search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டிரைலர்"

    • படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.
    • படத்தில் ஸ்ரீலீலா கிஸிக் என்ற பாடலுக்கு நடனமாடியுள்ளார்

    சுகுமார் இயக்கத்தில் புஷ்பா படத்தின் இரண்டாவது பாகம் புஷ்பா 2 தி ரூல் என்ற பெயரில் உருவாகியுள்ளது. படத்தில் அல்லு அர்ஜுன் உடன் ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில் உள்பட பலர் நடித்துள்ளனர். படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். படத்தின் சில பாடல்கள் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

     

    புஷ்பா 2 திரைப்படம் வரும் டிசம்பர் 5 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்நிலையில் படத்தின் டிரைலர் விரைவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் நவம்பர் 17 ஆம் தேதி அதற்கு தேதி குறிக்கப்பட்டது.

     

    அதன்படி நாளை [ நவம்பர் 17] மாலை 6.03 மணிக்கு புஷ்பா 2 டிரைலர் வெளியாகவுள்ளதை உறுதிப்படுத்தி உள்ளது. டிரைலர் வெளியீட்டு விழா பாட்னாவில் மிக பிரம்மாண்டமாக நடைப்பெறவுள்ளதாக படக்குழு அறிவித்தது. படத்தில் ஸ்ரீலீலா கிஸிக் என்ற பாடலுக்கு நடனமாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • 'ஆசிரியர்னா என்னனு தெரியுமா.. 'ஆசு' னா தப்பு, 'இரியன்'னா திருத்துவன்
    • நா சொல்லிக்கொடுக்கணும்னு இங்க வந்து நிக்கறது உங்கள மாத்துறதுக்கு இல்ல உங்க சந்ததியை மாத்தறதுக்கு

    போஸ் வெங்கட் தற்பொழுது விமல் நடிப்பில் சார் என்ற படத்தை இயக்கியுள்ளார்.

    இப்படத்தை வெற்றிமாறனின் கிராஸ் ரூட் பிலிம்ஸ் வழங்குகிறது. இத்திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. சார் திரைப்படம் விரைவில் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இப்படத்தின் ட்ரைலரை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மற்றும் மிஷ்கின் மற்றும் நடிகர் ஆர்யா அவர்களது எக்ஸ் பக்கத்தில் இன்று வெளியிட்டனர். ட்ரைலரில் படிப்புக்கு முக்கியவதும் கொடுக்கும் வசனங்கள் கவனம் ஈர்த்துள்ளது.

    குறிப்பாக 'ஆசிரியர்னா என்னனு தெரியுமா.. 'ஆசு' னா தப்பு, 'இரியன்'னா திருத்துவன் என்ற வசனமும் நா சொல்லிக்கொடுக்கணும்னு தைரியமா இங்க வந்து நிக்கறது உங்கள மாத்துறதுக்கு இல்ல உங்க சந்ததியை மாத்தறதுக்கு... மானமும் அறிவும் தான் மனுசனுக்கு அழகு' போன்ற வசனங்கள் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இப்படத்தை வெற்றிமாறனின் கிராஸ் ரூட் பிலிம்ஸ் வழங்குகிறது.
    • படத்தின் டிரைலர் மற்றும் இசை நாளை வெளியாகவுள்ளது.

    போஸ் வெங்கட் தற்பொழுது விமல் நடிப்பில் சார் என்ற படத்தை இயக்கியுள்ளார்.

    இப்படத்தை வெற்றிமாறனின் கிராஸ் ரூட் பிலிம்ஸ் வழங்குகிறது. திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

    படத்தின் டிரைலர் மற்றும் இசை நாளை வெளியாகவுள்ளது. திரைப்படத்தின் டிரைலர் நாளை காலை 11 மணிக்கு வெளியாகவுள்ளது. டிரைலரை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மற்றும் மிஷ்கின் மற்றும் நடிகர் ஆர்யா அவர்களது எக்ஸ் தளத்தில் வெளியிடவுள்ளனர்.

    திரைப்படம் செப்டம்பர் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • வெனம் படத்தின் மூன்றாவது மற்றும் கடைசி பாகம் 'வெனம்: தி லாஸ்ட் டான்ஸ்'
    • இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் 3டி மற்றும் ஐமேக்ஸ் 3டி-யிலும் படம் வெளியாகிறது

    மார்வெல் யுனிவெர்சின் வெற்றிக்கு விதை போட்டது ஸ்பைடர் மேன் படங்கள் என்று கூற முடியும். அந்த வகையில் ஸ்பைடர் மேன் மூன்றாவது பாகத்தில் அனைவரையும் மிரட்டிய வில்லனான வெனம் கதாபாத்திரத்துக்கு என தனியே கடந்த 2018 ஆம் ஆண்டு மெதட் ஆக்டர் டாம் ஹார்டி நடிப்பில் வெளியாகி பெரும் வரவேற்ப்பை பெற்றது. தொடர்ந்து 2021 இல் இரண்டாம் பாகமும் வெளியானது. டாம் ஹார்டியின் உடலுக்குள் புகுந்த வெனம் மூலம் antihero வாக பரிணமிப்பதே இந்த படங்களின் ஒன் லைன். இந்நிலையில் வெனம் படத்தின் மூன்றாவது மற்றும் கடைசி  பாகமான 'வெனம்: தி லாஸ்ட் டான்ஸ்'முழுவீச்சில் தயாராகி வருகிறது.

    இப்படத்தில் டாம் ஹார்டி, சிவெடெல் எஜியோஃபர், ஜூனோ டெம்பிள், ரைஸ் இஃபான்ஸ், பெக்கி லு, அலன்னா உபாச் மற்றும் ஸ்டீபன் கிரஹாம் ஆகியோர் நடித்துள்ளனர். இயக்குனர் கெல்லி மார்செல் திரைக்கதை எழுதி இப்படத்தை இயக்கியுள்ளார். Sony பிக்சர்ஸ் எண்டர்டெயின்மண்ட் இந்தியா இந்தப் படத்தை, அக்டோபர் 25, 2024 அன்று இந்தியத் திரையரங்குகளில் வெளியிடுகிறது.

    ஆங்கிலம், இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் 3டி மற்றும் ஐமேக்ஸ் 3டி-யிலும் படம் வெளியாகிறது. இந்நிலையில் வெனம்: தி லாஸ்ட் டான்ஸ்' படத்தின் இறுதி டிரைலர் தற்போது  வெளியாகி கவனம் பெற்று வருகிறது. எடி மற்றும் வெனோம் இருவரின் உலகங்களிலும் நடக்கும் பல்வேறு விஷயங்களால் தவிர்க்க முடியாத ஒரு முடிவுக்கு தள்ளப்படுகிறார்கள். இது வெனோம் மற்றும் எடி என்ற ஆண்டி ஹீரோ ஃப்ரான்சைசிஸின் மறக்க முடியாத இறுதிப் பயணமாக 'வெனம்: தி லாஸ்ட் டான்ஸ்'இருக்கும் என்று எதிர்பார்க்கலாம். 

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • அட்டகத்தி தினேஷ், ஹரிஷ் கல்யாண் ஆகியோர் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.
    • லப்பர் பந்து வரும் செப்டம்பர் மாதம் வெளியாவும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    பிரின்ஸ் பிக்சர்ஸ்' தயாரித்த 'லப்பர் பந்து' படம் கிரிக்கெட் விளையாட்டை மையமாக கொண்ட கதையாகும். இதனை அறிமுக இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து எழுதி இயக்கியுள்ளார்.

    மேலும் இப்படத்தில் அட்டகத்தி தினேஷ், ஹரிஷ் கல்யாண் ஆகியோர் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தில் சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி, பால சரவணன், காளி வெங்கட், ஸ்வாசிகா விஜய் உள்ளிட்ட பலர் நடித்து உள்ளனர்.

    ஹரிஷ் கல்யாண் இந்தப் படத்தில் அன்பு என்ற கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்துக்கு ஷான் ரோல்டன் இசை அமைத்துள்ளார். தினேஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார். சோனி ஆடியோ உரிமை பெற்று உள்ளது.

    படத்தின் கிலிம்ப்ஸ் வீடியோ சில மாதங்களுக்கு முன் வெளியாகிய நிலையில், திரைப்படம் வரும் செப்டம்பர் மாதம் வெளியாவும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும், படத்தின் டிரைலர் இன்று வெளியாகும் என படக்குழு அறிவித்தது.

    அதன்படி, லப்பர் பந்து திரைப்படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது. டிரைலரை இயக்குனர் மாரி செல்வராஜ் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

    மேலும், லப்பர் பந்து வரும் செப்டம்பர் மாதம் 20ம் தேதி திரையரங்கில் வெளியாக உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • `பரியேறும் பெருமாள்' படத்தை இயக்கி தனக்கென ஒரு இடத்தை தமிழ் சினிமாவில் பிடித்துக் கொண்டவர் இயக்குநர் மாரி செல்வராஜ்.
    • வாழை திரைப்படம் வரும் ஆகஸ்ட் 23 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

    `பரியேறும் பெருமாள்' படத்தை இயக்கி தனக்கென ஒரு இடத்தை தமிழ் சினிமாவில் பிடித்துக் கொண்டவர் இயக்குநர் மாரி செல்வராஜ். அதைத் தொடர்ந்து தனுஷ் நடிப்பில் 'கர்ணன்' மற்றும் உதயநிதி ஸ்டாலின் மற்றும் வடிவேலு நடித்த 'மாமன்னன்' திரைப்படத்தை இயக்கினர்.

    மாமன்னன் படத்தைத் தொடர்ந்து மாரி செல்வராஜ் தற்போது 'வாழை' என்ற படத்தை தயாரித்து, இயக்கி உள்ளார். இந்த படத்தில் கலையரசன், நிகிலா விமல், பிரியங்கா நாயர் மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு மேற்கொண்டுள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

    இந்த படத்தின் பாடல்கள் ஒவ்வொன்றாக வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. படத்தின் டிரைலர் தற்பொழுது வெளியாகியுள்ளது. திரைப்படம் வரும் ஆகஸ்ட் 23 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

    வாழை மர அறுவடை செய்வதற்கு மக்கள் ஒரு கிராமத்தில் இருந்து செல்லும் வழக்கம் இருக்கிறது. அந்த ஊரை சேர்ந்த சிவலிங்கம் என்ற சிறுவனுக்கு செல்ல விருப்பமில்லை இதைச் சுறீயே டிரைலர் காட்சிகள் அமைந்துள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • தி கோட் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
    • கோட் திரைப்படம் ஐமேக்ஸ் மற்றும் எபிக் தொழில் நுட்பத்திலும் வெளியாக இருக்கிறது.

    நடிகர் விஜய், இயக்குநர் வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாகி வரும் படம் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் (தி கோட்). ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் பிரசாந்த், பிரபு தேவா, அஜ்மல், மீனாட்சி சௌத்ரி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

    தி கோட் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவுபெற்று பின்னணி வேலைகள் நடைபெற்று வருகின்றன. இந்த படத்தில் இடம் பெற்றுள்ள மூன்று பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றன. திரைப்படம் வரும் செப்டம்பர் 5 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

    கோட் திரைப்படம் ஐமேக்ஸ் மற்றும் எபிக் தொழில் நுட்பத்திலும் வெளியாக இருக்கிறது.

    படத்தின் டிரைலர் தற்பொழுது வெளியாகியுள்ளது. திரைப்படம் ஒரு பக்கா ஆக்ஷன் கமெர்ஷியல் திரைப்படமாக அமைந்துள்ளது. டிரைலரில் இடம் பெற்ற வசனங்கள் மிகவும் அசத்தலாக உள்ளது. விஜயின் மகனாக வரும் இளைய விஜய் கதாப்பாத்திரம் மிகவும் எதிர்பார்ப்பை உருவாக்குகிறது.

    டிரைலரின் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • மர்மங்கள் பல நிறைந்த தனித் தீவில் வாழும், யாருக்கும் புரியாத மர்மம் ஒன்றைப் பற்றிய படம்
    • தீவின் காடும், சுற்றியுள்ள கடலும் போர்க்களமாக மாறி சூர்யாவுக்கான களமாக திகழ்கிறது.

    சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி உள்ள படம் 'கங்குவா' . 38 மொழிகளில் 3டி மற்றும் ஐமேக்ஸ் தொழில்நுட்பத்தில் பிரம்மாண்ட பான் இந்தியா படமாக இந்த படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் வெளியிட உள்ளது. வருகிற அக்டோபர் 10 ஆம் தேதி வெளியாக உள்ள இந்த படத்தின் போஸ்டர்கள் மற்றும் பாடல்கள் குறித்த அப்டேட்கள் அடுத்தடுத்து வெளியான வண்ணம் உள்ளது.

    கடந்த மாதம் படத்தின் முதல் பாடலான ஃபயர் சாங் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் படத்தின் டிரைலர் இன்று [ஆகஸ்ட் 12 ஆம் தேதி] வெளியாகும் எனப் படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்திருந்த நிலையில் ரசிகர்கள் வழி மேல் விழி வைத்து காத்திருக்கத் தொடங்கினர்.

    அதன்படி தற்போது கங்குவா படத்தின் அதிரடியான டிரைலர் வெளியாகியுள்ளது. மர்மங்கள் பல நிறைந்த தனித் தீவில் வாழும், யாருக்கும் புரியாத மர்மம் ஒன்றைப் பற்றியதாகத் தொடங்கும் டிரைலர், வில்லன் பாபி தியோலின் விருந்தாருந்த வாரீரோ என்ற வசனத்துடன் அடுத்த கட்டத்துக்கு நகர்கிறது.

    தீவின் காடும், சுற்றியுள்ள கடலும் போர்க்களமாக மாறி சூர்யாவுக்கான களமாக திகழ்கிறது. உன் ரத்தமும், என் ரத்தமும் வெவ்வேறா, முன் நெற்றியும் முழங்காலும் மண் தொடா... மண்டியிடா என்று சூர்யா பேசும் வசனங்கள் காட்சிகளுடன் காணும்போது மிரட்டலாக அமைந்துள்ளது. மேலும் படத்தின் தூய தமிழை கையாண்டுள்ளது கவனம் ஈர்த்துள்ளது. மொத்தத்தில் அட்வென்ச்சர் ஆக்ஷன் போர்க்களமாக கங்குவா திரைகளை ஆளும் என்று தெரிகிறது. 

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • சூழ்ச்சியால் கொலை செய்யப்படும் சிம்பாவின் தந்தை முஃபாசா கடந்து வந்த பாதையை வைத்து உருவாகியுள்ளது முஃபாசா : தி லயன் கிங் படம்.
    • தற்பொழுது முஃபாசா படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.

    காட்டுக்கே ராஜாவான சிங்கத்தை வைத்து இதுவரையில் 2 லயன் கிங் படங்கள் வந்துள்ளது. 1994 ஆம் ஆண்டில் ஒன்றும், 2019 ஆம் ஆண்டில் மற்றொன்றும் வெளியானது. இரண்டிலும் ஒரே கதைதான் , 1994 ஆம் ஆண்டு வெளிவந்தப் படம் கார்டூன் டெக்னாலஜியில் இருக்கும், 2019 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் புது டெக்னாலஜியான அனிமேஷன் தொழில்நுட்பத்தில் அமைந்து இருக்கும்.

    லயன் கிங் படத்திற்கு ஒரு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. சிம்பாவை தூக்கி அனைத்து காட்டு விலங்களுக்கும் காட்டும் காட்சி இன்னும் சமூகவலைத்தளங்களில் வலம் வந்து கொண்டுதான் உள்ளது.

    இந்நிலையில், சூழ்ச்சியால் கொலை செய்யப்படும் சிம்பாவின் தந்தை முஃபாசா கடந்து வந்த பாதையை வைத்து உருவாகியுள்ளது முஃபாசா : தி லயன் கிங் படம். 

    அரச குடும்பத்தை சாராது, அனாதையாக வளர்ந்து தனக்கான ஆட்சியை உருவாக்கும் முஃபாசாவின் கதை மெய்சிலிர்க்க வைக்கிறது. தற்பொழுது முஃபாசா படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.

    முஃபாசா காட்டில் இடம் மாறி வருகிறான், அவனை ஸ்கார் காப்பாற்றி தன் ராஜ குடும்பத்துடன் அழைத்துச் செல்கிறான். ஸ்கார் மற்றும் முஃபாசா சகோதரர்களைப் போல் வாழ்ந்து வருகிறார்கள். இப்படி அனாதையாக இடம் மாறி ராஜ வம்சத்தில் வந்தடையும் முஃபாசா பின் எப்படி அந்த ராஜாங்கத்தை கைப்பற்றியது என்பதே கதை. ஸ்கார் ஏன் முஃபாசாவிற்கு எதிரியாக மாறுகிறான்.

    இப்படத்தை ஆஸ்கர் விருதை வென்ற ஜெஃப் நதன்சன் எழுத பேரி ஜென்கின்ஸ் இயக்கியுள்ளார்.

    இப்படம் வருகிற டிசம்பர் 20 ஆம் தேதி வெளியாகவுள்ளது. லயன் கிங் படத்தின் ரசிகர்கள் மத்தியில் முஃபாசா: தி லயன் கிங் படத்திற்கு மிகப் பெரிய எதிர்பார்ப்பு உண்டாகியுள்ளது. டிரைலரில் இடம்பெற்ற காட்சிகள் சமூக வலைத்தளங்களில் ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • கங்குவா திரைப்படம் அக்டோபர் 10 ஆம் தேதி இந்த படம் வெளியாகிறது.
    • இத்திரைப்படம் 38 மொழிகளில் 3டி மற்றும் ஐமேக்ஸ் தொழில்நுட்பத்தில் பிரம்மாண்ட பான் இந்தியா படமாக வெளியாக உள்ளது.

    சூர்யா நடிப்பில் உருவாகி இருக்கும் புதிய படம் கங்குவா. இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கும் கங்குவா படத்தின் முதல் பாடலான ஃபயர் சாங் கடந்த மாதம் வெளியாகியது. இப்பாடல் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.

    இந்த படத்தை ஞானவேல்ராஜாவின் ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரித்துள்ளது. இத்திரைப்படம் 38 மொழிகளில் 3டி மற்றும் ஐமேக்ஸ் தொழில்நுட்பத்தில் பிரம்மாண்ட பான் இந்தியா படமாக வெளியாக உள்ளது. வருகிற அக்டோபர் 10 ஆம் தேதி இந்த படம் வெளியாகிறது.

    படத்தின் டிரைலர் குறித்து தற்பொழுது அப்டேட் வெளியாகியுள்ளது. படத்தின் டிரைலர் வரும் ஆகஸ்ட் 12 ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக போஸ்டர் வெளியிட்டு தெரிவித்துள்ளனர்.

    போஸ்டரில் சூர்யா கத்தியை வைத்துக் கொண்டு மண்ணில் ஊன்றிய படி பின்னால் பெரிய இறக்கைகளுடன் காணப்படுகிறார். டிரைலரை பார்க்க ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • டிரைலர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
    • உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் ஆகஸ்ட் 23 'சாலா' வெளியாகிறது.

    தெலுங்கு திரையுலகில் முன்னணி தயாரிப்பு நிறுவனமான பீப்பிள் மீடியா ஃபேக்டரி, 'சாலா' எனும் நேரடி தமிழ் படத்தை பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது.

    டி.ஜி.விஷ்வபிரசாத் தயாரிப்பில், விவேக் குச்சிபொட்லா இணை தயாரிப்பில் அறிமுக இயக்குநர் எஸ்.டி. மணிபால் இயக்கத்தில் உருவாகியுள்ள இத்திரைப்படம் வட சென்னையில் உள்ள பிரபல மதுபானக் கூடத்திற்காக இரண்டு துருவங்கள் மோதிக் கொள்ளும் போராட்டத்தை விறுவிறுப்பு குறையாமல் விவரிக்க உள்ளது.

    சமீபத்தில் வெளியான இப்படத்தின் முதல் பார்வை பெரும் வரவேற்பை பெற்றதையடுத்து 'சாலா' டிரைலரை ஆகஸ்ட் 3 அன்று அல்லு அர்ஜுன் வெளியிட்டார்.

    இந்த டிரைலர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

    உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் ஆகஸ்ட் 23 'சாலா' வெளியாகிறது.

    'சாலா' படத்தில் தீரன் (அறிமுகம்), ரேஷ்மா வெங்கடேசன் (அறிமுகம்), 'மெட்ராஸ்' புகழ் சார்லஸ் வினோத், அருள்தாஸ், ஸ்ரீநாத், சம்பத் ராம், மற்றும் ஐடி அரசன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

    'சாலா' படப்பிடிப்பு நிறைவடைந்து சென்சாரில் யு/ஏ சான்றிதழ் வாங்கி தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் திரையரங்கு வெளியீட்டுக்கு தயாராகி வருகிறது.

    இந்நிலையில், திரைப்படம் குறித்து பேசிய இயக்குநர் மணிபால், "வட சென்னையின் முக்கிய பகுதியில் அமைந்துள்ள ஒரு மதுபானக் கூடம் தான் 'சாலா' படத்தின் மையக்கரு.

    இந்த பாரை கைப்பற்ற சக்தி வாய்ந்த இரு குழுக்களுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. இதற்கிடையே, மதுக்கடையே இருக்கக் கூடாது என்று பெண் ஆசிரியர் ஒருவர் கடும் போராட்டத்தை முன்னெடுக்கிறார். இந்த மூன்று தரப்புக்கு இடையே நடக்கும் மோதல்களை காரம் சாரம் குறையாமல் திரையில் கொண்டு வந்திருக்கிறோம்," என்றார்.

    • 'ஜமா' என்பது தெருக்கூத்து நாடகக் கலைஞர்களின் குழுவைக் குறிக்கிறது.
    • `ஜமா' திரைப்படம் வரும் ஆகஸ்ட் 2 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

    தமிழ்நாட்டில் உள்ள தெருக்கூத்து கலைஞர்களின் வாழ்க்கைமுறை மற்றும் சவால்களை மையமாக வைத்து 'ஜமா' என்ற படத்தை இளவழகன் இயக்கி முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார்.

    இப்படத்தை கூழாங்கல் திரைப்படத்தை தயாரித்த நிறுவனமான லேர்ன் அண்ட் டீச் புரொடக்சன்ஸ் தயாரித்துள்ளது.

    'ஜமா' என்பது தெருக்கூத்து நாடகக் கலைஞர்களின் குழுவைக் குறிக்கிறது. இந்தக் கதை தெருக்கூத்து கலைஞர்களின் அனுபவங்களை மையமாகக் கொண்டு திருவண்ணாமலையில் படமாக்கப்பட்டுள்ளது. படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

    இளையராஜா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். சேத்தன், அம்மு அபிராமி, ஸ்ரீ கிருஷ்ண தயாள், கே.வி.என். மணிமேகலை, காலா குமார், வசந்த் மாரிமுத்து, சிவா மாறன் உள்பட பலர் படத்தில் நடித்துள்ளனர். திரைப்படம் வரும் ஆகஸ்ட் 2 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

    இந்நிலையில் படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. படத்தின் டிரைலர் தெருக் கூத்து வடிவிலே காட்சியமைக்கப்பட்டிருக்கிறது. நாடகத்தில் பெண் வேடம் அணியும் கதாநாயகன், அவர் அந்த ஜமாவின் முதலாளி பெண்ணை காதலிக்கிறார்.

    கதாநாயகனுக்கு என சொந்த ஜமா வைக்க வேண்டும் என்பதே கனவு. பிறகு என்ன நடந்தது என்பது போன்ற காட்சிகள் டிரைலரில் இடம் பெற்றுள்ளன. படத்தின் டிரைலர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    ×