search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சென்னை நீதிமன்றம்"

    • பெரும்பாக்கம் பகுதிகளில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் தாராளமாக கிடைக்கப்படுகிறது.
    • 180 போலீசார் பணியில் உள்ளனர் என காவல்துறை தரப்பு தெரிவித்துள்ளது.

    சென்னை பெரும்பாக்கம் பகுதியில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தருவது தொடர்பான வழக்கில், "தமிழகம் முழுவதும் போதைப்பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த, போதுமான எண்ணிக்கையில் போலீசார் நியமிக்கபடவில்லை" என்று சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.

    பெரும்பாக்கம் பகுதிகளில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் தாராளமாக கிடைக்கப்படுகிறது என மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழு அறிக்கை வெளியிட்டுள்ளது.

    அப்போது, போதைப் பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த போதைப் பொருள் கடத்தல் தடுப்பு நுண்ணறிவு பிரிவு உள்ளிட்ட பிரிவுகளில் 180 போலீசார் பணியில் உள்ளனர் என காவல்துறை தரப்பு தெரிவித்துள்ளது.

    இந்நிலையில், போதைப் பொருட்கள் தாராளமாக கிடைக்கக்கூடிய சூழலில் மாணவர்கள் எதிர்காலம் பாதிக்கும் அபாயம் உள்ளதாக நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

    காவல்துறையினரின் அறிக்கை திருப்திகரமாக இல்லை எனவும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

    • அமலாக்கத்துறை வழக்கின் விசாரணையை தள்ளிவைக்க கோரிய மேல் முறையீட்டு மனு.
    • சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் அறிவித்துள்ளது.

    சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில், வங்கி ஆவணங்களை வழங்க கோரி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு மீது வரும் ஜூலை 8ம் தேதிஉத்தரவு பிறப்பிக்கப்படும் என சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் அறிவித்துள்ளது.

    அமலாக்கத்துறை வழக்கின் விசாரணையை தள்ளிவைக்க கோரிய மேல் முறையீட்டு மனு மற்றும் வங்கி ஆவணங்களை கோரியும் செந்தில் பாலாஜி வழக்கு தொடர்ந்திருந்தார்.

    மேலும், அமலாக்கத்துறை வழக்கில் இருந்து விடுவிக்க கோரிய மனுவின் தீர்ப்பினை தள்ளி வைக்க கோரிய, வழக்கின் விசாரணையும் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

    • புழல் சிறையில் இருந்து காணொலி காட்சி மூலம் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆஜர்படுத்தப்பட்டார்.
    • செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை ஜனவரி 31 ஆம் தேதி வரை நீட்டித்து நீதிபதி கடந்த ஜனவரி 29ம் தேதி உத்தரவிட்டு இருந்தார்.

    சென்னை:

    கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14-ந்தேதி சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

    இதையடுத்து ஜாமின் வழங்கக் கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, புழல் சிறையில் இருந்து காணொலி காட்சி மூலம் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆஜர்படுத்தப்பட்டார்.

    இதையடுத்து, பிப்ரவரி 7-ந்தேதி வரை நீதிமன்ற காவலை நீட்டித்து சென்னை மாவட்ட 3-வது கூடுதல் அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    முன்னதாக செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை ஜனவரி 31 ஆம் தேதி வரை நீட்டித்து நீதிபதி கடந்த ஜனவரி 29ம் தேதி உத்தரவிட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • புழல் சிறையில் இருந்து காணொலி காட்சி மூலம் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆஜர்படுத்தப்பட்டார்.
    • செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை ஜனவரி 29ஆம் தேதி வரை நீட்டித்து நீதிபதி கடந்த ஜனவரி 22ம் தேதி உத்தரவிட்டு இருந்தார்.

    சென்னை:

    கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14-ந்தேதி சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

    இதையடுத்து ஜாமின் வழங்கக் கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, புழல் சிறையில் இருந்து காணொலி காட்சி மூலம் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆஜர்படுத்தப்பட்டார்.

    ஜனவரி 31வரை நீதிமன்ற காவலை நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி உத்தரவிட்டுள்ளார்.

    முன்னதாக செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை ஜனவரி 29ஆம் தேதி வரை நீட்டித்து நீதிபதி கடந்த ஜனவரி 22ம் தேதி உத்தரவிட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி ஜாமின் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக செந்தில் பாலாஜி தரப்பு வக்கீல் தெரிவித்தார்.
    • அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான வக்கீல் பதிலளிக்க அவகாசம் அளிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

    சென்னை:

    சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் அமலாக்கத்துறையால் அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14-ந்தேதி கைது செய்யப்பட்டார்.

    இந்த வழக்கில் செந்தில் பாலாஜிக்கு எதிராக ஆகஸ்ட் 12-ந்தேதி சென்னை மாவட்ட முதன்மை செசன்சு கோர்ட்டில் சுமார் 3 ஆயிரம் பக்கம் கொண்ட குற்றப்பத்திரிக்கையை அமலாக்கத்துறையினர் தாக்கல் செய்தனர்.

    இந்நிலையில், இந்த வழக்கில் ஜாமின் கோரி அமைச்சர் செந்தில் பாலாஜி ஏற்கனவே 2 முறை தாக்கல் செய்த மனுக்களையும் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

    இதை தொடர்ந்து ஜாமின் கேட்டு செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுவை சென்னை ஐகோர்ட்டும் தள்ளுபடி செய்தது. இதனால், உடல்நிலையை கருத்தில் கொண்டு ஜாமின் வழங்க கோரி சுப்ரீம் கோர்ட்டில் செந்தில் பாலாஜி மனு தாக்கல் செய்தார்.

    அந்த மனுவை சுப்ரீம் கோர்ட்டு ஏற்க மறுத்து விட்டது. அதேநேரம், செந்தில் பாலாஜி கீழ் கோர்ட்டை நாடலாம். அந்த மனு மீது தகுதியின் அடிப்படையில் முடிவெடுக்க வேண்டுமென உத்தரவிட்டிருந்தது.

    இந்நிலையில், செந்தில் பாலாஜி ஜாமின் கோரி 3-வது முறையாக சென்னை மாவட்ட முதன்மை செசன்சு கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

    இந்த மனு நீதிபதி எஸ்.அல்லி முன்பு விசாரணைக்கு வந்த போது, சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி ஜாமின் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக செந்தில் பாலாஜி தரப்பு வக்கீல் தெரிவித்தார்.

    அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான வக்கீல் பதிலளிக்க அவகாசம் அளிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். இதனையடுத்து, அமலாக்கத்துறை பதிலளிக்க அவகாசம் அளித்த நீதிபதி விசாரணையை 8-ந் தேதிக்கு தள்ளிவைத்தார்.

    ×