search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பிஆர்எஸ் எம்எல்ஏ"

    • கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து இடது புறத்தில் உள்ள சாலையோர இரும்பு தடுப்பில் மோதியது.
    • உயிருக்கு போராடிய கார் டிரைவரை மீட்டு படன் சேருவில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலம், செகந்திராபாத் கண்டோண்ட்மெண்ட் எம்.எல்.ஏவாக இருந்தவர் லாஸ்யா நந்திதா (வயது 37).

    இன்று அதிகாலை ஐதராபாத்தில் இருந்து தனது சொந்த ஊருக்கு காரில் புறப்பட்டார். சங்கரெட்டி மாவட்டம் படன்செருவில் உள்ள எக்ஸ்பிரஸ் வெளிவட்ட சாலையில் கார் சென்று கொண்டிருந்தது.

    காலை 6.30 மணி அளவில் வேகமாக வந்த கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து இடது புறத்தில் உள்ள சாலையோர இரும்பு தடுப்பில் மோதியது. இதில் காரில் முன்பகுதி நொறுங்கியது.

    காரில் இருந்த லாஸ்யா நந்திதா படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    அந்த வழியாக சென்றவர்கள் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிய கார் டிரைவரை மீட்டு படன் சேருவில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    மேலும் நந்திதா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அங்குள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நந்திதா கடந்த 13-ந் தேதி நல்கொண்டாவில் பி.ஆர்.எஸ் கட்சி தலைவர் சந்திரசேகர் ராவ் தலைமையில் பொதுக்கூட்டம் நடந்தது.

    கூட்டத்தில் கலந்துகொண்டு பின்னர் வீடு திரும்பிய நஞ்சிதாவின் கார் விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் நந்திதா அதிர்ஷ்டவசமாக லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். இன்று 2-வது விபத்தில் சிக்கி பலியாகியுள்ளார்.

    லாஸ்யா நந்திதா தந்தை சயன்னா 5-முறை எம்.எல்.ஏ.வாக இருந்தார். அவர் உடல்நலக்குறைவால் கடந்த ஆண்டு பிப்ரவரி 19-ந் தேதி இறந்தார்.

    அவரது மறைவிற்குப் பிறகு சந்திரசேகர ராவ் அவரது மகளான லாஸ்யா நந்திதா செகந்திராபாத், கண்டோண்ட்மெண்ட் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு அளித்தார்.

    தன்னை எதிர்த்து போட்டியிட்ட வெண்ணேலாவை அதிக வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

    கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தந்தை இறந்தார். இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் நந்திதா விபத்தில் சிக்கி இறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    பெண் எம்.எல்.ஏ. ஒருவர் விபத்தில் சிக்கி பலியான சம்பவம் தெலுங்கானாவில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

    இந்நிலையில் தெலுங்கானா எம்.எல்.ஏ. லஷ்ய நந்திதா மறைவிற்கு அம்மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி எக்ஸ் தளத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,

    "கண்டோண்ட்மெண்ட் சட்டமன்ற உறுப்பினர் லாஸ்யா நந்திதாவின் அகால மரணம் என்னை மிகவும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. நந்திதாவின் தந்தையுடன் எனக்கு நெருங்கிய தொடர்பு இருந்தது. அவர் கடந்த ஆண்டு இதே மாதத்தில் இறந்தார்.

    அதே மாதத்தில் திடீரென நந்திதாவும் மரணம் அடைந்தது மிகவும் வருத்தமளிக்கிறது. அவர்களது குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

    ×