search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஓஎஸ் மணியன்"

    • கட்டுப்பாட்டை இழந்த கார் அருகே உள்ள பெரியாச்சி அம்மன் கோவில் சுவற்றின் மீது மோதி நின்றது.
    • விபத்தில் கார் முன்பக்க பகுதி மற்றும் கோவில் சுவர் பலத்த சேதமடைந்தது.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் தலைஞாயிறு அடுத்த ஓரடியம்பலம் பகுதியைச் சேர்ந்தவர் முன்னாள் அமைச்சரும் தற்போதைய வேதாரண்யம் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வுமான ஓ.எஸ்.மணியன்.

    இவர் இன்று வேதாரண்யத்தில் இருந்து கீழ்வேளூருக்கு காரில் புறப்பட்டார். காரில் முன்இருக்கையில் ஓ.எஸ்.மணியன் அமர்ந்திருந்தார். காரை அவரது டிரைவர் ஓட்டினார்.

    கார் கிழக்கு கடற்கரைச் சாலையில் சென்றபோது முன்னால் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதாமல் இருக்க டிரைவர் காரை திருப்பினார். இதில் கட்டுப்பாட்டை இழந்த கார் அருகே உள்ள பெரியாச்சி அம்மன் கோவில் மதில் சுவற்றின் மீது மோதி நின்றது.

    இந்த விபத்தில் முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன், டிரைவர் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர்தப்பினர். இருந்தாலும் ஓ.எஸ்.மணியன், டிரைவர் ஆகியோர் நாகை அரசு ஆஸ்பத்திரிக்கு முதலுதவி சிகிச்சைக்காக சென்றனர்.

    இந்த விபத்தில் கார் முன்பக்க பகுதி மற்றும் கோவில் மதில் சுவர் பலத்த சேதமடைந்தது. இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • தி.மு.க. வேட்பாளர் வேதரத்தினம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
    • அரசியல் பழிவாங்கும் நோக்கில் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் என்றும் தேர்தல் வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் ஓ.எஸ்.மணியன் தரப்பில் வாதிடப்பட்டது.

    சென்னை:

    2021 சட்டமன்றத் தேர்தலில் வேதாரண்யம் தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட ஓ.எஸ்.மணியன் வெற்றி பெற்றதை எதிர்த்து தி.மு.க. வேட்பாளர் வேதரத்தினம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

    வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்ற நிலையில் இருதரப்பு வாதங்களும் நடைபெற்றது.

    அரசியல் பழிவாங்கும் நோக்கில் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் என்றும் தேர்தல் வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் ஓ.எஸ்.மணியன் தரப்பில் வாதிடப்பட்டது.

    ரூ.60 கோடி அளவிற்கு பணப்பட்டுவாடா நடந்துள்ளதாகவும், இரு வேறு சமூக மக்களிடையே விரோதத்தை தூண்டியும், பரிசுப் பொருட்களுக்கான டோக்கன் விநியோகம் செய்தும், வேதாரண்யேஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான நிலத்திற்கு பட்டா வழங்கப்படும் என பொய்யான வாக்குறுதி அளித்தும் வெற்றி பெற்றதாக வேதரத்தினம் தரப்பினர் வாதிட்டனர்.

    இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தேர்தலில் வெற்றி பெற்றது செல்லும் எனவும் வழக்கை தள்ளுபடி செய்வதாகவும் தெரிவித்தார்.

    ×