search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஓட்டுநர் போராட்டம்"

    • நாடு முழுக்க லாரி, டிரக், பேருந்து ஓட்டுநர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • தண்டனை காலத்தை பத்து ஆண்டுகளாக உயர்த்துவது தேவையற்ற ஒன்று.

    சாலை விபத்துக்களை ஏற்படுத்தி விட்டு தப்பி செல்லும் ஓட்டுநர்களுக்கு அதிகபட்சம் பத்து ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கும் வகையில், சட்டத்திருத்தம் செய்யப்பட்டது. புதிய சட்டம் நடைமுறைக்கு வந்த நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுக்க லாரி, டிரக், பேருந்து ஓட்டுநர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    ஓட்டுநர்கள் யாரும் திட்டமிட்டு விபத்தை ஏற்படுத்துவது இல்லை. இதற்காக மூன்று ஆண்டுகள் என்றிருந்த சிறை தண்டனை காலத்தை பத்து ஆண்டுகளாக உயர்த்துவது தேவையற்ற ஒன்று என கூறி ஓட்டுநர்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.

     


    புதிய தண்டனை சிட்டத்தில் உள்ள கடுமையான சிறை தண்டனை என்ற விதிக்கு எதிராக மகாராஷ்டிரா மாநிலத்தின் பல்வேறு இடங்களில் லாரி ஓட்டுநர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக அம்மாநிலத்தில் பெட்ரோல், டீசலுக்கான தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உருவானது.

    இந்த நிலையில், அகில இந்திய மோட்டார் போக்குவரத்து காங்கிரஸ் மற்றும் மத்திய அரசு இடையே நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு, புதிய குற்றவியல் சட்டத்திற்கு எதிரான லாரி ஓட்டுநர்கள் போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

     


    மேலும், அரசு மற்றும் அகில இந்தியா மோட்டார் போக்குவரத்து காங்கிரஸ் அனைத்து ஓட்டுநர்களையும் மீண்டும் பணிக்கு திரும்ப வேண்டுகோள் விடுத்துள்ளது. புதிய சட்ட விதிகள் இன்னும் நடைமுறைக்கு வரவில்லை, இது குறித்து ஏதேனும் குறைகள் இருந்தால் அவற்றை அரசாங்கம் திறந்த மனதுடன் பரிசீலனை செய்யும் என்று அரசு சார்பில் ஓட்டுநர்களிடம் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

    ×