search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாதுகாப்பு அதிகரிப்பு"

    • முக்கிய வழிபாட்டு தலங்களில் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
    • மதவழி பாட்டு தலங்கள் மற்றும் முக்கிய சந்திப்புகளில் போலீசார் ரோந்து அணிவகுப்பில் ஈடுபட்டனர்.

    மும்பை:

    மகாராஷ்டிர மாநிலம் மும்பைக்கு பயங்கரவாதிகள் அச்சுறுத்தல் விடுத்துள்ளதாக மத்திய ஏஜென்சிகள் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    இதனால் மும்பையில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

    முக்கிய வழிபாட்டு தலங்களிலும் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மார்க்கெட் பகுதிகளிலும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். மதவழி பாட்டு தலங்கள் மற்றும் முக்கிய சந்திப்புகளில் போலீசார் ரோந்து அணிவகுப்பில் ஈடுபட்டனர்.

    இதேபோல் ரெயில் நிலையங்களிலும் போலீசார் கண்காணிப்பை அதிகரித்துள்ளனர். பயணிகளின் உடமைகளை மெட்டல் டிடெக்டர் கருவிகள் மற்றும் மோப்பநாய் உதவியுடன் சோதனை நடத்திய பின்னரே பயணிகளை ரெயில் நிலையத்துக்குள் அனுமதித்தனர். பஸ் நிலையங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

    மும்பையில் உள்ள அந்தந்த மண்டலங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகளில் சிறப்பு கவனம் செலுத்துமாறு துணை போலீஸ் கமிஷனர்கள் போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளனர்.

    2 பிரபலமான வழிபாட்டு தலங்கள் உள்ள குரோபோர்ட் பகுதியில் போலீசார் நேற்று அணிவகுப்பு ஊர்வலமாக சென்றனர்.

    முக்கிய சந்திப்புகளில் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருவதையும், அணிவகுப்பு மற்றும் ரோந்து கண்காணிப்பையும் பார்வையிட்ட மும்பை பொதுமக்கள் பதட்டமான சூழ்நிலையில் உள்ளனர்.

    இந்நிலையில் பயங்கரவாதிகள் அச்சுறுத்தல் எதுவும் இல்லை. இது பண்டிகை காலத்தையொட்டி நடத்தப்படும் பாதுகாப்பு ஒத்திகை என போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

    இந்த மாதம் 10 நாள் விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாடிய மும்பை இப்போது துர்கா பூஜை, தசரா மற்றும் தீபாவளிக்கு தயாராகி வருகிறது. நவம்பர் மாதம் மகாராஷ்டிரா மாநில சட்டசபைக்கும் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் பயங்கரவாத அச்சுறுத்தல் மும்பையில் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • நேற்று இரவில் இருந்தே கமிஷனர் அலுவலக கதவுகள் பூட்டப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.
    • உரிய பாஸ் இல்லாமல் பொதுமக்கள் சிலர் கமிஷனர் அலுவலக மாடிகளில் சுற்றுவதாக புகார் எழுந்தது.

    சென்னை:

    சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலக கதவுகள் இன்று காலையில் மூடப்பட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. போலீஸ் அதிகாரிகளின் கார்கள் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்பட்டன.

    போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் பதிவு செய்திருந்த வழக்கு ஒன்றில் சட்டவிரோத பண பரிமாற்றம் நடைபெற்றிருப்பதாகவும் அது தொடர்பான குற்றச்சாட்டின் பேரில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்த வர இருப்பதாகவும் பரபரப்பான தகவல்கள் பரவியது. இதன் காரணமாகவே கமிஷனர் அலுவலக கதவுகள் பூட்டப்பட்டிருப்பதாகவும் அங்கு பணிபுரியும் காவலர்கள் சிலர் தெரிவித்தனர். நேற்று இரவில் இருந்தே கமிஷனர் அலுவலக கதவுகள் பூட்டப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.

    இந்த நிலையில் இன்று காலை 10 மணிக்கு பிறகு வழக்கம் போல அனைத்து கதவுகளும் திறக்கப்பட்டிருந்தன. இது தொடர்பாக கமிஷனர் அலுவலகத்தில் பணியாற்றி வரும் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது அமலாக்கத்துறையினர் கமிஷனர் அலுவலகத்துக்கு ஏன் வரப் போகிறார்கள்? யாரோ கிளப்பிவிட்ட வதந்தி என்றார். கமிஷனர் அலுவலகத்தின் கதவுகள் பாதுகாப்பு காரணங்களுக்காகவே மூடப்பட்டிருந்தன என்றும் அவர் விளக்கம் அளித்தார்.

    உரிய பாஸ் இல்லாமல் பொதுமக்கள் சிலர் கமிஷனர் அலுவலக மாடிகளில் சுற்றுவதாக புகார் எழுந்தது. இதனால் பாதுகாப்பு ஏற்பாடுகளை முறைப்படுத்தவே இதுபோன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன என்றும் அவர் தெரிவித்தார்.

    ×