search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வரி பகிர்வு"

    • மாநிலங்களுக்கு ஜூன் மாதத்துக்கான வரி பகிர்வாக ரூ.1 லட்சத்து 39 ஆயிரத்து 750 கோடி ஒதுக்கீடு செய்து உத்தரவிடப்படுகிறது.
    • அதிக அளவாக உத்தரபிரதேச மாநிலத்துக்கு 25 ஆயிரத்து 69 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

    புதுடெல்லி:

    நாட்டில் வசூலாகும் வரி தொகையை மத்திய அரசு, மாநிலங்களுக்கு பகிர்ந்து அளித்து வருகிறது. அதன்படி ஜூன் மாதத்துக்கான வரி பகிர்வாக ரூ.1 லட்சத்து 39 ஆயிரத்து 750 கோடியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.

    மத்தியில் ஆட்சி அமைத்த முதல் நாளிலேயே மாநிலங்களுக்கான நிதியை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    மாநிலங்களுக்கு ஜூன் மாதத்துக்கான வரி பகிர்வாக ரூ.1 லட்சத்து 39 ஆயிரத்து 750 கோடி ஒதுக்கீடு செய்து உத்தரவிடப்படுகிறது.

    அதன்படி தமிழகத்துக்கு ரூ.5,700 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. ஆந்திராவுக்கு ரூ.5,655 கோடியும், அருணாசல பிரதேசத்துக்கு ரூ.2,455 கோடியும், அசாமுக்கு ரூ.4,371 கோடியும் நிதி பகிர்வு அளிக்கப்படுகிறது.

    அதிக அளவாக உத்தரபிரதேச மாநிலத்துக்கு 25 ஆயிரத்து 69 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. அதற்கு அடுத்ததாக பீகாருக்கு 14 ஆயிரத்து 56 கோடியும், மத்திய பிரதேசத்துக்கு ரூ.10 ஆயிரத்து 970 கோடியும், மேற்கு வங்காளத்துக்கு ரூ.10 ஆயிரத்து 513 கோடியும், மகாராஷ்டிராவுக்கு ரூ.8 ஆயிரத்து 828 கோடியும் நிதி பகிர்வு வழங்க உத்தரவிடப்பட்டு உள்ளது.

    இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    • வரிப் பகிர்வு பங்கு குறைந்துள்ளது. இது கர்நாடக மாநிலத்திற்கு மிகப்பெரிய சவாலாக அமைந்துள்ளது.
    • கர்நாடகா கடந்த 4 வருடங்களில் 45 ஆயிரம் கோடி ரூபாயை இழந்துள்ளது.

    கர்நாடக மாநிலத்திற்கான வரிப் பகிர்வை மத்திய அரசு குறைத்துவிட்டது. அது கர்நாடகாவிற்கு இழைக்கப்பட்ட அநீதி என அம்மாநில முதல்வர் சித்தராமையா குற்றஞ்சாட்டியுள்ளார்.

    கர்நாடக மாநில மக்கள் செலுத்தும் வரிப்பணம், மாநிலத்தினுடைய இக்கட்டான நிலையின்போது பயன்படவில்லை. அந்த பணம் எல்லாம் வடக்கு மாநிலத்திற்கு செல்கின்றன.

    15-வது நிதிக் கமிஷனுக்குப் பிறகு வரிப் பகிர்வு பங்கு குறைந்துள்ளது. இது கர்நாடக மாநிலத்திற்கு மிகப்பெரிய சவாலாக அமைந்துள்ளது. இதன்மூலம் கடந்த 4 வருடங்களில் 45 ஆயிரம் கோடி ரூபாயை இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த அநீதியை தாங்க முடியாது. நம்முடைய மாநிலத்தின் நலத்தை பாதுகாக்க, நியாயமான முறையில் நடத்த நாம் ஒன்றாக இணைந்து வலியுறுத்த வேண்டும் எனத் தெரிவித்துள்ள அவர் "SouthTaxMovement" ஹேஷ்டேக்கை பதிவிட்டுள்ளார்.

    கர்நாடக மாநில காங்கிரஸ் சட்டமன்ற பிரதிநிதிகள் மற்றும் பாராளுமன்ற பிரதிநிதிகள் பிப்ரவரி 7-ந்தேதி (நாளைமறுநாள்) டெல்லியில் போராட்டம் நடத்துகிறார்கள். மத்திய அரசு கர்நாடக மாநிலத்திற்கு அநீதி இழைக்கப்படுவதற்கு எதிராக இந்த போராட்ம் நடத்தப்படுகிறது. இதில் சித்தராமையா கலந்து கொள்ள இருக்கிறார்.

    தெற்கு மாநிலங்களின் வரிப்பணம் வடக்கு மாநிலங்களுக்கு சென்றடைகிறது. இதனால் ஒருபோதும் நமக்கு முன்மாதிரியாக இருக்க முடியாது. இந்த தவறான எண்ணத்தை அனைவரும் கைவிட வேண்டும். கடின உழைப்பால் வலுவான தேசத்தை உருவாக்கி வரும் கர்நாடகா இந்தியாவுக்கே முன்மாதிரியாக உள்ளது.

    ×