search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "யாஷ் தாகூர்"

    • குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் நான் பெற்ற ஆட்டநாயகன் விருதை எனது தந்தைக்கு சமர்ப்பிக்கிறேன்.
    • உமேஷ் யாதவ் என்னுடைய ரோல் மாடல். அவரை பார்த்து தான் வேகப்பந்து வீச்சை கற்றுக்கொண்டேன்.

    ஐபிஎல் தொடரின் 21-வது லீக் ஆட்டத்தில் லக்னோ- குஜராத் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற லக்னோ பேட்டிங் தேர்வு செய்வது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 163 ரன்கள் எடுத்தது.

    இதனையடுத்து களமிறங்கிய குஜராத் அணி தொடக்கம் சிறப்பாக அமைந்தது. அதனை தொடர்ந்து சீரான் இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். மேலும் லக்னோ அணி வேகப்பந்து வீச்சாளர் யாஷ் சிறப்பாக பந்து வீசி 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இறுதியில் லக்னோ அணி 33 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆட்டநாயகனாக யாஷ் தாகூர் தேர்வு செய்யப்பட்டார்.

    இந்நிலையில் ஆட்டநாயகன் விருதை தனது தந்தைக்கு சமர்பிப்பதாக லக்னோ அணியின் வேகப்பந்து வீச்சாளர் யாஷ் கூறினார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    உமேஷ் யாதவ் என்னுடைய ரோல் மாடல். அவரும் நானும் ஒரே ஊர் தான். அவரை பார்த்து தான் வேகப்பந்து வீச்சை கற்றுக்கொண்டேன். அவருக்கு எதிராக விளையாடும் போது நான் நிறைய கற்றுக்கொண்டேன். அவர் மிகவும் அடக்கமானவர். இரவு 12 மணிக்கு அவரை அழைத்தாலும் அவர் எனக்கு உதவுவார்.

    எனது மற்றொரு ரோல் மாடல் எம்எஸ் டோனி. அவர் தனது போட்டிகளை பேட்டிங் மூலம் முடிப்பார், நான் அதை பந்தில் செய்ய விரும்புகிறேன்.

    குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் நான் பெற்ற ஆட்டநாயகன் விருதை எனது தந்தைக்கு சமர்ப்பிக்கிறேன். அவர் தற்போது இல்லை. ஆனால் நான் இந்த நிலைக்கு உயர்வதற்கு அவர் நிறைய கஷ்டப்பட்டுள்ளார். இது அவரின் கனவும் கூட.

    இவ்வாறு யாஷ் கூறினார்.

    ×