என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "குரியுரிமை சட்டம்"
- தற்போது 8 வருடங்கள் வசித்தவர்கள்தான் குடியுரிமைக்கு விண்ணப்பிக்க முடியும்
- நம் நாட்டு சட்டங்களை மதித்தவர்கள் இனி நம் நாட்டினர் என்றார் ஓலாப்
ஜெர்மன் பாராளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டுள்ள புதிய மசோதா, அந்நாட்டில் நீண்ட காலமாக வசித்து வருபவர்கள் குடியுரிமை பெறுவதில் நிலவி வந்த சிக்கல்களை குறைக்கும் விதமாக அமைந்துள்ளது.
நேற்று, ஜெர்மன் பிரதமர் ஓலாப் ஸ்கோல்ஸ் (Olaf Scholz) கொண்டு வந்திருக்கும் இந்த மசோதா, 382-234 எனும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. உறுப்பினர்களில் 23 பேர் வாக்களிக்கவில்லை.
தற்போது ஜெர்மனியில் 8 வருடங்கள் வசித்தவர்கள்தான் குடியுரிமைக்காக விண்ணப்பிக்க முடியும்.
இந்த மசோதா சட்டமானால், ஜெர்மனியில் 5 வருட காலங்கள் வசித்தவர்கள் குடியுரிமை கோரி விண்ணப்பிக்கலாம்.
மேலும், இரட்டை குடியுரிமை இனி அனுமதிக்கப்படும். ஜெர்மனியில் தற்போது வரை இரட்டை குடியுரிமை தடை செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
வரவிருக்கும் புதிய சட்டம் குறித்து அதிபர் ஓலாப் ஸ்கோல்ஸ், "பல தலைமுறைகளாக ஜெர்மனியில் வசித்து, நாட்டின் முன்னேற்றத்திற்கு பாடுபட்டவர்களுக்கு உதவ இந்த புதிய குடியுரிமை சட்டம் பயனளிக்கும். பல தசாப்தங்களாக எங்கள் நாட்டு சட்டதிட்டங்களை மதித்து நடந்த பல அயல்நாட்டினர்கள், இனி நம் நாட்டினர்கள்" என தெரிவித்தார்.
அந்நாட்டு ஜனாதிபதி பிராங்க்-வால்டர் ஸ்டெய்ன்மெய்ர் (Frank-Walter Steinmeier) இம்மசோதாவில் கையெழுத்திட்டதும், இது சட்டமாகி விடும்.
அயல்நாட்டினர் குடியுரிமை பெற ஜெர்மன் முன்னோர்களின் வம்சமாக தங்களை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் தற்போது வரை அங்கு இருந்து வந்தது.
எதிர்கட்சிகளை சேர்ந்த உறுப்பினர்கள், இச்சட்டம், ஜெர்மன் குடியுரிமையை மலிவாக்கி விடும் என கூறி எதிர்த்தனர்.