search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "எம்.எஸ் டோனி"

    • இந்த ஐபிஎல் சீசனில் மீண்டும் பினிஷராக உருவெடுத்துள்ளார் டோனி
    • டோனியின் பேட்டிங் உத்வேகத்தை கொடுக்கிறதல்லவா? இந்த வருடம் வலைப்பயிற்சியில் கூட அவருடைய பேட்டிங் மிகவும் துல்லியமாக இருக்கிறது

    ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் ருதுராஜ் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் 7 போட்டிகளில் 4 வெற்றிகளையும் 3 தோல்விகளையும் பதிவு செய்தது.

    இந்த சீசனில் மீண்டும் பினிஷராக உருவெடுத்துள்ளார் எம்.எஸ் டோனி. இதுவரை டெல்லி, மும்பை, லக்னோவுக்கு எதிராக 37* (16), 20* (4), 28* (9) ரன்கள் விளாசி அற்புதமாக விளையாடி இருக்கிறார்

    சிஎஸ்கே அணியின் நலனுக்காக தோனி முன்கூட்டியே பேட்டிங் செய்ய களமிறங்க வேண்டும் என்று ரசிகர்கள் மற்றும் சில முன்னாள் வீரர்கள் கோரிக்கை விடுத்தனர்.

    இந்நிலையில் இது தொடர்பாக சிஎஸ்கே அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் பேசியுள்ளார். அதில், "டோனியின் பேட்டிங் உத்வேகத்தை கொடுக்கிறதல்லவா? இந்த வருடம் வலைப்பயிற்சியில் கூட அவருடைய பேட்டிங் மிகவும் துல்லியமாக இருக்கிறது. எனவே அவருடைய ஆட்டத்தை பார்த்து எங்கள் அணி ஆச்சரியப்படவில்லை. ஏனெனில் ஆரம்பத்திலேயே நாங்கள் அவருடைய உச்சகட்ட திறமையை பார்த்துள்ளோம். இருப்பினும் சமீபத்திய வருடங்களில் அவருடைய முழங்காலில் பிரச்சனை இருக்கிறது"

    அதிலிருந்து மீண்டு வரும் அவரால் குறிப்பிட்ட சில பந்துகளை மட்டுமே எதிர்கொள்ள முடியும். இங்கே அனைவரும் எங்களைப் போலவே டோனி அதிக நேரம் பேட்டிங் செய்வதை பார்க்க விரும்புகின்றனர். இருப்பினும் நாங்கள் அவரை தொடர் முழுவதும் விளையாடுவதை பார்க்க விரும்புகிறோம். அதற்கு அவர் 2 – 3 ஓவர்கள் விளையாடுவதே சரியாக இருக்கும். ஆனால் ஒவ்வொரு முறையும் அவர் பேட்டிங் செய்வதை பார்ப்பது அற்புதமாக இருக்கிறது.

    அவர் பேட்டிங் செய்ய வரும் போது அற்புதமான சூழ்நிலை ஏற்படுகிறது. அவர் அனைவரையும் மகிழ்விக்கிறார். அந்த வகையில் டோனி சாதித்துள்ள விஷயங்களுக்காக நாங்கள் பெருமைப்படுகிறோம். இந்தியாவுக்காகவும் சிஎஸ்கே அணிக்காகவும் அவர் செய்துள்ளதை பார்த்து எங்களுக்கு ஆச்சரியமில்லை. எங்களுடைய அணியின் இதயத்துடிப்பாகவும் ஒரு அங்கமாகவும் அவர் இருப்பதற்காக நாங்கள் பெருமையடைகிறோம்" என்று அவர் தெரிவித்துள்ளார்.

    • எம்.எஸ் டோனி என்ற பெயர்தான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் இன்ஸ்டாகிராமில் அதிக பேர் பின்தொடர்பவதற்கு காரணம்
    • சென்னைக்கு அடுத்தபடியாக 13.5 மில்லியன் பின் தொடர்பவர்களுடன் பெங்களூரு அணி இரண்டாவது இடத்தில் உள்ளது

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அவர்களுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 15 மில்லியன் பின் தொடர்பவர்களை பெற்ற முதல் அணி என்ற சாதனையை படைத்துள்ளது.

    சென்னைக்கு அடுத்தபடியாக 13.5 மில்லியன் பின் தொடர்பவர்களுடன் ஆர்.சி.பி அணி இரண்டாவது இடத்திலும், 13.2 மில்லியன் பின் தொடர்பவர்களுடன் மும்பை இந்தியன்ஸ் அணி மூன்றாவது இடத்திலும் உள்ளது.

    எம்.எஸ் டோனி என்ற பெயர்தான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் இன்ஸ்டாகிராமில் அதிக பேர் பின்தொடர்பவதற்கு காரணம் என்றால் மிகையாகாது. இந்திய முழுவதும் சென்னை அணிக்கு ரசிகர்கள் இருப்பதற்கும் அவர்தான் காரணம். இதுவரை 5 ஐபிஎல் கோப்பைகளை சென்னை அணி வென்றுள்ளது.

    இந்நிலையில், ஐபிஎல் 2024 தொடரில் சிஎஸ்கே கேப்டன் பதவியில் இருந்து தோனி விலகி, ருதுராஜ் கெய்க்வாட் இடம் கேப்டன் பொறுப்பை ஒப்படைத்தார். இந்த தொடரில் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையில் முதல் 2 போட்டிகளிலும் சென்னை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 

    ×