என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சினிமா செய்திகள்"

    • நடிகை வின்சியிடம் அத்துமீறியது பிரபல நடிகர் ஷைன் டாம் சாக்கோ என்று தகவல் வெளியானது.
    • நடிகர் ஷைன் டாம் சாக்கோவிடம் போலீசார் கிடுக்கிப்படி கேள்விகளை கேட்டு விசாரணை நடத்தினார்கள்.

    கேரள மாநிலத்தை சேர்ந்த பிரபல மலையாள நடிகை வின்சி அலோசியல் படப்பிடிப்பு தளத்தில் முன்னணி நடிகர் ஒருவர் தன்னிடம் போதையில் அத்துமீறியதாகவும், ஆகையால் போதைப் பொருள் பயன்படுத்தும் நடிகருடன் நடிக்கமாட்டேன் எனவும் கடந்த சில நாட்களுக்கு முன்பு தெரிவித்திருந்தார்.

    அதே நேரத்தில் நடிகை வின்சியிடம் அத்துமீறியது பிரபல நடிகர் ஷைன் டாம் சாக்கோ என்ற தகவலும் வெளியானது. ஏராளமான மலையாள படங்களில் நடித்துள்ள இவர், சமீபத்தில் நடிகர் அஜித் நடித்து வெளி யாகியிருக்கும் 'குட் பேட் அக்லி' படத்திலும் நடித் துள்ளார்.

    இந்தநிலையில் கேரளாவில் போதைப்பொருள் கடத்தலில் முக்கிய நபராக இருக்கும் சஜீரை போலீசார் தேடிவந்தனர். அவர் நடிகர் ஷைன் டாம் சாக்கோவுடன் தங்கியிருக்கலாம் என்று கொச்சியில் உள்ள ஒரு ஓட்டலுக்கு சென்றனர். அப்போது நடிகர் ஷைன் டாம் சாக்கோ ஓட்டலின் 3-வது மாடியில் இருந்து குதித்து தப்பி ஓடி விட்டார்.

    அவர் தப்பி ஓடும் வீடியோ காட்சிகள், ஓட்டலில் இருந்த சி.சி.டி.வி. காமிராக்களில் பதிவாகியிருந்தது. நடிகர் ஷைன் டாம் சாக்கோ எதற்காக தப்பி ஓடினார்? என்ற சந்தேகம் போலீசா ருக்கு எழுந்தது. ஆகவே அவரிடம் விசாரணை நடத்த முடிவு செய்தனர்.

    இதற்காக அவரை போலீசார் தேடினர். ஆனால் அவர் எங்கு இருக்கிறார்? என்பதை கண்டு பிடிக்க முடியவில்லை. அவர் தமிழகத்திற்குள் தப்பிச் சென்று விட்டதாகவும் தகவல் வெளியானது. ஆனால் அவரது இருப்பிடத்தை கண்டுபிடிக்க முடியவில்லை. மேலும் அவரது செல்போன் எண்ணையும் தொடர்பு கொள்ள முடிய வில்லை.

    ஆகவே அவரை விசாரணைக்கு ஆஜராக நோட்டீசு வழங்க போலீசார் முடிவு செய்தனர். இதற்காக எர்ணாகுளம் வடக்கு போலீஸ் நிலைய அதிகாரிகள், திருச்சூர் முண்டூரில் உள்ள நடிகர் ஷைன் டாம் சாக்கோ இல்லத்துக்கு சென்றனர். ஆனால் அங்கு அவர் இல்லை.

    நடிகரின் தந்தை மற்றும் உடன் பிறந்தவர்கள் மட்டும் வீட்டில் இருந்தனர். அவர்களிடம் நடிகர் விசார ணைக்கு ஆஜராக வேண்டிய நோட்டீசை போலீசார் கொடுத்தனர். இன்று காலை 10 மணிக்கு சப்-இன்ஸ்பெக்டரின் முன்பு ஆஜராக வேண்டும் என்று நடிகருக்கு நோட்டீசு வழங்கப்பட்டு இருக்கிறது.

    நடிகர் ஒரு பயணத்தில் இருப்பதாவும், ஆகவே அவர் இன்று பிற்பகல் 3 மணிக்கு போலீஸ் நிலையத்தில் ஆஜராவார் எனவும் அவரது தந்தை தெரிவித்திருந்தார். இந்தநிலையில் நடிகர் ஷைன் டாம் சாக்கோ கொச்சி வடக்கு போலீஸ் நிலையத்தில் இன்று காலை ஆஜரானார்.

    அவரிடம், போலீசார் வந்தபோது தப்பி ஓடியது ஏன்? ஓட்டலில் எதற்காக அறை எடுத்து தங்கியிருந்தார்? தப்பியோடி தலைமறைவாகியது ஏன்? என பல்வேறு விஷயங்கள் தொடர்பாக அவரிடம் விசாரணை நடத்து வதற்காக 32 கேள்விகளை போலீசார் தயாரித்து வைத்திருந்தனர்.

    விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஷைன் டாம் சாக்கோ விடம் போலீசார் சரமாரியாக கிடுக்கிப்படி கேள்விகளை கேட்டு விசாரணை நடத்தினார்கள்.

    சர்ச்சையில் சிக்கி உள்ள நடிகர் ஷைன் டாம் சாக்கோ கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டு விடுதலையானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • போலீசார் இரவில் அதிரடியாக சென்று சோதனை நடத்தினர்.
    • 3-வது மாடியில் இருந்து தப்பித்து ஓடியதாக கூறப்பட்டது.

    திருவனந்தபுரம்:

    கேரளாவில் போதைப் பொருள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். இந்த நிலை யில் கொச்சியில் உள்ள ஓட்டலில் போதைப்பொருள் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஒருவரை தேடி போலீசார் இரவில் அதிரடியாக சென்று சோதனை நடத்தினர்.

    இந்த சோதனையின் போது ஒருவர் ஓட்டலின் 3-வது மாடியில் இருந்து தப்பித்து ஓடியதாக கூறப்பட்டது. அவர் யார்? என விசாரணை நடத்திய போது பிரபல நடிகர் ஷைன் டாம் சாக்கோ என தெரியவந்தது. இதனை சி.சி.டி.வி. காட்சிகள் மூலம் போலீசார் உறுதிப்படுத்தினர்.


    அஜித் நடிப்பில் வெளியான குட் பேட் அக்லி உள்பட பல படங்களில் ஷைன் டாம் சாக்கோ நடித்துள்ளார். இவர் ஏன் போலீசாரை கண்டு தப்பி ஓடினார்? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இது தொடர்பாக அவருக்கு நோட்டீசு அனுப்பி விசாரணைக்கு அழைக்கவும் கொச்சி போலீசார் முடிவு செய்து உள்ளனர்.

    இது தொடர்பாக போலீஸ் அதிகாரி கூறுகையில், ஓட்டலில் இருந்து வெளியேறியது ஏன்? என்பது குறித்து நடிகர் ஷைன் டாம் சாக்கோவிடம் விசாரிக்க உள்ளோம். விசாரணையின் ஒரு பகுதியாக ஓட்டல் ஊழியர்களிடமும் வாக்கு மூலங்கள் பெறப்படும் என்றார்.

    சர்ச்சையில் சிக்கி உள்ள நடிகர் ஷைன் டாம் சாக்கோ கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டு விடுதலையானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • கடந்த சில மாதங்களாக உணர்வுப் பூர்வமாக சில பிரச்சனைகளையும், கஷ்டத்தையும் சந்தித்தேன்.
    • யாருடைய செல்போன் அழைப்பையும், குறுஞ்செய்தியையும் நான் எடுக்கவில்லை.

    நேரம், ராஜாராணி, நய்யாண்டி, திருமணம் என்னும் நிக்கா உள்பட பல படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் பிரபலமானவர் நஸ்ரியா. தொடர்ந்து மலையாள திரை உலகிலும் பல படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியாக இருந்து வருகிறார்.

    பிரபல நடிகர் பகத்பாசிலை திருமணம் செய்து கொண்டு கேரளாவில் வசித்து வரும் நஸ்ரியா, சினிமா, பொதுநிகழ்ச்சி, சமூக வலைதளங்களில் மிகுந்த ஆக்டிவாக இருந்து வருபவர்.


    இந்நிலையில் சில மாதங்களாக நஸ்ரியா சினிமா, சமூக வலைதளங்கள் என எந்த தொடர்பில்லாமல் இருந்து வந்தார்.

    இது குறித்து நஸ்ரியாபகத் நீண்ட இடைவெளிக்கு பிறகு தனது சமூக வலைதள பக்கத்தில் நேற்று வெளியிட்ட பதிவில் கூறி இருப்பதாவது:-

    நான் ஏன் இவ்வளவு நாள் வெளியே வரவில்லை என்பதை சொல்ல விரும்புகிறேன். சினிமா உள்பட என்னை சார்ந்த அனைவரோடும் தொடர்பில் இருப்பேன்.

    ஆனால் கடந்த சில மாதங்களாக உணர்வுப் பூர்வமாகவும், தனிப்பட்ட முறையிலும் சில பிரச்சனைகளையும், கஷ்டத்தையும் சந்தித்தேன்.

    என் 30-வது பிறந்தநாள், புத்தாண்டு, நான் நடித்த 'சூக்ஷூமதர்ஷினி' படத்தின் வெற்றி என எல்லாவற்றையும் நான் கொண்டாட தவறி விட்டேன்.

    யாருடைய செல்போன் அழைப்பையும், குறுஞ்செய்தியையும் நான் எடுக்கவில்லை. இதற்காக அனைவரிடமும் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். எனது கடினமான சூழ்நிலையில் இருந்து மீண்டு வருவேன். அதற்கு இன்னும் கொஞ்ச காலம் தேவை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • குஷி கபூர் அணிந்திருக்கும் நெக்லஸ் காதலை உறுதிப்படுத்துவதாக அமைந்துள்ளது.
    • செய்திகளை இருவரும் ஏற்கவோ, மறுக்கவோ இல்லை.

    மறைந்த நடிகை ஸ்ரீதேவி இளைய மகள் குஷி கபூர். இவரும் இந்தி திரை உலகில் அறிமுகமாகி படங்களில் நடித்து வருகிறார்.


    குஷி கபூரும், நடிகர் வேதாங் ரெய்னாவும் 'ஆர்ச்சிஸ்' என்ற படத்தில் இணைந்து நடித்தனர். இதைத் தொடர்ந்து இருவருக்கும் இடையே காதல் உருவாகி காதலித்து வருவதாகவும், பல்வேறு இடங்களுக்கு டேட்டிங் செல்வதாகவும் தகவல்கள் வெளியாகி வருகிறது. இந்த செய்திகளை இருவரும் ஏற்கவோ, மறுக்கவோ இல்லை.


    இந்நிலையில் குஷி கபூர் அணிந்திருக்கும் நெக்லஸ் அவர்களது காதலை உறுதிப்படுத்துவதாக அமைந்துள்ளது. அவர் அணிந்திருக்கும் நெக்லசில் 'வி' என்ற எழுத்தும், 'கே' என்ற எழுத்தும் இரண்டுக்கும் நடுவில் 'லவ்' சிம்பிளும் உள்ளது.

    இதை அடுத்து குஷி கபூர் தனது காதலை உறுதிப்படுத்தி இருப்பதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி வருகிறது.

    • பட புரமோஷனுக்கு கூட என்னை அழைக்கவில்லை.
    • பயத்தால் சென்னைக்கு என்னால் போக முடியவில்லை.

    'சிந்து சமவெளி' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் அமலாபால். தொடர்ந்து விஜய், விக்ரம், தனுஷ் உள்பட பல முன்னணி கதாநாயகர்களுடன் இணைந்து நடித்தார்.

    ஜெகத் தேசாய் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட அமலாபாலுக்கு 'இலை' என்ற ஆண் குழந்தை இருக்கிறது.


    இந்நிலையில் தனது சினிமா வாழ்க்கை பற்றி அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது:-

    'சிந்து சமவெளி' படம் வெளியான சமயத்தில் எழுந்த விமர்சனங்கள் என்னை பயமுறுத்தியது. முக்கியமாக அந்த படம் பார்த்த என் அப்பா அதிகமாக வருத்தப்பட்டார். எனது கதாபாத்திரம் சமூகத்தின் மீது ஏற்படுத்தும் தாக்கத்தை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்று கூறினார்.

    நாம் இதுபோன்ற கதாபாத்திரங்கள் செய்யக்கூடாது என்பதை அந்த படம் வெளியான பிறகுதான் புரிந்து கொண்டேன். அப்போது கேவலம் எனக்கு 17 வயது மட்டும் தான். இளம் நடிகை என்பதால் இயக்குனர் சொன்னதை கேட்டு குருட்டுத்தனமாக சம்மதித்து நடித்தேன்.

    இதனால் நான் வேதனைக்கு உள்ளாகியது மட்டுமின்றி, எனது சினிமா வாழ்க்கை கூட பாதிக்கப்பட்டது. அதன் பிறகு நான் நடித்த 'மைனா' பட புரமோஷனுக்கு கூட என்னை அழைக்கவில்லை.


    அதன் பிறகு எனக்கு கமல்ஹாசன், ரஜினிகாந்த் போன்ற மாபெரும் நடிகர்கள் கூட போன் செய்தார்கள். விபரீதமான எதிர்ப்பு காரணமாக எனக்கு ஏற்பட்ட பயத்தால் சென்னைக்கு என்னால் போக முடியவில்லை.

    நான் அதன்பிறகு சினிமாவில் வெற்றி பெற்று சாதித்தேன். ஆனால் அந்த விவாதத்துக்குரிய படம் மீண்டும் ரீலீஸ் ஆனது. அப்பொழுது கூட புரமோஷனல் மெட்டீரியல் தவறான வழியில் சென்று விவாதத்தை ஏற்படுத்தியது.

    இவற்றுக்கெல்லாம் பின்னணி சினிமா கேவலம் வியாபாரத்தை மட்டுமே லட்சியமாகக் கொண்டு தயாரிக்கப்படுகிறது என்பதை புரிந்து கொண்டேன்.

    இதை கருத்தில் கொண்டு ஒரு நடிகை எவ்வளவு பலமான அடி விழுந்தாலும் தாங்கிக் கொள்ள தயாராக இருக்க வேண்டும் என்பதை எனக்கு புரிய வைத்தது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பிரபலங்கள் பலர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறி வருகின்றனர்.
    • சிறு பொன்மணி அசையும் என்ற பாடலை பாடினார்.

    இயக்குனர் பாரதிராஜா மகன் மனோஜ் கடந்த 25-ந் தேதி மாரடைப்பால் காலமானார். 48 வயதில் உயிரிழந்த தனது ஒரே மகனின் மறைவு பாரதிராஜாவை நிலை குலைய செய்துள்ளது. மிகுந்த சோகத்தில் இருக்கும் பாரதிராஜாவை திரை உலக பிரபலங்கள் பலர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறி வருகின்றனர்.

    இந்நிலையில் பாரதிராஜாவை இசையமைப்பாளர் கங்கை அமரன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறி உள்ளார். பாரதிராஜாவை சந்தித்த கங்கை அமரன் 'கல்லுக்குள் ஈரம்' படத்தில் அவர் எழுதிய சிறு பொன்மணி அசையும் என்ற பாடலை பாடினார்.

    தொடர்ந்து பாரதிராஜாவிடம் கங்கை அமரன் இதெல்லாம் நியாபகம் இருக்கா இந்த பாட்டை 10 நிமிடங்களில் எழுதினேன். பாம்குரோவ் ஓட்டலில் இருக்கும் போது பாட்டை எழுதி கொண்டு வா என்று சொன்னீர்கள்.

    நானும் வெளியில் போய்விட்டு 10 நிமிடத்தில் எழுதி கொண்டு வந்தேன். பாடலை பார்த்து விட்டு, "நீ நல்லா எழுதியிருக்கடா" என பாராட்டினீர்கள். நான் ரொம்ப லக்கிமேன். இதுபோல் எத்தனை பேரை உருவாக்கி இருக்கீங்க என கூறினார்.

    பழைய நினைவுகளோடு பாடலை பாடி பாரதிராஜாவுக்கு கங்கை அமரன் ஆறுதல் கூறிய காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    • தமிழ் மற்றும் மலையாள திரை உலகினர் இரங்கல்.
    • தொலைக்காட்சி தொடர்களில் நடித்து பிரபலமானவர்.

    கே.பாலச்சந்தரின் 'அவர்கள்', 'பகலில் ஒரு இரவு' படங்கள் மற்றும் சித்தி, வாணிராணி உள்பட பல்வேறு தொலைக்காட்சி தொடர்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் ரவிக்குமார் (வயது 71).


    இவர் உடல் நலக்குறைவால் சென்னை வேளச்சேரியில் உள்ள பிரசாந்த் மருத்துவ மனையில் அனுமதிக்ககப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

    இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று மதியம் காலமானார். அவரது மறைவுக்கு தமிழ் மற்றும் மலையாள திரை உலகினர் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.

    • குஷ்புவுக்கு ரசிகர்கள் கோவில் கட்டிய சம்பவம் பரபரப்பாக பேசப்பட்டது.
    • ஆந்திர மாநிலத்தில் சமந்தாவுக்கு கோவில் கட்டப்பட்டுள்ளது.

    சென்னை:

    தமிழ் திரை உலகில் பிரபல கதாநாயகிகளான குஷ்பு, ஹன்சிகா, நமீதா ஆகியோருக்கு ரசிகர்கள் கோவில் கட்டி யுள்ள சம்பவம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி யது. திருச்சியில் இருந்து புதுக்கோட்டை செல்லும் சாலையில் உள்ள குண்டூர் பர்மா காலனியில் குஷ்புவுக்கு ரசிகர்கள் கோவில் கட்டிய சம்பவம் தமிழகம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டது.

    இந்நிலையில் தமிழ் திரை உலகில் அறிமுகமாகி தெலுங்கு, இந்தி படங்களில் நடித்து தற்போது இந்திய திரை உலகில் பிரபல நடிகையாக சமந்தா உருவெடுத்து உள்ளார். தமிழ் சினிமாவில் மட்டுமின்றி தெலுங்கு திரை உலகிலும் சமந்தாவுக்கு என தனி ரசிகர்கள் கூட்டம் இருந்து வருகிறது.


    பிரபல நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட சமந்தா பின்னர் அவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்றனர். இந்நிலையில் ஆந்திர மாநிலத்தில் சமந்தாவுக்கு கோவில் கட்டப்பட்டுள்ளது. இது பற்றிய விபரம் வருமாறு:-

    ஆந்திர மாநிலம் தெனாலி என்ற பகுதியில் இளைஞர் ஒருவர் சமந்தாவின் தீவிர ரசிகராக இருந்து வருகிறார். இதைத்தொடர்ந்து அவர் வசித்து வரும் பகுதியில் சமந்தாவுக்கு கோவில் கட்டி உள்ளார். அவருக்கு கோவில் அமைத்து கோவிலினுள் சமந்தாவின் மார்பளவு சிலை அமைத்து தினமும் பூஜை செய்து வருகிறார்.

    கோவிலின் நுழைவு வாயிலில் சமந்தா கோவில் என பெயர் வைத்துள்ளார். சமந்தாவுக்கு கோவில் கட்டி இருப்பதை அறிந்த பொதுமக்கள் ஏராளமானோர் தினமும் குடும்பத்துடன் கோவிலுக்கு திரண்டு வருகின்றனர்.

    கோவிலில் உள்ள சமந்தா சிலை முன்பு குடும்பத்தோடு நின்று ஆர்வத்துடன் புகைப்படம் எடுத்து செல்கின்றனர். சமந்தாவுக்கு கோவில் கட்டிய சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

    • திரையரங்கில் ரசிகர்களை சந்தித்து வருகின்றனர்.
    • ரியலிஸ்டிக் மற்றும் மாஸ் இரண்டையும் கலந்து புதிதாக எடுத்துள்ளார்.

    ஈரோடு:

    நடிகர் விக்ரம் நடித்த வீர தீர சூரன் படம் திரையரங்கில் திரையிடப்பட்டு உள்ளது. இதையொட்டி நடிகர் விக்ரம், படத்தின் இயக்குனர் அருண்குமார் ஆகியோர் ஒவ்வொரு மாவட்டமாக சென்று திரையரங்கில் ரசிகர்களை சந்தித்து வருகின்றனர்.

    இந்நிலையில் ஈரோடு பஸ் நிலையம் அருகே உள்ள திரையரங்கில் வீர தீர சூரன் படம் திரையிடப்பட்டிருந்தது. இதையொட்டி நேற்று மாலை நடிகர் விக்ரம், இயக்குனர் அருண்குமார் திரையரங்கிற்கு வந்து ரசிகர்களை சந்தித்து பேசினர்.


    பின்னர் நடிகர் விக்ரம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    திரையரங்கில் வீர தீர சூரன் படத்தின் காட்சிகள் அதிகப்படுத்தியது மகிழ்ச்சி அளிக்கிறது. அனைத்து இடங்களில் மக்களின் ஆதரவு இருக்கிறது. மிகவும் மகிழ்ச்சியாகவும் நெகிழ்ச்சியாகவும் உள்ளது. இதற்கு தான் படம் எடுத்தோம்.

    வீர தீர சூரன் படத்தின் பகுதி ஒன்று விரைவில் வரும். இயக்குனர் ரியலிஸ்டிக் மற்றும் மாஸ் இரண்டையும் கலந்து புதிதாக எடுத்துள்ளார். ரசிகர்களுக்காக எடுத்த இந்த படம் இந்தளவிற்கு மக்களிடையே சென்றடைந்துள்ளது மகிழ்ச்சியாக உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பின்னர் திரையரங்கில் படம் பார்த்துக்கொண்டிருந்த ரசிகர்களுடன் நடிகர் விக்ரம் உரையாடினார்.இதில், ரசிகர்கள் அனைவருக்கும் மிக்க நன்றி என்றார். இஸ்லாமிய நண்பர்கள் அனைவருக்கும் ஈத் முபாரக் தெரிவித்து படம் எப்படி இருந்தது எனக்கேட்டார்.

    ரசிகர்கள் "ஐ லவ் யூ" எனக் கூறியதற்கு, விக்ரமும் "ஐ லவ் யூ" என்றார். தொடர்ந்து தனக்கு வழங்கப்பட்ட பூங்கொத்தில் இருந்து ஒரு பூவை எடுத்து ரசிகருக்கு கொடுத்து மகிழ்ந்தார்.

    அப்போது கூட்டத்தில் ஒரு ரசிகர் நடிகர் விக்ரமனை நோக்கி உங்களைப் போன்று வயசாகாமல் இருப்பதற்கு என்ன செய்ய வேண்டும் என்று கேட்டார். அதற்கு பதில் அளித்து பேசிய விக்ரம், வயதாவது நல்லது தான்.

    வயசாகாமல் இருக்க சனிக்கிழமை தோறும் கழுதை பால் குடிக்க வேண்டும் என நகைச்சுவையாக பதில் அளித்தார். இதைக்கேட்டு ரசிகர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர். தொடர்ந்து சாமி, அந்நியன் பட வசனத்தை ரசிகர்களிடம் பேசி விக்ரம் அங்கிருந்து கிளம்பி சென்றார். 

    • தீபிகா படுகோனே- ரன்வீர்சிங் 2018-ல் திருமணம் செய்து கொண்டனர்.
    • இன்ஸ்டாகிராமில் ஒரு தகவலை வெளியிட்டுள்ளனர்.

    பாலிவுட் நட்சத்திர காதல் ஜோடியான தீபிகா படுகோனே- ரன்வீர்சிங் 2018-ல் திருமணம் செய்து கொண்டனர். இந்தநிலையில் இன்று தீபிகா படுகோனே - ரன்வீர்சிங் இன்ஸ்டாகிராமில் ஒரு தகவலை வெளியிட்டுள்ளனர். தீபிகா 3 மாதம் கர்ப்பமாக இருப்பதாகவும், செப்டம்பர் மாதம் குழந்தை பிறக்கப் போவதாகவும் தெரிவித்துள்ளனர்.

     தீபிகா படுகோனே கர்ப்பமாக இருக்கலாம் என கடந்த சில தினங்களுக்கு முன் செய்தி பரவியது. 77-வது பிரிட்டிஷ் அகாடமி திரைப்பட விருது விழாவில் சிகப்பு கம்பளத்தின் மீது பளபளக்கும் சேலையை அணிந்திருந்த போது அவர் தனது வயிற்றுப்பகுதியை மறைத்ததாக கூறப்படுகிறது. தீபிகா படுகோனே தற்போது 3 மாத கர்ப்பமாக உள்ள செய்தி பரவியதும் சமூக ஊடகங்களில் ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் மகிழ்ச்சி அடைந்து அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

    மேலும் இந்த ஆண்டின் தொடக்கத்தில் சிங்கப்பூரில் தீபிகா தாய்மை பற்றிய தனது எண்ணங்களைப் பகிர்ந்து கொண்டார். "நிச்சயமாக ரன்வீரும் நானும் குழந்தைகளை நேசிக்கிறோம். நாங்கள் எங்கள் சொந்த குடும்பத்தைத் தொடங்கும் நாளுக்காக காத்திருக்கிறோம்" என்று அப்போது தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • அறிமுக இயக்குநர் பாஸ்கல் வெப்பம் குளிர் மழை #VKM படத்தை இயக்கவிருக்கிறார்
    • இயக்குநர் வெற்றிமாறன் வெளியிட இருப்பதாக பட குழுவினர் அறிவித்துள்ளனர்.

    அறிமுக இயக்குநர் பாஸ்கல் வெப்பம் குளிர் மழை #VKM படத்தை இயக்கவிருக்கிறார்.ஷங்கர் இப்படத்திற்கு இசையமைக்கிறார். ஹேஷ்டேக் FDFS என்ற நிறுவனம் தயாரிக்கிறது. படத்தின் கதை ஒரு சமூக பிரச்சனையை பேசக் கூடிய படமாக இருக்கும் என்று படக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

    இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை காலை 11 மணிக்கு வெளியாக உள்ளது. போஸ்டரை இயக்குநர் வெற்றிமாறன் வெளியிட இருப்பதாக பட குழுவினர் அறிவித்துள்ளனர்.

    • இத்திரைப்படத்தை ஓடிடி தளமான டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டார் வாங்கியுள்ளது
    • பிரேமலு தெலுங்கு மொழியில் டப் செய்து இன்று வெளியானது.

    மலையாள மொழியில் கிரிஷ் இயக்கத்தில் விஷ்ணு விஜய் இசையில் பிரேமலு படம் வெளியானது. மமிதா பைஜூ, நஸ்லேன் ஆகியோர் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்தனர். சென்னையில் இப்படத்திற்கு மிகப் பெரிய வரவேற்பு உருவாகியது.  உலகளவு பாக்ஸ் ஆபிஸ் கலக்ஷனில் 100 கோடியை தாண்டியது பிரேமலு. மலையாள திரையுலகில் மிகப் பெரிய வசூல் செய்த படத்தின் பட்டியலில் பிரேமலு 5-வது இடத்தில் உள்ளது. இத்திரைப்படத்தை ஓடிடி தளமான டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டார் வாங்கியுள்ளது. மலையாளத்தில் வரவேற்பை தொடர்ந்து பிரேமலு தெலுங்கு மொழியில் டப் செய்து இன்று வெளியானது. இந்நிலையில் படக்குழுவினர் தமிழிலும் இப்படத்தை டப் செய்து வெளியிடலாம் என்று முடிவு செய்துள்ளனர். மார்ச் மாத இறுதியில் தமிழில் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. அதிகாரப்பூர்வ தகவல்கள் படக்குழுவினரிடம் இருந்து விரைவில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ×