என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ஆபிரகாம் லிங்கன்"
- அமெரிக்க அதிபர்கள் மற்றும் அதிபர் தேர்தல் வேட்பாளர்கள் சுடப்படுவது இது முதல் முறை அல்ல.
- வரலாறு நெடுகிலும் இதுவரை நடந்த துப்பாக்கிசூடு சம்பவங்களை மீளப் பார்க்கவேண்டி உள்ளது.
முன்னாள் அமெரிக்க அதிபரும் தற்போதைய அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள டொனால்டு டிரம்ப் மீது நேற்று துப்பாக்கிச்சூடு நடைபெற்றது உலக அரசியலில் பரபரப்பை கிளப்பியுள்ளது. நேற்று பென்சில்வேனியாவில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றிக்கொண்டிருந்த டிரம்ப் மீது மர்ம நபர் துப்பாக்கியால் சுட்ட நிலையில் அவரது வலது காதின் மேற்பகுதியை குண்டு துழைத்துச் சென்றது. நூலிழையில் டொனால்டு டிரம்ப் உயிர்தப்பியுள்ளார்.
அமெரிக்க அதிபர்கள் மற்றும் அதிபர் தேர்தல் வேட்பாளர்கள் சுடப்படுவது இது முதல் முறை அல்ல. கறுப்பின அடிமை முறையை ஒளித்து அமெரிக்காவின் சகாப்தத்தை மாற்றி எழுதிய ஆபிரகாம் லிங்கனே சுட்டுக்கொள்ளப்பட்டவர் தான். அந்த வகையில் வரலாறு நெடுகிலும் இதுவரை நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவங்களை மீளப் பார்க்கவேண்டி உள்ளது.
ஆபிரகாம் லிங்கன்
1865 இல் அமெரிக்க உள்நாட்டு போர் இறுதிக் கட்டத்தில் இருந்த சமயத்தில் தலைநகர் வாஷிங்டனில் உள்ள போர்ட் தியேட்டரில் நடந்த நாடகத்தை பார்த்துக்கொண்டிருந்த ஆபிரகாம் லிங்கன் ஜான் வில்கிஸ் பூத் என்பவரால் நெற்றியில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
வில்லியம் மெக்கின்லே
1901 ஆம் ஆண்டில் அப்போதய அமெரிக்க அதிபர் மெக்கின்லே அரசமைப்பை விரும்பாத அனார்கிஸ்டான லியோன் ஷோல்கோஸ் என்பவரால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
தியோடர் ரூஸ்வெல்ட்
1912 ஆம் ஆண்டு முன்னாள் அதிபராக இருந்த ரூஸ்வெல்ட் மீண்டும் தேர்தலில் வேட்பாளராக களமிறங்கினார். பொதுக்கூட்டத்தில் பிரச்சாரத்தின்போது அவர் மீது துப்பாக்கிச்சூடு நடந்தது. அவரது நெஞ்சை நோக்கி சுடப்பட்டு, அவரது பையில் 50 பக்கங்கள் கொண்ட பேசுவதற்காக எடுத்துவைத்த குறிப்புக்கள் அடங்கிய காகிதக் கட்டின்மீதும், இரும்பினால் ஆன கண் கண்ணாடி மீதும் பட்டு குண்டு வலுவிழந்ததால் அவர் உயிர்பிழைந்தார். துப்பாக்கியால் சுடப்பட்ட போதும் அவர் தனது உரையை தொடர்ந்தார்.
பிராங்க்ளின் டி ரூஸ்வெல்ட்
1933 ஆம் ஆண்டு நடந்த தாக்குதலில் பிராங்க்ளின் டி ரூஸ்வெல்ட் உயிர்பிழைத்த நிலையில் மேயர் ஆன்டன் செர்மாக் மீது குண்டு பாய்ந்து அவர் உயிரிழக்க நேரிட்டது.
ஜான் எப்.கென்னடி
1963 ஆம் ஆண்டு அதிபராக இருந்த கென்னடி டெக்ஸாஸ் மாகாணத்தில் உள்ள டாலாஸ் நகரில் தனது மனைவியுடன் காரில் சென்று கொண்டிருந்த போது லீ ஹார்வே ஆஸ்வேல்டு என்பவரால் குறிவைத்து சுட்டுக்கொல்லப்பட்டார். வியட்நாம் போர் பதற்றம் மற்றும் சமூக உரிமைப் போராட்டங்கள் அந்த காலகட்டத்தில் அமெரிக்காவை சூழ்ந்திருந்த சமயத்தில் கென்னடியின் படுகொலை அமெரிக்காவின் மிகவும் வன்முறையான காலகட்டமாக பார்க்கப்படுகிறது
ராபர்ட் எப்.கென்னடி
ஜான் கென்னடி சுட்டுக்கொள்ளப்பட்டபின் அதற்கு பிந்தைய காலகட்டத்தில் அவரின் சகோதரர் ராபர்ட் கென்னடி அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட்டார். அந்த சமயத்தில் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள அம்பாசிடர் ஹோட்டலில் வைத்து அவரும் மர்ம நபரால் சுட்டுக்கொல்லப்பட்டார். அமெரிக்க சமூக உரிமைப் போராளி மார்ட்டின் லூதர் கிங் கொல்லப்பட்ட அடுத்த இரண்டே மாதத்தில் ராபர்ட் கென்னடியின் கொலை அரங்கேறியது அப்போதய அமெரிக்க அரசியலில் பெரும் குழப்ப நிலையை ஏற்படுத்தியது.
ஜார்ஜ் வாலஸ்
1972 அதிபர் தேர்தலில் போட்டியிட்ட ஜார்ஜ் வாலஸ் மீது மேரிலாந்தில் உள்ள ஷாப்பிங் மாலில் வைத்து நடந்த துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்த வால்ஸ் தனது வாழ்நாள் முழுவதும் படுக்கையிலேயே கழித்தார்.
ஜார்ஜ் போர்ட்
1975 இல் அதிபராக இருந்த போர்ட் மீது 17 நாட்களில் இரண்டு முறை பெண்கள் இருவரால் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. ஆனால் இரண்டு முறையும் போர்ட் காயங்களின்றி உயிர்தப்பினார்.
ரொனால்டு ரீகன்
1981 ஆம் ஆண்டு அதிபராக இருந்த ரீகன் மீது வாஷிங்டனில் உள்ள ஹில்டன் ஹோட்டலில் வைத்து நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் பலத்த காயமடைந்தார்.
- ராபினெட் ராணுவத்தில் பணியாற்றிய ஒரு கால்நடை மருத்துவ அறுவை சிகிச்சை நிபுணர்
- சுமார் 160 வருடங்களுக்கு பிறகு இந்த தொடர்பு வெளிவந்திருக்கிறது
அமெரிக்காவின் தற்போதைய அதிபர் ஜோ பைடன் (81).
பைடனின் மூதாதையர்களில் ஒருவர் மோசஸ் ஜே. ராபினெட் (Moses J. Robinette). கால்நடை மருத்துவ அறுவை சிகிச்சை நிபுணரான அவர் ராணுவத்தில் பணியமர்த்தப்பட்டார்.
1864 மார்ச் 21 அன்று அமெரிக்காவின் வர்ஜினியாவில் உள்ள ஒரு ராணுவ தளத்தில், ராபினெட்டுக்கு, ஜான் அலெக்சாண்டர் (John J. Alexander) எனும் சக பணியாளர் ஒருவருடன் வாக்குவாதம் ஏற்பட்டது.
இந்த வாக்குவாதம் முற்றி மோதலாக மாறியதில், ராபினெட் தன்னிடம் இருந்த சிறிய கத்தியால் அலெக்சாண்டரை சரமாரியாக தாக்கினார். அங்கிருந்தவர்கள், சண்டையை நிறுத்தி, அலெக்சாண்டரை மருத்துவ சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.
ராணுவ கட்டுப்பாட்டை மீறியதாக இருவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு ராணுவ நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது.
தற்காப்புக்காக அலெக்சாண்டரை தாக்கியதாகவும், தாக்காமல் இருந்திருந்தால் தன்னை அவர் கொன்றிருப்பார் என்றும் ராபினெட் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
ஆனால், ராபினெட்டின் வாதத்தை ஏற்க மறுத்த நீதிமன்றம், அவருக்கு 2-வருட கடுங்காவல் தண்டனை வழங்கியது.
ராபினெட், தன்னை விட மிக அதிக எடை மற்றும் வலிமையுடைய பலசாலி ஒருவருடன் சண்டையிட நேர்ந்ததால் தற்காப்பிற்காக கத்தியால் தாக்க நேரிட்டதாகவும், இதனை கருத்தில் கொண்டு மருத்துவரான அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்யுமாறும் 3 ராணுவ அதிகாரிகள் ராபினெட்டுக்கு ஆதரவாக அப்போதைய அமெரிக்க அதிபர் ஆபிரகாம் லிங்கனிடம் கருணை மனு அளித்தனர்.
இதனை ஏற்று கொண்ட அதிபர் ஆபிரகாம் லிங்கன், ராபினெட்டுக்கு மன்னிப்பு வழங்கினார்.
சுமார் 160 வருடங்களுக்கு பிறகு வெளிவந்திருக்கும் இந்த தகவல் அமெரிக்க தேசிய ஆவண காப்பகத்திலிருந்து கிடைத்துள்ளது.
அமெரிக்காவின் 16-வது அதிபருக்கும், தற்போதைய 46-வது அதிபருக்கும் உள்ள இந்த இணைப்பை சமூக வலைதளங்களில் பயனர்கள் சுவாரஸ்யமாக விவாதிக்கின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்