என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "500 விக்கெட்"
- அஸ்வின் 98 டெஸ்டில் விளையாடி 501 விக்கெட் வீழ்த்தி உள்ளார்.
- 34 தடவை 5 விக்கெட்டுக்கு மேலும் (இன்னிங்ஸ்), 8 தடவை 10 விக்கெட்டுக்கு மேலும் கைப்பற்றி உள்ளார்.
சென்னை:
சென்னை:
இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீரர் ஆர்.அஸ்வின். சென்னையைச் சேர்ந்த அவர் இங்கிலாந்துக்கு எதிராக ராஜ்கோட்டில் நடந்த 3-வது டெஸ்டின் முதல் இன்னிங்சில் 2-வது நாள் ஆட்டத்தில் கிராவ்லி விக்கெட்டை வீழ்த்தினார். இதன்மூலம் அஸ்வின் 500 விக்கெட் கைப்பற்றிய சாதனையை படைத்தார்.
37 வயதான அஸ்வின் 98 டெஸ்டில் விளையாடி 501 விக்கெட் வீழ்த்தி உள்ளார். 34 தடவை 5 விக்கெட்டுக்கு மேலும் (இன்னிங்ஸ்), 8 தடவை 10 விக்கெட்டுக்கு மேலும் கைப்பற்றி உள்ளார்.
இந்நிலையில், 500-க்கும், 501-வது விக்கெட்டுக்கும் இடையே அஸ்வினுக்கு நிறைய நடந்துவிட்டது என்று அவரது மனைவி பிரீத்தி தனது இன்ஸ்டாகிராம் பதிவில் உருக்கமாக தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது:
ஐதராபாத்தில் நடந்த முதல் டெஸ்டில் அஸ்வினின் 500-வது விக்கெட்டை எதிர்நோக்கி இருந்தோம். அது நிறைவேறாத நிலையில் விசாகப்பட்டினம் போட்டியிலும் 500-வது விக்கெட் கிடைக்கவில்லை. அதனால் 499 விக்கெட்டை வீட்டில் இனிப்பை பகிர்ந்து கொண்டாடினோம். 500-வது விக்கெட் அப்படியே அமைதியாக நடந்தது.
500-க்கும் 501-வது விக்கெட்டுக்கும் இடையே நிறைய நடந்துவிட்டது. அது எங்கள் வாழ்க்கையில் நீண்ட நெடிய 48 மணி நேரமாகும். 500 விக்கெட் வீழ்த்தியது அபாரமான சாதனையாகும். உங்களை (அஸ்வின்) நினைத்து நாங்கள் பெருமை கொள்கிறோம். உங்களை நாங்கள் நேசிக்கிறோம் என பதிவிட்டுள்ளார்.