என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "பிளமிங் ருதுராஜ் கெய்க்வாட்"
- சென்னை அணியின் புதிய கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் நியமிக்கப்பட்டுள்ளார்.
- புதிய கேப்டன் நியமனம் குறித்து சென்னை அணி பயிற்சியாளர் பிளமிங் விளக்கம் அளித்தார்.
சென்னை:
ஐ.பி.எல் தொடரின் 17-வது சீசன் நாளை சென்னையில் தொடங்க உள்ளது. முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன.
இதற்கிடையே, சென்னை சூப்பர் கிங் அணி கேப்டனாக இருந்த டோனி மாற்றப்பட்டு புதிய கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் நியமிக்கப்பட்டது ரசிகர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.
இந்நிலையில், சி.எஸ்.கே. கேப்டன் பொறுப்பில் இருந்து டோனி மாற்றப்பட்டது ஏன் என்பது சென்னை அணி பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் விளக்கம் அளித்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பிளமிங் கூறியதாவது:
புதிய கேப்டனை நியமிக்க இதுவே சரியான நேரம் என டோனி கருதியதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
டோனியின் ஆலோசனைப்படியே ருதுராஜ் புதிய கேப்டனாக தேர்வு செய்யப்பட்டார். வருங்கால திட்டங்களைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
கடந்த 2022-ம் ஆண்டு ஜடேஜாவை கேப்டனாக நியமித்ததில் இருந்து நிறைய கற்றுக்கொண்டோம். ருதுராஜை கேப்டனாக்கும் முடிவுக்கு ஜடேஜாவும் முழுமையாக ஆதரவு தெரிவித்துள்ளார். இந்த சீசனில் டோனியின் உடல்தகுதி மிகவும் சிறப்பாக உள்ளது என தெரிவித்தார்.