search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தூத்துக்குடி மாநகராட்சி"

    • நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் மழை வெள்ளம் சூழ்ந்ததால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிராமங்கள் தீவுகளாக மாறின.
    • பாதிக்கப்பட்ட பகுதிகள் குறித்து மத்திய குழுவினருக்கு காணொலி மூலமாக மாவட்ட நிர்வாகத்தினர் விளக்கம் அளித்தனர்.

    தூத்துக்குடி:

    நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களை கடந்த 17, 18 ஆகிய தேதிகளில் பெய்த அதிகனமழை புரட்டிப்போட்டுவிட்டது.

    நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் மழை வெள்ளம் சூழ்ந்ததால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிராமங்கள் தீவுகளாக மாறின.

    பல கிராமங்கள் அதாவது ஏரல், ஸ்ரீவைகுண்டம், முக்காணி, அகரம், பால்குளம், குரும்பூர், சோனகன்விளை, அம்மன்புரம், பரமன்குறிச்சி, பள்ளத்தூர், தேரிக்குடியிருப்பு உள்ளிட்ட 700-க்கும் மேற்பட்ட கிராமங்களை மழை வெள்ளம் சூழ்ந்து தத்தளிக்கின்றன.

    இந்நிலையில் மழை, வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய மத்திய குழுவினர் இன்று தூத்துக்குடி வந்துள்ளனர்.

    தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் மத்திய குழு பங்கேற்றுள்ளது.

    பாதிக்கப்பட்ட பகுதிகள் குறித்து மத்திய குழுவினருக்கு காணொலி மூலமாக மாவட்ட நிர்வாகத்தினர் விளக்கம் அளித்தனர்.

    ஆலோசனைக்கு பிறகு பாதிக்கப்பட்ட பகுதிகளை மத்திய குழு நேரில் பார்வையிடுகிறது.

    ×