என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ஜான் டியூன் விமான நிலையம்"
- விமானத்தில் பயணம் செய்த 5 பேரும் கனடா நாட்டை சேர்ந்தவர்கள் என தெரிகிறது
- 3 குழந்தைகள் உட்பட 5 பயணிகளும் இந்த விபத்தில் உயிரிழந்தனர்
கடந்த திங்கட்கிழமையன்று, கனடா நாட்டின் ஒன்டாரியோ (Ontario) நகரிலிருந்து சிங்கிள்-எஞ்சின் பொருத்தப்பட்ட ஒரு சிறிய விமானம் புறப்பட்டது. அந்த விமானம் சேர வேண்டிய இடம் மற்றும் பயண திட்டம் குறித்து தற்போது தகவல்கள் இல்லை.
அந்த சிறிய ரக விமானத்தில் பயணம் செய்த 5 பேரும் கனடா நாட்டை சேர்ந்தவர்கள். அவர்களில் 3 பேர் குழந்தைகள்.
அந்த விமானம் அமெரிக்காவின் டென்னிசி (Tennessee) மாநில நேஷ்வில் (Nashville) நகர்புறத்தில் உள்ள ஜான் டியூன் (John Tune) விமான நிலையத்தில் 2,500 அடி உயரத்தில் வட்டமிட்டு, சிறிது நேரத்தில் அங்கிருந்து பறந்தது.
அந்த விமானத்தின் விமானி, தரைக்கட்டுப்பாட்டு தளத்தை ரேடியோவில் தொடர்பு கொண்டு விமானம் கட்டுப்பாட்டை இழந்ததாக கூறினார்.
உடனடியாக, ஜான் டியூன் விமான நிலையத்தில் ஓடுதளம் எண். 2ல் (Runway 2) அந்த விமானத்தை இறக்குமாறு நிலைய கட்டுப்பாட்டு அதிகாரிகள் விமானியிடம் கூறினர்.
ஆனால், சில நொடிகளில் எஞ்சின் முற்றிலும் செயலிழந்து விட்டதாகவும் விமான நிலையத்தில் இறக்குவது கடினம் என்றும் விமான கட்டுப்பாட்டு அதிகாரிகளிடம் விமானி கூறினார்.
இதைத் தொடர்ந்து விமான நிலையத்தை தாண்டி சென்ற விமானம், அங்கிருந்து சுமார் 5 கிலோமீட்டர் தொலைவில் கீழே விழுந்து நொறுங்கியது.
இன்டர்ஸ்டேட் 40 நெடுஞ்சாலைக்கு 60 அடிக்கு முன்னர் நேஷ்வில் புறநகர் பகுதியில் மாலை சுமார் 08:00 மணியளவில் இந்த விமான விபத்து நடந்தது. கீழே விழுத்து நொறுங்கிய அந்த விமானம் உடனே தீப்பிடித்து முற்றிலும் எரிந்தது.
இந்த விபத்தில் இந்த விமானத்தில் பயணித்த 3 குழந்தைகள் உட்பட 5 பேரும் உயிரிழந்தனர்.
அந்த 5 பயணிகளின் பெயர், வயது, பாலினம் உள்ளிட்ட விவரங்கள் தற்போது வரை வெளியாகவில்லை.
விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரிய (National Transport Safety Board) அதிகாரி ஆரோன் மெக்கார்டர் (Aaron McCarter) தெரிவித்தார்.
விபத்து நடைபெறும் வரை விமானி பதட்டமாகாமல் தொடர்பில் இருந்ததாக விமான நிலைய கட்டுப்பாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர்.
அந்த விமானம், 10,500 அடி உயரத்தில் நீண்ட நேரமாக எந்த சிக்கலும் இன்றி பயணித்து வந்துள்ளது தரைக்கட்டுப்பாட்டு நிலைய தகவல்களில் இருந்து தெரிய வருகிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்