என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "பணியாளர் நலன்"
- டாடாவின் புனே உற்பத்தி சாலையில், 3000 பெண்கள் மட்டுமே பணியாற்றுகின்றனர்
- நிறுவனங்கள் போக்குவரத்து வசதி, பேறு கால விடுப்பு உள்ளிட்ட பல சலுகைகளை அளிக்கின்றன
பல்லாயிரக்கணக்கானவர்களுக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலை அளித்து வரும் வாகன உற்பத்தித் துறையில் பல தசாப்தங்களாக பல நிறுவனங்களில், உற்பத்தி தளங்களில் ஆண்கள் மட்டுமே பணியமர்த்தப்பட்டு வந்தனர்.
ஆனால், சமீப காலங்களாக உற்பத்தி தளங்களில், பெண்கள் அதிக அளவில் பணியமர்த்தப்பட்டு, அவர்கள் அங்குள்ள அனைத்து துறையிலும் சிறப்பாக பணியாற்றுவது நல்ல மாறுதலாக பார்க்கப்படுகிறது.
இதுநாள் வரை இருந்த மிக கடினமான பணிகளுக்கு உயர் தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் நவீன கருவிகளும், இயந்திரங்களும் பயன்படுத்தப்படுவதாலும், அவற்றை இயக்கும் முறையில் துல்லியமான கையாளுதல் தேவைப்படுவதாலும் ஆண்களை விட அதிகளவில் பெண்களையே வாகன உற்பத்தி நிறுவனங்கள் பணியமர்த்த விரும்புகின்றன.
சொகுசு கார், எலக்ட்ரிக் வாகனம், கனரக வாகனம் உள்ளிட்டவையின் உற்பத்தியில் நாட்டின் முன்னணியில் உள்ள டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவன உற்பத்தி தளத்தில் 6500 பெண்கள், தொழில்நுட்ப வல்லுனர்களாக பணிபுரிகின்றனர்.
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்திற்கு அதிகமாக விற்பனையாகும் ஹேரியர் (Harrier) மற்றும் சஃபாரி (Safari) ஆகிய சொகுசு கார்களை தயாரிக்கும் புனே உற்பத்தி சாலையில், ஆண்களே இல்லாமல் 3000 பெண்கள் மட்டுமே பணியாற்றுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இரு சக்கர வாகன உற்பத்தியில் முன்னணியில் உள்ள ஹீரோ மோட்டோகார்ப் (Hero MotoCorp) நிறுவனத்தில் 3,500 பெண்கள் உற்பத்தி தளத்தில் பணிபுரிகின்றனர்.
எம்ஜி மோட்டார் இந்தியா (MG Motor India) எனும் கார் தயாரிப்பு நிறுவனத்தின் குஜராத் மாநில உற்பத்தி சாலையில், 3000 பணியாளர்களில் 34 சதவீதம் பேர் பெண்கள்.
வாகன உற்பத்தி நிறுவனங்கள் பாலின பேதம் இன்றி அதிகளவில் பெண்களையும் பணிக்கு அமர்த்தி ஊக்குவித்து வருகின்றன.
வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தால், இயக்குவதற்கு கடினமான கருவிகள் மற்றும் இயந்திரங்களை கொண்டு செய்த பணிகளை, தானியங்கி தொழில்நுட்பம் மற்றும் ரோபோக்களை கொண்டு எளிதாக இயக்குவது சாத்தியமாகி விட்டதால், பெண்களாலும் இப்பணிகளில் சிறப்பாக செயல்பட முடிகிறது. எனவே, அவர்கள் இத்துறையில் சேர நாளுக்கு நாள் ஆர்வம் காட்டுகின்றனர்.
பெண்களை ஈர்க்கும் வகையில் இந்நிறுவனங்கள் போக்குவரத்து வசதி, பேறு கால விடுப்பு, செயற்கை கருத்தரிப்புக்கான மருத்துவ செலவு உள்ளிட்ட பல சலுகைகளை அளிக்க தொடங்கி உள்ளன.
பென்ஸ் (Benz) கார் தயாரிப்பு நிறுவனம், பெண் ஊழியர்களுக்கு அவர்கள் பயில விரும்பும் திறன் மேம்பாட்டு கல்விக்கான உதவித்தொகை வழங்குகிறது.
நாளுக்கு நாள் வாகனத் தேவைகள் அதிகரிப்பதால், இத்துறையில் பணியாற்றும் பெண்களுக்கு சிறப்பான எதிர்காலம் உள்ளதாக பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்