search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆந்திரா தேர்தல்"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தேர்தலில் ஜெகன் மோகன் ரெட்டிக்காக கடுமையாக உழைத்தவர்கள் தற்போது அவருக்கு எதிராகவே நின்றுள்ளனர்.
    • ஆந்திரா தேர்தல் குறித்த பிரசாந்த் கிஷோரின் கருத்து பரபரப்பை ஏற்படுத்தியது.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலத்தில் 175 சட்டமன்ற தொகுதிகள் மற்றும் 25 பாராளுமன்ற தொகுதிகளுக்கு நேற்று வாக்குப்பதிவு நடந்தது.

    ஆந்திரா தேர்தல் குறித்து பிரபல தேர்தல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    ஆந்திரா சட்டமன்றத் தேர்தலில் ஆளுங்கட்சியான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சிக்கு 67 இடங்கள் மட்டுமே கிடைக்கும். தெலுங்கு தேசம் மற்றும் பா.ஜ.க. பவன் கல்யாணின் ஜனசேனா கூட்டணி கட்சிகள் 106 இடங்களில் வெற்றி பெறும்.

    இதே போல 25 பாராளுமன்ற தொகுதிகளில் பா.ஜ.க., தெலுங்கு தேசம் கூட்டணி 15 இடங்களிலும், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் 8 இடங்களிலும் வெற்றி பெறும் என்று நம்புகிறேன்.


    முதல் மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி தொடர்ச்சியான தவறுகளை செய்துள்ளார். முதலில் அவர் தனது அம்மாவையும் சகோதரியையும் பார்த்திருக்க வேண்டும். இருவரும் அவருக்கு எதிராக இருக்கிறார்கள்.

    2019 தேர்தலில் ஜெகன் மோகன் ரெட்டிக்காக கடுமையாக உழைத்தவர்கள் தற்போது அவருக்கு எதிராகவே நின்றுள்ளனர். அதுவே அவருக்கு ஆபத்தானது.

    கடந்த 5 ஆண்டுகளில் ஜெகன் மோகன் ரெட்டி தன்னை ஒரு ராஜா போல நடத்தினார். ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் போல அவர் நடந்து கொள்ளவில்லை. மேலும் ஜெகன் மோகன் ரெட்டி தனக்கு ஆதரவாக நிற்பவர்களுக்கு துரோகம் செய்துள்ளார். 2019 தேர்தலில் நாங்கள் உதவி இருக்காவிட்டால் அவர் வெற்றி பெற்றிருக்க மாட்டார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஆந்திரா தேர்தல் குறித்த பிரசாந்த் கிஷோரின் கருத்து பரபரப்பை ஏற்படுத்தியது.

    • ராயலசீமா அல்லது கொனசீமா இடங்களில் நாங்கள் எந்த பகுதிக்கு சென்றாலும் மிகப்பெரிய வரவேற்பு கிடைக்கிறது.
    • நாங்கள் மக்களவை மற்றும் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறுவோம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

    ஆந்திர மாநிலம் முன்னாள் முதல்வரும் தெலுங்கு தேசம் கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடு நேற்று கோத்தபெட்டா கிராமத்தில் நடந்த பொதுக் கூட்டத்தில் பேசினார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    ராயலசீமா அல்லது கொனசீமாவில் நாங்கள் எந்த இடத்திற்கு சென்றாலும் மிகப்பெரிய வரவேற்பு கிடைக்கிறது. நாங்கள் மக்களவை மற்றும் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறுவோம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

    பசியுடன் உள்ள சிங்கம் வேட்டைக்கு காத்திருப்பது போல், இந்த தேர்தலில் அனைத்து துறையை சேர்ந்த மக்களும் இரண்டு பட்டன்களை அழுத்தி ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சியை தோற்கடிக்க மிகவும் ஆர்வமாக காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

    கொனசீமான என்பது அமைதியானது என்று அறியப்பட்டது. இதற்கு முன்னதாக இங்கு வன்முறை நிகழ்ந்தது கிடையாது. ஆனால் ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சி காலத்தில் தாக்குதல், நில அபகரிப்பு, பொய் வழக்கு, அட்டூழியங்கள் கமிஷன், ஜாதி அரசியல், மாபியா ராஜ்ஜியங்கள், கஞ்சா, அனைத்து வகையான ஊழல்கள் ஆகியவை அதிகரித்துள்ளது.

    ஜகன்மோகன் ரெட்டி அரசின் அட்டூழியங்களை நிறுத்துவதற்கு தெலுங்கு தேசம், ஜனசீனா மற்றும் பாரதிய ஜனதா இணைந்து மக்கள் முன் வந்துள்ளன.

    மத்தியில் பாஜக ஆட்சியில் உள்ளது. அது மீண்டும் தேர்ந்தெடுக்கப்படும். ஏமாற்றப்பட்ட மாநிலத்தை காப்பாற்றி சரியான பாதையில் கொண்டு செல்வதே எங்களின் நோக்கம். அதே நோக்கத்தில் மூன்று அரசியல் கட்சிகளும் ஒன்று சேர்ந்துள்ளன.

    இவ்வாறு சந்திரபாபு நாயுடு தெரிவித்தார்.

    ×