search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பிரதிபா சிங்"

    • களத்தில் அமைப்புகளை வலுப்படுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளேன்.
    • மக்களவை தேர்தலுக்காக பல்வேறு சிக்கல்களை சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

    இமாச்சல பிரதேச அரசியலில் குழப்பமான சூழ்நிலை நிலவி வரும் நிலையில், காங்கிரஸ் கட்சியின் அம்மாநில தலைவர் பிரதிபா சிங் கூறிய கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இமாச்சல பிரதேச மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவரான பிரதிபா சிங் கூறுகையில் "காங்கிரசில் செய்ய வேண்டிய வேலைகள் இன்னும் ஏராளம் உள்ளது. ஒரு எம்.பி.யாக நான் என்னுடைய தொகுதிக்கு சென்று மக்களை சந்தித்து, அவர்களின் பிரச்சனைகளை தீர்த்து வைக்க முயற்சி செய்கிறேன். எங்களை விட பா.ஜனதாவின் வேலை சிறப்பாக உள்ளது என்பது உண்மை.

    முதல் நாளில் இருந்தே, அமைப்புகளை நீங்கள் வலிமைப் படுத்தினால் மட்டுமே வரவிருக்கும் மக்களவை தேர்தலை நாம் எதிர்கொள்ள முடியும் என்று தெரிவித்து வருகிறேன். இது எங்களுக்கு மிகவும் இக்கட்டான சூழ்நிலை. களத்தில் ஏராளமான கடினமான விசயங்களை எங்களால் பார்க்க முடிகிறது. மோடியின் உத்தரவுப்படி பா.ஜனதா ஏராளமான விசயங்களை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.

    விக்ரமாதித்யா சிங் ஆறு எம்.எல்.ஏ.-க்களுடன் ஆலோசனை நடத்தினாரா? என்பது குறித்து எனக்கு எந்த ஐடியாவும் இல்லை. நேற்று இரவு வரை இங்குதான் இருந்தார். அவருடைய அடுத்தக்கட்ட செயல்பாடு குறித்து எனக்கு ஏதும் தெரியாது. அவர்கள் பலத்த பாதுகாப்பிற்கு கீழ் உள்ளனர்.

    எங்களுக்கு கட்டளையிடும் உயர்பதவியில் இருப்பவர்கள் ராகுல் காந்தி மற்றும் சோனியா காந்தி. அவர்களிடம் சென்று இமாச்சல பிரதேச நிலைமை எடுத்துக் கூறுவேன். என்ன செய்ய வேண்டும் என கூறுங்கள் என்றும் கேட்பேன்" என்றார்.

    இமாச்சல பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் கட்சிக்கு தற்போது இக்கட்டான சூழ்நிலை நிலவி வருகிறது. 2022 சட்டமன்ற தேர்தலில் 68 இடங்களில் 40 இடங்களை கைப்பற்றி ஆட்சியை பிடித்தது. சுக்விந்தர் சிங் சுகு முதலமைச்சராக பதவி ஏற்றுக் கொண்டார்.

    கடந்த சில நாட்களுக்கு முன் மாநிலங்களவை தேர்தல் நடைபெற்றது. அப்போதுதான் காங்கிரஸ் கட்சிக்கு தலைவலி காத்திருந்தது.

    40 எம்.எல்.ஏ.-க்கள் வைத்துள்ள நாம் எளிதாக வெற்றி பெற்று விடலாம் என அபிஷேக் சிங்வி-ஐ வேட்பாளராக களம் நிறுத்தியது. ஆனால் 25 இடங்களை மட்டுமே வைத்துள்ள பா.ஜனதா போட்டி வேட்பாளரை நிறுத்தியது.

    விக்ரமாதித்யா சிங்

    தேர்தலின்போது ஆறு காங்கிரஸ் எம்.எல்.ஏ.-க்கள் பா.ஜனதாவுக்கு மாற்றி வாக்களித்தனர். இதனால் பா.ஜனதா வேட்பாளர் வெற்றி பெற்றார்.

    அப்போதுதான் காங்கிரஸ் கட்சிக்கு தலைவலி முற்றியது. வெற்றி பெற்ற பா.ஜனதா, காங்கிரஸ் தார்மீக மெஜாரிட்டியை இழந்து விட்டது எனத் தெரிவித்தது. மேலும், ஆளுநரை சந்தித்து காங்கிரஸ்க்கு மெஜாரிட்டி இல்லை. நம்பிக்கையில்லா தீர்மானம் கோர இருப்பதாக அதிரடியாக தெரிவித்தது.

    இதற்கிடையே சட்டமன்றம் கூடியது. எதிர்க்கட்சி தலைவர் ஜெய்ராம் தாகூர் உள்ளிட்ட 15 எம்.எல்.ஏ.-க்கள் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். அதேவேளையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான வீரபத்ர சிங்கின் மகன் மந்திரியாக உள்ளார். மாநில மந்திரியாக உள்ள விக்ரமாதித்ய சிங் தனது மந்திரி பதவியை ராஜினாமா செய்தார். மாற்றி வாக்களித்த 6 எம்.எல்.ஏ.-க்கள் கட்சித்தாவல் தடை சட்டத்தின் கீழ் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர்.

    இப்படி ஒரே குழப்பமாக நிலவி வந்த நிலையில் டி.கே. சிவக்குமார் உள்ளிட்ட தலைவர்களை மேலிடம் இமாச்சல பிரதேச மாநிலத்திற்கு அனுப்பி வைத்தது. அவர்கள் காங்கிரஸ் எம்.எல்.ஏ.-க்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.

    பிரதாப் சிங் இமாச்சல பிரதேச மாநில முன்னாள் முதல்வர் வீரபத்ர சிங்கின் மனைவி ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×