமாருக்கு சொந்தமான இடங்களிலும், மேற்கு வங்கத்தில் உள்ள அலுவல கங்களிலும் வருமானவரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.

    கடந்த 4 தினங்களாக வருமானவரி அதிகாரிகள் சோதனை நடத்தினர். இன்று 5-வது நாளாக சோதனை நடத்தினர். இந்த சோதனையின்போது பணக் குவியல்களை காண முடிந் தது. இதுவரை 176 பண மூட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டன. அவை ஒடிசாவின் பொலாங்கிரில் உள்ள ஸ்டேட் வங்கி கிளைக்கு எடுத்து செல்லப்பட்டு எண்ணப்பட்டன. பெரும்பாலும் ரூ.500 கட்டுகளாக இருந்தன. தொடர்ந்து பணத்தை எண்ணியதால் பணம் எண்ணும் எந்திரங்கள் சேதமடைந்தன.

    இதனால் பல வங்கிகளில் இருந்து எந்திரங்கள் கொண்டு வரப்பட்டு விடிய, விடிய எண்ணப்பட்டன. பணத்தை எண்ண முடியாமல் வருமானவரி அதிகாரிகள் திணறினார்கள்.

    இதுவரை ரூ.300 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டன. 3 இடங்களில் 7 அறைகள் மற்றும் 9 லாக்கரில் இன்னும் எண்ணப்படவில்லை. அலமாரிகள் மற்றும் நாற்காலிகளில் இந்த பணம் மறைத்து வைக்கப்பட்டுள்ளன.

    இன்னும் பல இடங்களில் நகை, பணம் மறைத்து வைக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன. இதனால் பறிமுதல் செய்யப் படும் பணத்தின் மொத்த மதிப்பு மேலும் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.

    ரூ.350 கோடி வரை சிக்கும் என்று எதிர்பார்ப்ப தாக வருமானவரி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    நாட்டிலேயே ஒரு சோதனையில் பிடிபட்ட மிக அதிக தொகை இதுவாகும். இதனால் பணக் குவியலை பார்த்த அதிகாரிகள் திகைத்துவிட்டனர்.

    இந்த சோதனையில் வரு மானவரித்துறை அதிகாரி கள் 150 பேர் ஈடுபட்டனர். ஐதராபாத்தில் இருந்து 20 அதிகாரிகள் வர வழைக்கப்பட்டு மது ஆலையின் டிஜிட்டல் ஆவணங்களை சோதனையிடுகின்றனர். சோதனையின்போது ரூ.500 நோட்டுகள் கிழிந்த நிலையில் கிடந்தன. அவற்றையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

    இதற்கிடையே தீரஜ் சாகுவின் செயலுக்கும், கட்சிக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று காங்கிரஸ் அறிவித்துள்ளது.

    இதுதொடர்பாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறும் போது, "தீரஜ் சாகுவின் வணிகங்களுடன் கட்சிக்கு எந்த வகையிலும் தொடர்பு இல்லை" என்றார்.

    ×