search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சத்தீஸ்கர் முதல் மந்திரி"

    • சத்தீஸ்கர் மாநில முதல் மந்திரியாக விஷ்ணு தியோ சாய் இன்று பதவியேற்றார்.
    • பிரதமர் மோடி, பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, உள்துறை மந்திரி அமித்ஷா உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    ராய்ப்பூர்:

    சத்தீஸ்கர் மாநிலத்தில் கடந்த மாதம் நடந்த சட்டசபை தேர்தலில் 54 இடங்களைக் கைப்பற்றி பா.ஜ.க. பெரும்பான்மையுடன் அபார வெற்றி பெற்றது.

    ராய்ப்பூரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் மாநில முதல் மந்திரியாக விஷ்ணு தியோ சாய் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டதாக பா.ஜ.க. தலைமை அறிவித்தது.

    இந்நிலையில், சத்தீஸ்கர் முதல் மந்திரியாக விஷ்ணு தியோ சாய் இன்று பதவியேற்றார். ராய்ப்பூரில் உள்ள அறிவியல் கல்லூரி மைதானத்தில் இன்று நடைபெற்ற பதவியேற்பு விழாவில் விஷ்ணு தியோ சாய் முதல் மந்திரியாக பதவியேற்றார். கவர்னர் அரிசந்தன் முதல் மந்திரி விஷ்ணு தியோ சாய்க்சாய்க்கு பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.

    இந்தப் பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி, பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, உள்துறை மந்திரி அமித்ஷா, பா.ஜ.க. ஆளும் பிற மாநிலங்களின் முதல் மந்திரிகள், மத்திய மந்திரிகள், பா.ஜ.க. மூத்த தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    ×