என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ராட்சத அலைகள்"
- குளச்சல் கடற்கரையில் ஈஸ்டர் பண்டிகையை கொண்டாடும் விதமாக ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்திருந்தனர்.
- பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கடலில் இறங்கி குளிக்க வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கன்னியாகுமரி:
கன்னியாகுமரி மாவட்டத் தில் உள்ள பல்வேறு கடல் பகுதிகளிலும் நேற்று மாலை திடீரென கடல் அலைகள் சீற்றமாக காணப்பட்டன. சுனாமி காலத்தில் ஏற்பட்டது போன்று அலையின் வேகம் இருந்தது. இதனால் கடலோரப் பகுதிகளில் ஒருவித பரபரப்பு ஏற்பட்டது.
கொல்லங்கோடு இறையு மன்துறை பகுதியில் கடலில் எழுந்த ராட்சத அலைகள், தடுப்புச் சுவரை தாண்டியதால் கரையோரம் இருந்த வீடுகளுக்குள் கடல்நீர் புகுந்தது. இதனால் வீடுகளில் இருந்த மக்கள் அச்சத்தில் சாலைக்கு வந்தனர். கடல் நீர், கரையோரம் இருந்த கல்லறை தோட்டங்கள் கடல் நீரால் சூழப்பட்டன. குளச்சல் கடற்கரையில் ஈஸ்டர் பண்டிகையை கொண்டாடும் விதமாக ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்திருந்தனர். அங்கு ராட்சத அலைகள் எழும்பியதை பார்த்த அவர்கள், அங்கிருந்து அவரச அவசரமாக பாதுகாப்பான இடங்களை தேடிச் சென்றனர். அவர்கள் அமர்ந்திருந்த மணல்பரப்பு வரை கடல் நீர் வந்து சென்றது. சிலர் அதில் கால் நனைத்து மகிழ்ந்தனர்.
கன்னியாகுமரியிலும் கடல் சீற்றமாகவே காணப்பட்டது. இதனை தொடர்ந்து கடலோர பாதுகாப்பு குழும போலீசாரும், கன்னியாகுமரி போலீசாரும் விரைந்து செயல்பட்டு சுற்றுலா பயணிகளை கடற்கரை பகுதியில் இருந்து வெளியேற்றினர். இந்த நிலையில் இன்று 2-வது நாளாகவும் குமரி மாவட்ட கடற்பகுதியில் ராட்சத அலைகள் எழும்பின. இதனால் கடலோரப் பகுதிகளை போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கடலில் இறங்கி குளிக்க வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கன்னியாகுமரியில் இந்திய பெருங்கடல், அரபிக் கடல், வங்கக்கடல் ஆகிய 3 கடல்களும் ஆர்ப்பரித்துக் கொண்டே இருந்தன. சுமார் 10அடி முதல் 15 அடி உய ரத்துக்கு ராட்சத அலைகள் ஆக்ரோஷமாக எழும்பி வீசின. நடுக்கடலில் இருந்து பொங்கி எழுந்து வந்த ராட்சத அலைகள் கரையை நோக்கி ஆக்ரோஷமாக வந்து பாறைகளில் முட்டி மோதி சிதறிய காட்சி பார்ப்பதற்கே பயங்கரமாக இருந்தது.
கடல் சீற்றம் காரணமாக நேற்று மதியம் நிறுத்தப்பட்ட விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கான படகு போக்குவரத்து இன்று காலையும் ரத்து செய்யப்பட்டே இருந்தது. காலை 8 மணிக்கு தொடங்க வேண்டிய படகு போக்குவரத்து தொடங்கப்படாததால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். இது தொடர்பாக படகு போக்குவரத்துக் கழக அதிகாரிகள் கூறுகையில், கடல் சீற்றம் தணிந்த பிறகு விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு படகு போக்குவரத்து இயக்கப்படும் என்றனர்.
குளச்சல் கடலில் எழுந்த ராட்சத அலைகள், மணற் பரப்பில் நிறுத்தப்பட்டிருந்த சுமார் 10 பைபர் வள்ளங்களை இழுத்து சென்றதால் அவை சேதமடைந்தன. ஒரு சில கட்டுமரங்களையும் காணவில்லை என மீனவர்கள் கூறினர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்