என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ஸ்மார்ட் ரீப்ளே சிஸ்டம்"
- டிஆர்எஸ் முறையிலும் நிறைய தவறுகள், குழப்பங்கள் மற்றும் கால தாமதங்கள் ஏற்பட்டு வருவதால் இனி இதுவரை இருந்த முறையை மாற்ற பிசிசிஐ முடிவு செய்து இருக்கிறது.
- இதுவரை இரண்டு அல்லது நான்கு கேமராக்கள் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்த நிலையில், இனி எட்டு கேமராக்களை பயன்படுத்த பிசிசிஐ முடிவு செய்துள்ளது.
மும்பை:
2024 ஐபிஎல் தொடர் இன்னும் சில தினங்களில் துவங்க உள்ளது. ஒவ்வோரு ஐபிஎல் தொடரின் போதும் புதுப்புது விதிமுறையை பிசிசிஐ அறிமுகப்படுத்துவதுண்டு. அந்த வகையில் புதிய விதிமுறையை பிசிசிஐ அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த ஆண்டு முதல் ஐபிஎல் தொடரில் டிஆர்எஸ் தொழில்நுட்பம் கிடையாது. அதற்கு பதிலாக வேறு ஒரு மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்ய உள்ளது. அதற்கு "ஸ்மார்ட் ரீப்ளே சிஸ்டம்" என பிசிசிஐ பெயரிட்டுள்ளது.
கிரிக்கெட் போட்டிகளில் நடுவர்கள் எடுக்கும் முடிவுகள் தவறாக செல்வதாக தொடர்ந்து புகார் எழுந்த நிலையில் டிஆர்எஸ் தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டது. முன்பு நடுவர்கள் மட்டுமே தங்கள் சந்தேகத்தை தெளிவுபடுத்த டிவி நடுவரை வீடியோ காட்சிகள் மூலம் தங்கள் முடிவை சரி பார்க்குமாறு கேட்பார்கள்.
டிஆர்எஸ் முறையிலும் நிறைய தவறுகள், குழப்பங்கள் மற்றும் கால தாமதங்கள் ஏற்பட்டு வருவதால் இனி இதுவரை இருந்த முறையை மாற்ற பிசிசிஐ முடிவு செய்து இருக்கிறது. அந்தவகையில் இதுவரை டிவி நடுவருக்கும் ஹாக்ஐ ஆபரேட்டர்களுக்கும் இடையில் ஒரு வழித்தடமாக இருந்த டிவி ஒளிபரப்பு இயக்குனர், இனி புதிய முறையின் கீழ் ஈடுபடமாட்டார்.
அதன்படி டிவி நடுவர் அமர்ந்து இருக்கும் அதே அறையில் ஹாக்ஐ ஆப்ரேட்டர்கள் இருப்பார்கள். நடுவர் என்ன கேட்கிறாரோ அதை அவர்கள் நேரடியாக ஒளிபரப்புவார்கள். இதில் இதுவரை இரண்டு அல்லது நான்கு கேமராக்கள் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்த நிலையில், இனி எட்டு கேமராக்களை பயன்படுத்த பிசிசிஐ முடிவு செய்துள்ளது. ஹாக்ஐ ஆப்ரேட்டர்கள் எட்டு அதிவேக கேமராக்களை மைதானத்தில் பொருத்தி போட்டியின் நிகழ்வுகளை படம் பிடிக்கும்.
டிவி நடுவர்கள் கேட்கும் போது அந்த எட்டு கேமராக்களில் படம் பிடிக்கப்பட்ட நிகழ்வுகளையும் ஒரே நேரத்தில் திரையில் காணும் வசதியும் இனி கிடைக்கும். அதன் மூலம் டிவி நடுவர் இனி விரைவாகவும், தெளிவாகவும் தனது முடிவுகளை எடுக்க முடியும். அதே போல, எல்பிடபுள்யூ-வின் போதும் வழக்கமாக அவுட்சைடு லெக் திசையில் பந்து பிட்ச் ஆகி இருந்தால் அதை முன்கூட்டியே ஹாக்ஐ நிறுவன வல்லுநர் கூறி விடுவார்.
இதன் மூலம், டிவி நடுவர் அதை மட்டும் திரையில் காட்டி எல்பிடபுள்யூவை மறுக்க முடியும். அதன் மூலம் அதிக நேரம் ஆவதை தடுக்க முடியும். இந்த தொழில்நுட்பம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்