என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ஊட்டி குதிரை பந்தயம்"
- ஊட்டி ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் குதிரைப்பந்தய போட்டிகள் இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது.
- ஊட்டி குதிரைப்பந்தய போட்டியில் 25 ஜாக்கிகள், 16 பயிற்சியாளர்கள் பங்கேற்கின்றனர்.
ஊட்டி:
நீலகிரி மாவட்டத்தில் கோடை சீசன் தொடங்கி உள்ள சூழ்நிலையில் ஊட்டி தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சி மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன. இதன் ஒரு பகுதியாக ஊட்டி ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் குதிரைப்பந்தய போட்டிகள் இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் 500-க்கும் மேற்பட்ட குதிரைகள் பங்கேற்க உள்ளன.
ஊட்டி குதிரைப்பந்தயம் தொடர்பாக ரேஸ் கிளப் நிர்வாகிகள் கூறியதாவது:-
நீலகிரி கோடை விழாவின் ஒரு நிகழ்வாக குதிரைப்பந்தய போட்டிகள் இன்று தொடங்கி வருகிற ஜூன் மாதம் 2-ந்தேதி வரை மொத்தம் 17 நாட்கள் நடக்கிறது.
மேலும் முக்கிய குதிரை பந்தயங்களான ஆயிரம் கின்னிஸ் 20-ந் தேதியும், இரண்டாயிரம் கின்னிஸ் 21-ந் தேதியும், நீலகிரி டர்பி மே 12-ந்தேதியும், நீலகிரி தங்க கோப்பைக்கான பந்தய போட்டிகள் மே 26-ந்தேதியும் நடக்க உள்ளது.
ஊட்டி குதிரைப்பந்தய போட்டியில் 25 ஜாக்கிகள், 16 பயிற்சியாளர்கள் பங்கேற்கின்றனர். மேலும் சென்னை, மைசூரூ, பெங்களூரு, ஆந்திரா, மும்பை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 500-க்கும் மேற்பட்ட குதிரைகள் வரவழைக்கப்பட்டு, அவை போட்டிகளில் பங்கேற்க தயாராகி வருகின்றன.
இவ்வாறு அவர்கள் கூறினர்.