என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர்"
- பாராளுமன்ற தேர்தலில் 400க்கும் அதிகமான இடங்களில் வென்று மோடி மீண்டும் பிரதமராவார் என பா.ஜ.க. தெரிவித்தது.
- ஜூன் முதல் வாரத்தில் 200-க்கு சரிந்துவிடும் என முன்னாள் தலைமை ஆணையர் கூறியுள்ளார்.
புதுடெல்லி:
பாராளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டமாக நடைபெற உள்ளதௌ. இதற்காக பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.
இதற்கிடையே, பாராளுமன்ற தேர்தலில் இந்த முறை 400க்கும் அதிகமான தொகுதிகளில் வென்று மோடி மீண்டும் பிரதமராக [பதவி ஏற்பார் என பாஜக தெரிவித்து வருகிறது.
இந்நிலையில், தேர்தல் ஆணையத்தின் முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் எஸ்.ஒய்.குரேஷி வெளியிட்டுள்ள செய்தியில் கூறியுள்ளதாவது:
இப்போது 400+ என்கிறார்கள். மே இறுதி வரை காத்திருங்கள், அது 250 ஆக குறையும். ஜூன் முதல் வாரத்தில், இது 175 முதல் 200-க்கு வந்து விடும்.
நான் அரை டஜன் அல்போன்சா மாம்பழங்களின் விலையைப் பற்றி பேசுகிறேன். அனைத்துப் பதிவுகளும் அரசியலை பேசவேண்டும் என்பதில்லை என பதிவிட்டுள்ளார். அவரது இந்த பதிவு வைரலாகி வருகிறது.
முன்னாள் தலைமை தேர்தர் ஆணையர் பா.ஜ.க.வையே மறைமுகமாக சாடியுள்ளார் என வலைதளவாசிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.