search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஏகாந்த சேவை"

    • வருடாந்திர மகாசிவராத்திரி பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது.
    • நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

    ஸ்ரீகாளஹஸ்தி:

    திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் வருடாந்திர மகாசிவராத்திரி பிரம்மோற்சவ விழா கோலாகலமாக நடந்து வருகிறது. விழாவின் 11-வது நாளான நேற்று முன்தினம் காலை கேடிக வாகனங்களில் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர், ஞானப்பிரசுனாம்பிகை தாயார் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

    மதியம் 12.30 மணியளவில் கோவிலில் மூலவர் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர் சன்னதி எதிரே கொடிமரத்தில் கொடியிறக்கம், இரவு சிம்மாசனத்தில் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர், காமதேனு வாகனத்தில் ஞானப்பிரசுனாம்பிகை தாயார் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

    அதைத்தொடர்ந்து 12-வது நாளான நேற்று இரவு 10 மணியளவில் பல்லக்கு சேவை நடந்தது. அதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

    13-வது நாளான இன்று (வெள்ளிக்கிழமை) இரவு மூலவர் ஞானப்பிரசுனாம்பிகை தாயார் சன்னதி எதிரே உள்ள பள்ளியறையில் சாமி-அம்பாளுக்கு ஏகாந்த சேவை நடத்தப்படுகிறது.

    • திருப்பதி ஆலயத்துக்கு தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் சென்று வந்த வண்ணம் உள்ளனர்.
    • விடுமுறை நாட்களில் குடும்பம் குடும்பமாக குவிந்து விடுகிறார்கள்.

    திருப்பதி ஆலயத்துக்கு தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் சென்று வந்த வண்ணம் உள்ளனர்.

    நாளுக்கு நாள் பக்தர்கள் கூட்டம் அதிகரித்தப்படி உள்ளது.

    பக்தர்கள் வருகையை கட்டுப்படுத்த திருப்பதி-திருப்பதி தேவஸ்தானம் எத்தனையோ நடவடிக்கைகளை மேற்கொண்டது.

    ஆனால் அந்த கட்டுப்பாடுகளையும் மீறி திருப்பதி-திருமலை ஆலயத்துக்கு பக்தர்களின் வருகை அதிகரித்தப்படிதான் உள்ளது.

    திருப்பதி ஏழுமலையான் ஆலயத்தில் நிறுவப்பட்டுள்ள சக்கரம் தான் பக்தர்கள் அலை அலையாக செல்வதற்கு காரணம் என்று சொல்கிறார்கள்.

    வரும் நாட்களில் பக்தர்கள் எண்ணிக்கை இரட்டிப்பாகும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

    பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளதால் திருமலையில் கிடைக்கும் உண்டியல் வசூலும் பல மடங்கு உயர்ந்துள்ளது.

    தினமும் சராசரியாக ரூ. 2 கோடிக்கு மேல் உண்டியல் வசூல் கிடைக்கிறது. இந்த எண்ணிக்கையும் உயர்ந்தப்படி இருக்கிறது.

    முன்பெல்லாம் திருப்பதி ஆலயத்துக்கு ஆந்திராவில் இருந்தும் தமிழகத்தில் மட்டுமே சென்றனர்.

    அதிலும் தமிழகத்தில் சென்னை நகர மக்கள் தான் அதிக அளவில் செல்வதுண்டு.

    ஆனால் சமீப காலமாக நாடு முழுவதிலும் இருந்து பக்தர்கள் திருப்பதிக்கு வருகிறார்கள்.

    வடமாநில இந்தி பேசும் மக்கள் அதிகளவில் திருப்பதி ஆலயத்துக்கு வர தொடங்கி உள்ளனர்.

    மும்பை, பெங்களூர், ஐதராபாத் நகரங்களில் இருந்து பக்தர்கள் கார்களில் வரும் வழக்கமும் தொடங்கி உள்ளது.

    இந்த எண்ணிக்கையை கட்டுப்படுத்த ஒவ்வொரு ரூ.300 சிறப்பு கட்டண தரிசனம் வசதியை கொண்டு வந்தனர்.

    இந்த சிறப்பு கட்டணத்திற்கான ஆன்லைனிலும் முன்பதிவு செய்யும் திட்டமும் கொண்டு வரப்பட்டது.

    என்றாலும் பக்தர்களின் வருகையை கட்டுப்படுத்த இயலவில்லை.

    விடுமுறை நாட்களில் குடும்பம் குடும்பமாக குவிந்து விடுகிறார்கள்.

    மொட்டை போடுவது, உண்டியலில் பணம் போடுவது ஆகியவற்றை பெரும்பாலான பக்தர்கள் தவறாமல் செய்கிறார்கள்.


    • ஒவ்வொரு நாளும் இரவில் ஏகாந்தசேவை நடைபெறுகிறது.
    • பழங்கள், பாதாம் நைவேத்தியமாகப் படைக்கப்படுகிறது.

    ஒவ்வொரு நாளும் இரவில் ஏகாந்தசேவை நடைபெறுகிறது.

    இந்த ஏகாந்த சேவைக்காக போக ஸ்ரீநிவாசனை வெல்வெட் விரித்த மெத்தையில் வைத்து, வெள்ளிச் சங்கிலிகள் இணைத்த ஊஞ்சல் கட்டிலில் சயனிக்கச் செய்கின்றனர்.

    சயன மண்டபத்திலேநடைபெறும் இச்சேவையின்போது முக்கியஸ்தர்கள் மாத்திரமே உடனிருக்கிறார்கள்.

    பெருமாளுக்கு வழக்கமான நைவேத்தியங்களைச் செய்யும்போது அவற்றை வகுளாதேவி பார்வையிடுகிறார்.

    அவருக்கும் அம்மவாரி பாயசம் படைக்கப்பெறுகிறது.

    பழங்கள், பாதாம் நைவேத்தியமாகப் படைக்கப்படுகிறது.

    கி.பி. 1513-ம் ஆண்டில் விஜயநகரப் பேரரசை ஆண்ட கிருஷ்ண தேவராயர் இத்திருக்கோவிலுக்கு ஏராளமான

    தங்க, வைர நகை களைக் காணிக்கையாக வழங்கி உள்ளார்.

    மீண்டும் கி.பி. 1517ம் ஆண்டில் ஏராளமான தங்க அணிகலன்களை வழங்கினார்.

    அச்சமயம் இவரது இரண்டு தேவியர்கள் இரண்டு தங்கக் கிண்ணங்களை பெருமாள் கோவிலுக்கு காணிக்கையாக அளித்திருக்கிறார்கள்.

    அந்த பொற்கிண்ணங்களில்தான் ஏகாந்த சேவையின்போது வெங்கடேசப் பெருமாளுக்கு பால் வழங்கப் பெறுகின்றது.

    மேலே கண்ட நித்திய சேவைகள் ஒவ்வொரு நாளும் நடை பெறும் சேவைகள் ஆகும்.

    ×