என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "கேரள சுகாதாரத்துறை மந்திரி"
- கேரளாவில், மரபணு வரிசைப்படுத்தல் பரிசோதனை மூலம் இப்போது கண்டறியப்பட்டுள்ளது.
- இணைநோய் உள்ளவர்கள் கவனமாக இருக்க வேண்டும்.
பத்தனம்திட்டா:
கேரளாவில், புதிதாக உருமாறிய கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. இதனால், அங்கு கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், கேரள மாநில சுகாதாரத்துறை மந்திரி வீணா ஜார்ஜ், பத்தனம்திட்டாவில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
புதியவகை கொரோனா குறித்து கேரள மக்கள் கவலைப்பட தேவையில்லை. இது இப்போதுதான் இங்கு கண்டறியப்பட்டுள்ளது.
ஆனால் சில மாதங்களுக்கு முன்பே சிங்கப்பூர் விமான நிலையத்தில் சில இந்தியர்களிடம் காணப்பட்டது.
கேரளாவில், மரபணு வரிசைப்படுத்தல் பரிசோதனை மூலம் இப்போது கண்டறியப்பட்டுள்ளது.
நாட்டின் மற்ற பகுதிகளிலும் இந்த புதியவகை கொரோனா இருக்கிறது. இதுபற்றி கவலைப்பட வேண்டாம். நிலைமை உன்னிப்பாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. நமது சுகாதார கட்டமைப்பு பலமாக உள்ளது.அதே சமயத்தில், பொதுமக்கள் உஷாராக இருக்க வேண்டும். குறிப்பாக, இணைநோய் உள்ளவர்கள் கவனமாக இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.