என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "மக்களவை தேர்தல்"
- ராகுல் சொன்னது போல பயத்தில் இருந்து விடுதலை பெற்றேன்.
- மன்னர் ஆட்சியின் அடையாளம்தான் செங்கோல்.
எம்.பி பதவி பறிக்கப்பட்ட பின் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி மஹூவா மொய்த்ரா மக்களவையில் இன்று பாஜகவுக்கு எதிராக அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்தார்.
மக்களவையில் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹூவா மொய்த்ரா கூறியதாவது:-
கடந்த வருடத்தில் பலர் என்னை பார்த்து மொய்த்ரா நீங்கள் நிறைய இழந்துவிட்டீர்கள் என்றனர். ஆம். நான் என்னுடைய பதவியை இழந்துவிட்டேன். வீட்டை இழந்துவிட்டேன். ஒரு அறுவை சிகிச்சையின்போது எனது கர்ப்பப்பையை இழந்துவிட்டேன்.
நான் எதை பெற்றேன் என தெரியுமா? ராகுல் சொன்னது போல பயத்தில் இருந்து விடுதலை பெற்றேன். உங்களை பார்த்து நான் பயப்பட மாட்டேன்.
இந்திய வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் | குடியரசுத் தலைவர் செங்கோலுடன் அழைத்து வரப்பட்டார். மன்னர் ஆட்சியின் அடையாளம்தான் செங்கோல். ஜனநாயக நாட்டிற்கு செங்கோல் எதற்கு?"
மக்களவை தேர்தல் பிரசாரத்தின்போது பிரதமர் மோடி, Musalman, Mulla, Madrasa, Mutton 2 M-ல் தொடங்கும் அனைத்து வார்த்தைகளையும் பயன்படுத்தினார். ஆனால், ஒரு வார்த்தையை மட்டும் அவர் பயன்படுத்தவில்லை. அது MANIPUR".
இவ்வாறு அவர் கூறினார்.
- பாஜக கடந்த முறை 23 இடங்களில் வெற்றி பெற்றது. தற்போது 9 இடங்களில்தான் வெற்றிபெற முடிந்தது.
- சரத் பவார் கட்சி 8 இடங்களில் வெற்றி பெற்றது. அஜித் பவார் கட்சி ஒரு இடத்தில் வெற்றி பெற்றது.
மக்களவை தேர்தலில் பாஜக கூட்டணி மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மாநிலங்களில் மகாராஷ்டிராவும் ஒன்று. 48 தொகுதிகளை கொண்ட இந்த மாநிலத்தில் 35-க்கும் மேற்பட்ட இடங்களை எதிர்பார்த்தது. ஆனால் காங்கிரஸ், உத்தவ் தாக்கரே கட்சி, சரத் பவார் கட்சி இணைந்து பாஜக கூட்டணி பலத்த அடி கொடுத்தது. 30 தொகுதிகளை வென்று அசத்தியது.
இந்த நிலையில் இன்று மூன்று கட்சிகள் சார்பில் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. அப்போது சரத் பவார் "அரசியல் சூழ்நிலையை மகா விகாஸ் அகாதிக்கு சாதகமாக்கிய பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்" என்றார்.
மோடி மற்றும் பாஜக 18 தொகுதிகளில் தீவிர தேர்தல் பிரசாரம் செய்த நிலையில் 15 தொகுதிகளில் தோல்வியடைந்தது. சரத் பவார் கட்சி 8 இடங்களில் வெற்றி பெற்ற நிலையில் அஜித் பவார் கட்சி ஒரு இடத்தில் மட்டுமே வெற்றி பெற்றது.
மக்களவை தேர்தலில் மகாராஷ்டிரா மாநிலத்தில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு (பாஜக, தேசியவாத காங்கிரஸ்- அஜித் பவார், சிவசேனா- ஏக்நாத் ஷிண்டே) மிகப்பெரிய அளவில் வெற்றி கிடைக்கவில்லை.
பாஜக 9 இடங்களிலும், அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி ஒரு இடத்திலும், ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா 7 இடங்களிலும் வெற்றி பெற்றது. இந்த கூட்டணிக்கு மொத்தம் 17 இடங்கள் மட்டுமே கிடைத்தன.
30 இடங்களில் மகா விகாஸ் அகாதி (காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ்- சரத்பவார், சிவசேனா-உத்தவ் தாக்கரே) வெற்றி பெற்றது. பிரிந்து சென்றவர்களுக்கு மக்கள் வாக்களிக்கவில்லை என இந்த கூட்டணி நம்புகிறது. மேலும், விரைவில் வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலிலும் இந்த வெற்றி நீடிக்கும் என எதிர்பார்க்கிறது.
சிவ சேனா (UBT) தலைவர் உத்தவ் தாக்கரே கூறுகையில் "மக்களவை தேர்தல் வெற்றி மகா விகாஷ் அகாதிக்கான முடிவு அல்ல. தொடக்கம்" என்றார்.
காங்கிரஸ் கட்சி தலைவர் சவான், "மக்களவை தேர்தல் முடிவுக்குப் பிறகு மகாராஷ்டிராவில் விரைவில் அரசு மாறும்" என்றார்.
கடந்த முறை 23 இடங்களில் வெற்றி பெற்ற பாஜக இந்த முறை 9 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது.
- மகா விகாஸ் அகாதிக்கான சாதகமான சூழ்நிலையை உருவாக்கிய பிரதமருக்கு நாங்கள் நன்றி- சரத் பவார்.
- மக்களவை தேர்தல் முடிவுக்குப் பிறகு மகாராஷ்டிராவில் விரைவில் அரசு மாறும்- காங்கிரஸ் தலைவர்.
மக்களவை தேர்தலில் மகாராஷ்டிரா மாநிலத்தில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு (பாஜக, தேசியவாத காங்கிரஸ்- அஜித் பவார், சிவசேனா- ஏக்நாத் ஷிண்டே) மிகப்பெரிய அளவில் வெற்றி கிடைக்கவில்லை.
பாஜக 9 இடங்களிலும், அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி ஒரு இடத்திலும், ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா 7 இடங்களிலும் வெற்றி பெற்றது. இந்த கூட்டணிக்கு மொத்தம் 17 இடங்கள் மட்டுமே கிடைத்தன.
30 இடங்களில் மகா விகாஸ் அகாதி (காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ்- சரத்பவார், சிவசேனா-உத்தவ் தாக்கரே) வெற்றி பெற்றது. பிரிந்து சென்றவர்களுக்கு மக்கள் வாக்களிக்கவில்லை என இந்த கூட்டணி நம்புகிறது. மேலும், விரைவில் வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலிலும் இந்த வெற்றி நீடிக்கும் என எதிர்பார்க்கிறது.
இந்த நிலையில் சிவ சேனா (UBT) தலைவர் உத்தவ் தாக்கரே கூறுகையில் "மக்களவை தேர்தல் வெற்றி மகா விகாஷ் அகாதிக்கான முடிவு அல்ல. தொடக்கம்" என்றார்.
காங்கிரஸ் கட்சி தலைவர் சவான், "மக்களவை தேர்தல் முடிவுக்குப் பிறகு மகாராஷ்டிராவில் விரைவில் அரசு மாறும்" என்றார்.
சரத் பவார் "மகா விகாஸ் அகாதிக்கான சாதகமான சூழ்நிலையை உருவாக்கிய பிரதமருக்கு நாங்கள் நன்றி தெரிவிக்கிறோம்" என்றார்.
மக்களவை தேர்தலில் காங்கிரஸ் 13 இடங்களிலும், சிவ சேனா (UBT) 9 இடங்களிலும், தேசியவாத காங்கிரஸ் (சரத்பவார்) 8 இடங்களிலும் வெற்றி பெற்றன.
உத்தவ் தாக்கரே கட்சி 21 இடங்களில் போட்டியிட்டது. காங்கிரஸ் 17 இடங்களில் போட்டியிட்டது. தேசியவாத காங்கிரஸ் கட்சி (சரத்பவார்) 10 இடங்களில் போட்டியிட்டது.
பாஜக போட்டியிட்டு 9 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது.
- மோடி நாளை பிரதமராக பதவி ஏற்க உள்ளார்.
- எம்.பி.க்கள் பதவி ஏற்பு மற்றும் சபாநாயகர் தேர்வு செய்ய மக்களவை கூட இருக்கிறது.
இந்திய மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை கடந்த ஜூன் 4-ந்தேதி நடைபெற்றது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 292 இடங்களில் வெற்றி பெற்றது. பாஜக தனித்து 240 இடங்களில் வெற்றி பெற்றது.
நேற்று நடைபெற்ற தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பி.க்கள் கூட்டத்தில் அக்கூட்டணியின் பாராளுமன்ற தலைவராக மோடி தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து நாளை இரவு 7.15 மணிக்கு 3-வது முறையாக பிரதமராக பதவி ஏற்க உள்ளார்.
பிரதமர் உடன் கேபினட் அமைச்சர்கள் பதவி ஏற்க வாய்ப்புள்ளது. அதனைத் தொடர்ந்து 18-வது மக்களவையின் சபாநாயகர் தேர்ந்தெடுக்கப்படுவார். அதற்கு முன்னதாக தற்காலிக சபாநாயகர் தேர்வு செய்யப்பட்டு அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.களுக்கு பதவி பிரமாணம் செய்து வைப்பார். எம்.பி.க்கள் பதவி ஏற்பு நிகழ்ச்சி இரண்டு நாட்கள் நடைபெற வாய்ப்புள்ளது.
அதன்பின் சபாநாயகர் தேர்ந்தெடுக்கப்படுவார். தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் நிறுத்தப்படும் எம்.பி. சபாநாயகராக தேர்வாக வாய்ப்புள்ளது. அதன்பின் ஜனாதிபதி இரண்டு அவைகளின் எம்.பி.க்கள் கூட்டத்தில் உரை நிகழ்த்தி அவையை தொடங்கி வைப்பார்.
இந்த நிலையில் 18-வது மக்களவையின் முதல் கூட்டம் வருகிற 15-ந்தேதி தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எம்.பி.க்கள் பதவி, சபாநாயகர் தேர்வு முடிவடைந்த உடன் மக்களவை ஒத்திவைக்கப்பட்டும். பின்னர் பட்ஜெட்டுக்கான கூட்டத் தொடர் நடைபெறும்.
தெலுங்குதேசம் கட்சியை சேர்ந்த ராம் மோகன், மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியை சேர்ந்த குமாரசாமி, உத்தர பிரதேச மாநிலம் அப்னா தளம் கட்சியை சேர்ந்த அனுபிரியா பட்டேல், ராஷ்டிரிய லோக் தளம் கட்சி தலைவர் ஜெய்ந்த சவுத்ரி, பீகார் மாநிலம் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் லாலன் சிங், லொக் ஜனசக்தி கட்சி தலைவர் சிராக் பஸ்வான், ஜித்தமன் ராம் மஞ்சி, சிவசேனாவின் பிரதாப்ராவ் ஜாதவ், ஷிராங் பர்னே ஆகுியோர் கேபினட் மந்திரிகளாக பதவி ஏற்க வாய்ப்புள்ளது.
- ஒருநாளைக்கு மூன்று முறை ஆடைகளை மாற்றியவர்கள்,
- தற்போது ஒரே ஆடையில் மூன்று நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்கள்.
சத்தீஸ்கர் மாநில முன்னாள் முதல்வரான காங்கிரஸ் கட்சி தலைவர் பூபேஷ் பாகல், இந்தியாவில் இன்னும் 6 மாதத்திற்குள் அல்லது ஒரு வருடத்திற்குள் மறுதேர்தல் நடைபெறும் என தான் கணிப்பதாக தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பூபேஷ் பாகல் கூறியதாவது:-
கட்சி தொண்டர்கள் தயாராக வேண்டும். இன்னும் ஆறு மாதங்களில் அல்லது ஒரு வருடத்திற்குள் மறுதேர்தல் வரப்போகிறது. யோகி ஆதித்யநாத்தின் நாற்காலி (உ.பி. முதல்வர் பதவி) ஆடிக்கொண்டிருக்கிறது. பாஜன் லால் சர்மா (ராஜஸ்தான் முதல்வர்) தள்ளாடுகிறார். பட்நாவிஸ் ராஜினாமா கூட செய்ய தயாராகிவிட்டார்.
ஒருநாளைக்கு மூன்று முறை ஆடைகளை மாற்றியவர்கள் (பிரதமர் மோடியை கிண்டல் செய்து) தற்போது ஒரே ஆடையில் மூன்று நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்கள். அவர்கள் சாப்பிடுவது, தண்ணீர் குடிப்பது அல்லது என்ன அணிவது என்பது குறித்து அவர்கள் கவலைப்படப்போவதில்லை.
கட்சிகளை உடைத்தவர்கள், தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர்களை சிறைக்கு தள்ளியவர்கள், மிரட்டியவர்களுக்கு மக்கள் நல்ல பாடம் கற்பித்துள்ளனர்.
இவ்வாறு பூபேஷ் பாகல் தெரிவித்துள்ளார்.
தேசிய ஜனநாயக கூட்டணியின் எம்.பி.க்கள் கூட்டத்தில் மோடி பாராளுமன்ற தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன்பின் ஜனாதிபதியை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். ஜனாதிபதியும் அழைப்பு விடுத்துள்ளார். இதனைத் தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை இரவு 7.15 மணிக்கு 3-வது முறையாக பிரதமராக பதவி ஏற்க இருக்கிறார்.
இதனைத் தொடர்ந்து பூபேஷ் பாகல் மேற்கண்டவாறு விமர்சனம் செய்துள்ளார்.
- தெலுங்கு தேசம் கட்சி எம்.பி. சந்திர சேகர் பெம்மசானி 5,705 கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் முதலிடத்தில் உள்ளார்.
- 2-வதாக பாஜக எம்.பி. விஷ்வேஷ்வர் ரெட்டி உள்ளார். இவரின் சொத்து மதிப்பு 4568 கோடி ரூபாய் ஆகும்.
பாராளுமன்ற தேர்தல் ஏழு கட்டங்களாக ஏப்ரல் 19-ந்தேதி முதல் ஜூன் 1-ந்தேதி வரை நடைபெற்றது. இதில் 8 ஆயிரத்த்திற்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் போட்டியிட்டனர். கடந்த ஜூன் 4-ந்தேதி வாக்குகள் எண்ணப்பட்டன.
பாஜக கூட்டணி 293 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. இந்தியா கூட்டணி 232 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. 542 பேர் தேர்தல் களத்தில் வெற்றி பெற்றுள்ளனர். சூரத்தில பாஜக வேட்பாளர் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
543 பேர் விரைவில் எம்.பி.யாக பதவி ஏற்க உள்ளனர். இந்த 543 எம்.பி.க்களில் 92 சதவீதம் பேர் அதாவது 504 எம்.பி.க்கள் கோடீஸ்வரர்கள் என தேர்தல் உரிமைகள் அமைப்பான ஜனநாயக சீர்திருத்த சங்கம் தெரிவித்துள்ளது.
5,705 கோடி ரூபாய்
இதில் தெலுங்கு தேசம் கட்சி எம்.பி. சந்திர சேகர் பெம்மசானி 5,705 கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் முதலிடத்தில் உள்ளார். இவர் ஆந்திர பிரதேச மாநலிம் குண்டூர் தொகுதியில் இருந்து எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
2-வதாக பாஜக எம்.பி. விஷ்வேஷ்வர் ரெட்டி உள்ளார். இவர் தெலுங்கானா மாநிலம் செவல்லா தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவரின் சொத்து மதிப்பு 4568 கோடி ரூபாய் ஆகும்.
3-வதாக பாஜக எம்.பி. நவீன் ஜிண்டால் உள்ளார். இவர் அரியானா மாநிலம் குருஷேத்ரா தொகுதியில் இருந்து எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவருடைய சொத்து மதிப்பு 1241 கோடி ரூபாய் ஆகும்.
2019-ம் ஆண்டு 475 எம்.பி.க்கள் தேர்ந்தெடுக்கும்போது கோடீஸ்வரர்களாக இருந்தனர். 2014-ல் 443 பேர் தேர்ந்தெடுக்குமபோது கோடீஸ்வரர்களாக இருந்தனர். 2009-ல் தேர்ந்தெடுக்கப்படும்போது 315 பேர் கோடீஸ்வரர்களாக இருந்தனர். இதன் மூலம் தேர்தலுக்கு தேர்தல் தேர்ந்தெடுக்கப்படும் கோடீஸ்வர எம்.பி.க்களின் எண்ணிக்கை அதிகரித்து வந்துள்ளது.
திமுக எம்.பி.க்கள் 21 பேர்
பாஜக கட்சியை சேர்ந்த 240 எம்.பி.க்களில் 227 பேர் கோடீஸ்வர எம்.பி.க்கள். காங்கிரஸ் கட்சியின் 99 எம்.பி.க்களில் 92 பேர் கோடீஸ்வரர்கள். திமுக-வின் 22 எம்.பி.க்களில் 21 பேர் கோடீஸ்வரர்கள். திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் 29 எம்.பி.க்களில் 27 பேர் கோடீஸ்வரர்கள்.
சமாஜ்வாதி கட்சியின் 37 எம்.பி.க்களில் 34 பேர் கோடீஸ்வரர்கள். வெற்றி பெற்ற ஆம் ஆத்மி (3), ஐக்கிய ஜனதா தளம், தெலுங்கு தேசம் (16) எம்.பி.க்கள் அனைவரும் கோடீஸ்வரர்கள்.
- 2024 தேர்தலில் அதிமுகவும், திமுகவும் இல்லாத அணியை பாட்டாளி மக்கள் கட்சி கட்டமைத்தது.
- தமிழ்நாட்டை 57 ஆண்டுகளாக இரு கட்சிகளும் மாறி, மாறி ஆட்சி செய்வதால் தமிழ்நாட்டிற்கு எந்த நன்மையும் கிடைக்கவில்லை.
பாராளுமன்ற தேர்தல் முடிவுகளை தொடர்ந்து, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், "2026ம் ஆண்டில் வெற்றி நமதே. மன உறுதியுடன் இலக்கை நோக்கி வீறுநடை போடுவோம். என் உயிரினும் மேலான பாட்டாளி சொந்தங்களே" என குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து அன்புமணி ராமதாஸ் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாட்டில் நடைபெற்று முடிந்த மக்களவைத் தேர்தல்களில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு வெற்றி சாத்தியமாகவில்லை.
வெற்றியை சுவைக்க முடியாதது எப்போதுமே வருத்தமளிக்கும் ஒன்று தான் என்றாலும், இதில் ஏமாற்றமோ, கவலையோ அடைவதற்கு எதுவுமில்லை.
இந்தத் தேர்தல் போரில் நாம் வெற்றியை இழந்திருக்கலாம். ஆனால், களத்தை இழக்கவில்லை. களம் இன்னும் நமக்கு சாதகமாகவே இருக்கிறது.
மக்களவைத் தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி போட்டியிட்ட தொகுதிகளிலும், கூட்டணிக் கட்சிகள் போட்டியிட்ட தொகுதிகளிலும் சளைக்காமல் களப்பணியாற்றிய உங்களுக்கு எனது நன்றிகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
உங்களின் உழைப்புக்கு ஈடு இணை இல்லை. உங்கள் உழைப்புக்கு இப்போது பயன் கிடைக்கவில்லை என்றாலும் இரு ஆண்டுகளில் நிச்சயம் பலன் கிடைக்கும்.
மக்களவைத் தேர்தல் முடிவுகளை வைத்துக் கொண்டு, இது இப்படி இருந்திருந்தால், அது அப்படி நடந்திருக்கும் என்பன போன்ற யூகங்கள் தேவையில்லை. காரணம்... இந்தத் தேர்தலுக்கு முன்பாகவே நமது இலக்கு மக்களவைத் தேர்தல் அல்ல.
2026 சட்டப்பேரவைத் தேர்தல் தான் என்பதை தெளிவு படுத்தியிருந்தோம். பாட்டாளி மக்கள் கட்சியின் அந்த நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை. 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் வலுவான அணியை கட்டமைத்து போட்டியிடுவதும், வெற்றி பெற்று ஆட்சி அமைப்பதும் தான் நமது இலக்கு. அந்த இலக்கை நோக்கித் தான் நான் வீறுநடை போட வேண்டும்.
2024 மக்களவைத் தேர்தல் முடிவுகள் ஒரு விஷயத்தை தெளிவாகக் காட்டுகின்றன. ஆளும் திமுக அதன் அதிகார வலிமை, பண வலிமை, படை வலிமை ஆகிய அனைத்தையும் பயன்படுத்தினாலும் கூட, அதன் வாக்கு வங்கி 2019 தேர்தலை விட கிட்டத்தட்ட 7 விழுக்காடு குறைந்திருக்கிறது. ஆண்ட கட்சியான அதிமுக கடந்த தேர்தலை விட மூன்றில் ஒரு பங்கு இடங்களில் கூடுதலாக போட்டியிட்டு இருந்தாலும் கூட, அந்தக் கட்சியால் 2019-ல் பெற்ற வாக்கு வங்கியை அதிகரிக்க முடியவில்லை.
இன்னும் கேட்டால் 2021 தேர்தலில் பெற்ற வாக்குகளை விட 13 விழுக்காடு குறைவாகவே பெற்றுள்ளது. இந்த இரு கட்சிகளும் இல்லாத ஆட்சி தமிழ்நாட்டில் அமைய வேண்டும் என்று தமிழ்நாட்டு மக்கள் விரும்புவதையே இந்தத் தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன.
இதை அனைவரும் உணர வேண்டும்; மக்களின் இந்த விருப்பத்தை நிறைவேற்ற உழைக்க வேண்டும். அதைத் தான் பா.ம.க. செய்யப்போகிறது.
தமிழ்நாட்டில் திமுக, அதிமுக அல்லாத ஆட்சி அமைய வேண்டும் என்ற மக்களின் எதிர்பார்ப்பு மிக நியாயமானது தான். தமிழ்நாட்டை 57 ஆண்டுகளாக இரு கட்சிகளும் மாறி, மாறி ஆட்சி செய்வதால் தமிழ்நாட்டிற்கு எந்த நன்மையும் கிடைக்கவில்லை. தமிழகத்தின் முதன்மைத் தொழில் வேளாண்மை தான் என்றாலும் கூட, அதன் வளர்ச்சிக்காக 57 ஆண்டுகளில் சொல்லிக் கொள்ளும்படியாக ஒரே ஒரு பாசனத் திட்டம் கூட செயல்படுத்தப்படவில்லை.
படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படவில்லை. பெண்கள் பாதுகாப்பாக வாழவோ, நடமாடவோ எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.
மாறாக, ராஜாஜி, உத்தமர் ஓமந்தூர் இராமசாமி ரெட்டியார் போன்றவர்களால் ஏற்படுத்தப்பட்டு, காமராசர், அண்ணா போன்றவர்களால் பாதுகாக்கப்பட்டு வந்த மதுவிலக்கு அதிமுக, திமுக ஆட்சிக்காலங்களில் தான் சிதைக்கப்பட்டது.
அதன் விளைவு பள்ளிக்குழந்தைகள் கூட மதுவுக்கு அடிமையாகியுள்ளனர். தமிழ்நாட்டின் அனைத்துத் தெருக்களிலும் மதுக்கடைகள் திறக்கப்பட்டுள்ளன. இவற்றையும் கடந்து கொள்கை வகுப்பதன் மூலம் அரசின் வருவாயைப் பெருக்க வேண்டிய அரசு, அதிக எண்ணிக்கையில் மதுக்கடைகளை திறப்பதன் மூலம், அதிக அளவில் மதுவை விற்பதன் மூலமும் வருவாய் ஈட்டி, அதைக் கொண்டு அடிப்படைச் செலவுகளை செய்ய வேண்டிய நிலைக்கு ஆளாகியுள்ளது. இது பேரவலமாகும்.
மதுவை விட பெரும் ஆபத்தாக கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் உருவெடுத்துள்ளன. அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்காத பகுதிகளில் கூட கஞ்சா தாராளமாகக் கிடைக்கிறது. பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் கூட கஞ்சா போதையில் ஆசிரியர்களைத் தாக்கு அவலம் நிலவுகிறது.
பெண்களுக்கு எதிரான குற்றங்கள், கொலைகள், கொள்ளைகள் ஆகியவை அதிகரிக்கவும் கஞ்சா போதையே காரணம்.
இன்னொருபுறம் ஆற்று மணல் உள்ளிட்ட தமிழ்நாட்டின் இயற்கை வளங்கள் அனைத்து ஆட்சியாளர்களால் கொள்ளையடிக்கப்படுகின்றன. நிர்வாகச் சீர்கேடுகளின் காரணமாக அனைத்துத் துறைகளிலும் அரசு தோல்வியடைந்து வருகிறது.
அரசு பள்ளிகளில் தரமானக் கல்வியையும், படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பையும் கூட அதிமுக, திமுக அரசுகளால் வழங்க முடியவில்லை. திமுகவுக்கு ஆதரவாக குன்று போல நின்று ஆதரவளித்து வந்த அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் இப்போது வெறுப்பு மற்றும் விரக்தியின் உச்சத்தில் உள்ளனர்.
அவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஓய்வூதியம் உள்ளிட்ட ஏராளமான உரிமைகளை திமுக, அதிமுக அரசுகள் பறித்து விட்டன. அதற்கு பழிவாங்க அவர்களும் காத்திருக்கின்றனர்.
திமுக, அதிமுக ஆகிய கட்சிகளின் ஆட்சிகளால் தமிழ்நாடு எதிர்கொண்ட அனைத்துச் சீரழிவுகளையும் சரி செய்வதற்கான அருமருந்து பாட்டாளி மக்கள் கட்சியிடம் தான் உள்ளது.
தமிழ்நாட்டை பாதிக்கும் எந்த பிரச்சினையாக இருந்தாலும் அதற்கான முதல் குரல் பாட்டாளி மக்கள் கட்சியிடமிருந்து தான் ஒலிக்கும். மதுவிலக்கில் தொடங்கி நீர்மேலாண்மை, கல்வி, வேலைவாய்ப்பு உள்பட அண்மையில் மக்கள் விழிப்புணர்வு பெற்ற காலநிலை மாற்றம் வரை அனைத்து சிக்கல்களிலும் பாட்டாளி மக்கள் கட்சி என்ன சொல்கிறதோ, அதையே மற்ற அனைத்துக் கட்சிகளும் சொல்கின்றன.
அந்த அளவுக்கு தமிழக நலனையும், மக்கள் நலனையும் காப்பதில் பாட்டாளி மக்கள் கட்சி முன்னோடியாக செயல்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான தகுதி பாட்டாளி மக்கள் கட்சிக்கு உள்ளது.
இதையெல்லாம் உணர்ந்து தான் 2026-ம் ஆண்டில் தமிழ்நாட்டில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்று முடிவு செய்து, அதற்கு ஏற்ற வகையில் 2024 தேர்தலில் அதிமுகவும், திமுகவும் இல்லாத அணியை பாட்டாளி மக்கள் கட்சி கட்டமைத்தது.
தமிழ்நாட்டையும், தமிழ்நாட்டு மக்களையும் காக்க வேண்டிய கடமையும், பொறுப்பும் பாட்டாளி மக்கள் கட்சிக்கு உள்ளது. தமிழ்நாட்டு மக்களின் விருப்பமும் திமுக, அதிமுக அல்லாத ஆட்சி என்பதாகவே உள்ளது.
இத்தகைய சூழலில் மக்களின் விருப்பத்தை நிறைவேற்ற முயலாமல் இருப்பது கடமை தவறிய செயலாக அமைந்து விடும். அந்தத் தவறை பா.ம.க. செய்யாது.
தமிழ்நாட்டு அரசியலில் பாட்டாளி மக்கள் கட்சி பல சரிவுகளை சந்தித்தாலும், அவற்றிலிருந்து மீண்டு வந்திருக்கிறது. இப்போதும் அதேபோல் மீண்டு வருவோம். அதில் உங்களுக்கு எந்த ஐயமும், கவலையும் தேவையில்லை.
2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்கான களம் நமக்கு சாதகமாக இருக்கிறது; மக்கள் நம்மை வரவேற்கத் தயாராக இருக்கிறார்கள். நானும் முதல் ஆளாக இருந்து உங்களை வழிநடத்துவதற்கு காத்திருக்கிறேன். 2026 தேர்தல் வெற்றி என்ற இலக்கை நோக்கி வீறுநடை போடுவோம் சொந்தங்களே.
இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
- தமிழகம் மற்றும் புதுச்சேரியில் திமுக கூட்டணி 40 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது.
- டெல்லியில் பா.ஜனதா தனித்து போட்டியிட்டது. ஏழு தொகுதிகளையும் மொத்தமாக கைப்பற்றியுள்ளது.
மக்களை தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்றது. இந்த தேர்தலில் பாஜக கூட்டணி அமோக வெற்றி பெறும் என கருத்து கணிப்புகள் தெரிவித்தன.
ஆனால் காங்கிரஸ் கட்சி தலைமையிலான இந்தியா கூட்டணி எதிர்பாராத வகையில் பாஜக கூட்டணிக்கு கடும் நெருக்கடி கொடுத்தது. இதனால் பாஜக-வால் தனி மெஜாரிட்டி பெறமுடியவில்லை. கூட்டணி கட்சிகளுடன் சேர்ந்து 290 தொகுதிகளை பிடித்துள்ளது.
இந்தி பெல்ட் என கருதப்படும் மாநிலங்களிலும் பாஜக-வுக்கு கடும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக உத்தர பிரதேசத்தில் பாதிக்கும் மேற்பட்ட இடங்களை இழந்துள்ளது.
இந்த தேர்தலில் சில மாநிலங்களில் கட்சி அல்லது கூட்டணி முழுமையான அனைத்து இடங்களையும் கைப்பற்றியுள்ளன.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் திமுக தலைமையிலான கூட்டணி 40 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது.
டெல்லியில் பா.ஜனதா தனித்து போட்டியிட்டது. ஏழு தொகுதிகளையும் மொத்தமாக கைப்பற்றியுள்ளது.
மத்திய பிரதேசம் மாநிலத்தில் பாஜக 29 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்டது. 29 தொகுதிகளிலும் பாஜக வெற்றி வாகை சூடியது.
இமாச்சல பிரதேச மாநிலத்தில் 4 தொகுகளில் தனித்து போட்டியிட்டது. 4 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளது.
உத்தரகாண்ட் மாநிலத்தில் பாஜக 5 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்டது. ஐந்து தொகுதிளிலும் வெற்றி பெற்றுள்ளது.
- உமர் அப்துல்லாவை எதிர்த்து சுயேட்சை வேட்பாளர் வெற்றி பெற உள்ளார்.
- மகாராஷ்டிரா மாநிலத்தில் காங்கிரஸ் போட்டி சுயேட்சை வேட்பாளர் வெற்றி பெற உள்ளார்.
இந்திய பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு 542 தொகுதிகளுக்கு நடைபெற்றது. இதில் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் எந்த கட்சியையும் சாராமல் சுயேட்சையாக களம் இறங்கினர். இதில் ஆறு வேட்பாளர்கள் மட்டுமே வெற்றியை ருசிக்க இருக்கிறார்கள்.
பஞ்சாப் மாநிலம் ஃபரித்காட் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக களம் இறங்கியவர் சரப்ஜீத் சிங் கல்சா. இவர் இந்திரா காந்தியை படுகொலை செய்த பியாந்த் சிங்கின் மகன் ஆவார். இவர் ஆம் ஆத்மி வேட்பாளர் கரம்ஜித் சிங் அன்மோலை எதிர்த்து வெற்றி பெற இருக்கிறார். இவர் ஏற்கனவே 2014 மற்றும் 2019-ல் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.
இதே மாநிலத்தில் உள்ள கதூர் சாஹிப் தொகுதியில் அம்ரித்பால் சிங் காங்கிரஸ் வேட்பாளரை சிங் ஜிராவை எதிர்த்து வெற்றிபெற இருக்கிறார்.
மகாராஷ்டிரா மாநிலம் சங்கிலி தொகுதியில் விஷால் பிரகாஷ்பாபு பாட்டில் வெற்றி பெற உள்ளார். காங்கிரஸ் கட்சி கூட்டணியில் சிவசேனாவுக்கு இந்த தொகுதி கொடுக்கப்பட்டதால் காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறி சுயேட்சையாக போட்டியிட்டார். இவர் மகாராஷ்டிரா மாநில முன்னாள் முதல்வர் வசந்த்தாதா பாட்டில் மகன் ஆவார்.
காஷ்மீர் லடாக் தொகுதியில் தேசிய மாநாடு கட்சியில் இருந்து விலகி சுயேட்சையாக போட்டியிட்ட முகமது ஹனீபா ஜான் வெற்றி பெறும் நிலையில் உள்ளார்.
டாமன்&டையூ தொகுதியில் பட்டேல் உமேஷ் பாய் பாபுபாய் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெறும் நிலையில் உள்ளார்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் தேசிய மாநாடு கட்சி தலைவர் உமர் அப்துல்லாவை எதிர்த்து அப்துல் ரஷித் ஷெய்க் வெற்றி பெறும் தருவாயில் உள்ளார்.
2019-ல் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் போட்டியிட்ட நிலையில் நான்கு சுயேட்சை வேட்பாளர்கள் மட்டுமே வெற்றி பெற்றுள்ளனர்.
1951-52-ல் முதன்முறையாக நடைபெற்ற தேர்தலில் 37 சுயேட்சை வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். 1957-ல் 42 சுயேட்சை வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். 1962-ல் 20 பேரும், 1984-ல் 13 பேரும் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றனர்.
- பா.ஜனதா ஆட்சி அமைப்பதற்கான தனி மெஜாரிட்டியை இழக்கும் நிலையில் உள்ளது.
- பா.ஜனாதா கூட்டணியில் உள்ள சந்திரபாபு நாயுடு, நிதிஷ் குமாரை இழுக்க இந்தியா கூட்டணி முடிவு.
மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. பாஜக கூட்டணி தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெறும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு கூறிய நிலையில், கருத்துக் கணிப்பை மீறி இந்தியா கூட்டணி 230 தொகுதிகளுக்கு மேலான இடங்களில் முன்னிலை பெற்று வருகிறது.
பாஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 293 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. இந்தியா கூட்டணி 233 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. மற்றவை 17 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.
தேர்தல் வாக்கு எண்ணிக்கை முழுவதுமாக முடிவடையும்போது சுமார் 240 இடங்களை தாண்டினால் இந்தியா கூட்டணி ஆட்சி அமைக்க முயற்சி செய்யும் என எதிர்பார்க்கப்படும். இதற்கு முக்கிய காரணம் பா.ஜனதாவுக்கு ஆட்சி அமைப்பதற்கான தனி மெஜாரிட்டி (272) கிடைக்கவில்லை.
பாஜக கூட்டணியில் உள்ள சந்திரபாபு நாயுடு (16), நிதிஷ் குமார் (14) ஆகியோரிடம் 30 இடங்கள் உள்ளது. இந்த 30 இடங்களை பாஜகவிடம் இருந்து இழுத்துவிட்டால் பாஜனதாவுக்கு சிக்கலை ஏற்படுத்தும்.
இந்த கணக்கை மனதில் வைத்து இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் காய் நகர்த்தி வருகின்றனர். ஆந்திராவில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்குதேசம் கட்சி ஆட்சி அமைப்பதற்கான தனி மெஜாரிட்டியை பிடித்துள்ளது.
இந்த நிலையில் சந்திரபாபு நாயுடுவிடம் இந்தியா கூட்டணி கட்சியில் உள்ள சரத் பவார் டெலிபோன் மூலம் பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல் நிதிஷ் குமாரிடமும் பேசியதாகவும் கூறப்படுகிறது. அப்போது துணை பிரதமர் பதவி தர தயாராக இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதனால் இந்தியா கூட்டணி தலைவர்கள் நிதிஷ் குமார் மற்றும் சந்திரபாபு நாயுடுவை இழுக்க தொடர்ந்து முயற்சி மேற்கொள்வார்கள் எனத் தெரிகிறது.
- 2019 தேர்தலில் பாஜக 303 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெருங்கட்சியாக திகழ்ந்தது.
- இந்த முறை 238 தொகுதிகளில் மட்டுமே முன்னிலை பெற்று வருகிறது.
மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பில் பாஜக கூட்டணி 350 தொகுதிளுக்கு மேல் பிடிக்கும் என கணிக்கப்பட்டது.
ஆனால், வாக்கு எண்ணிக்கை தொடங்கிய நிலையில் பாஜக-வுக்கு உத்தர பிரதேசம், ராஜஸ்தான், மகாராஷ்டிரா, பீகார் மாநிலங்களில் பலத்த அடி விழுந்துள்ளது.
இதனால் மத்தியம் 2 மணி நிலவரப்படி பாஜக கூட்டணி 295 இடங்களில் முன்னணியில் உள்ளது. இப்படியே கடைசி சுற்று வரை சென்றால் பா.ஜனதா கூட்டணி ஆட்சி அமைக்கும் வாய்ப்பு உள்ளது.
கடந்த முறை பாஜக 303 தொகுதியில் தனித்து வெற்றி பெற்றிருந்தது. தற்போது 241 தொகுகளில்தான் முன்னணி பெற்றுள்ளது. இது பாஜக-வுக்கு மிகப்பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது. தெலுங்கு தேசம் (16), ஐக்கிய ஜனதா தளம் (14) ஆகியவை பா.ஜனதா ஆட்சி அமைக்க ஆதரவு கொடுத்தாக வேண்டும் என்ற நிலையில் உள்ளது.
அதேவேளையில் கடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி 44 இடங்களில்தான் வெற்றி பெற்றிருந்தது. இந்த முறை 50 இடங்களை கூட தாண்டாது என பாஜக தலைவர்கள் தொடர்ந்து கூறி வந்தனர்.
ஆனால் காங்கிரஸ் 99 இடங்களில் தற்போது முன்னிலை வகிக்கிறது. கடந்த முறையை விட தற்போது இரண்டு மடங்கு இடங்களில் வெற்றி பெறும் சூழ்நில உருவாகியுள்ளது.
- நடந்து முடிந்த தேர்தலின் நம்பகத்தன்மை குறித்து பல கேள்விகள் எழுகின்றன.
- தேர்தல் முடிவுகள் அறிவிப்பதில் ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால் உடனடியாக தலையிட தயாராக இருக்க வேண்டும்.
சென்னை உயர்நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபகள் (ஜி.எம். அக்பர் அலி, அருணா ஜெகதீசன், டி.ஹரிபரிந்தாமன், பி.ஆரம். சிவகுமார், சி.டி. செல்வம், எஸ். விமலா) ஆறு பேர், பாட்னா உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி அஞ்சனா பிரகாஷ் என ஏழு முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஜனாதிபதி திரவுபதி முர்மு மற்றும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் ஆகியோருக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
அந்த கடிதத்தில் அவர்கள் கூறியிருப்பதாவது:-
எந்த கூட்டணிக்கும் மெஜாரிட்டி கிடைக்காமல் தொங்கு பாராளுமன்றம் அமைந்தால், ஜனாதிபதியின் தோள்களில் கடுமையான சுமைகள் சுமத்தப்படும். தொங்கு பாராளுமன்றம் அமைந்தால் அது குதிரை பேரத்திற்கு வழிவகுக்கும். தேர்தலுக்கு முன் அமைக்கப்பட்டிருந்த எந்த கூட்டணி அதிக இடங்களை பிடிக்கிறதோ, அந்த கூட்டணியை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும். இது குதிரை பேரம் நடப்பதை தடுக்கும். இதை ஜனதிபதி செய்வார் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.
கடந்த வாரங்களில் நடைபெற்ற பல சம்பவங்கள் பல விசயங்களை உருவாக்கியுள்ளன. அதன் காரணமாக தேர்தல் முடிவுகள் போது வன்முறையில் முடியலாம். இவை பெரும்பான்மையான நம் மக்களின் மனதில் உள்ள உண்மையான அச்சங்கள். புகழ்பெற்ற நபர்கள், மனித உரிமை அமைப்புகள் மற்றும் ஆர்வலர்களும் இதே அச்சத்தை எதிரொலித்துள்ளனர்
ஆளுங்கட்சி தலைவர்கள் சிறுபான்மையினர் மற்றும் எதிர்கட்கட்சி தலைவருக்கு எதிராக வெறுப்பு பேச்சுகளை பேசிய போதிலும், தேர்தல் கமிஷன் குறிப்பிடத்தகுந்த நடவடிக்கை எடுக்கவில்லை. இது மிகப்பெரிய கவலை அளிக்கிறது.
அரசியலமைப்பு மற்றும் ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்கான இறுதி அதிகாரம் படைத்தது உச்சநீதிமன்றம். எந்தவொரு சாத்தியமான பேரழிவைத் தடுக்க அல்லது முடிவுகளை எண்ணும் மற்றும் அறிவிக்கும்போது எழக்கூடிய ஏதேனும் பயங்கரமான சூழ்நிலைகளைத் தடுக்க முனைப்புடன் நடவடிக்கை எடுக்க தயாராக இருக்க வேண்டும்.
இறையாண்மை கொண்ட, சோசலிச, மதச்சார்பற்ற, ஜனநாயகக் குடியரசின் குடிமக்களாகிய இந்திய மக்களாகிய நாங்கள், தற்போது நடைபெற்று வரும் கோடை விடுமுறையின் போதும், உச்ச நீதிமன்றத்தின் முதல் ஐந்து மதிப்புமிக்க நீதிபதிகளின் வருகையையும், வருகையையும் உறுதி செய்யுமாறு உச்ச நீதிமன்றத்தை இதன் மூலம் கேட்டுக்கொள்கிறோம். தற்போதைய சூழ்நிலையில் எழக்கூடிய அரசியலமைப்பு நெருக்கடி ஏற்பட்டால் பதிலளிக்க தயாராக இருக்க வேண்டும்
இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்