என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "முந்திரி காடு"
- வனத்துறையினர் இவைகள் சிறுத்தை கால் தடம் இல்லை இவைகள் நாய்கள் கால்தடம் என்று தெரிவித்தனர்.
- சிறுத்தை நடமாட்டம் முந்திரி காடுகளில் இருப்பதாகவும் யாரும் முந்திரி கொட்டை பறிக்க செல்ல வேண்டாம் என்றும் கால் தடங்களை வைத்து பதிவிட்டனர்.
செந்துறை:
மயிலாடுதுறை பகுதி மக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தை கடந்த 11-ந்தேதி அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே பொன்பரப்பி முந்திரி காடு, செந்துறை அரசு மருத்துவமனை, நின்னியூர் பகுதியில் உலவியது உறுதி செய்யப்பட்டது. இதை தொடர்ந்து வாத்துறையினர் அப்பகுதியில் முகாமிட்டு சிறுத்தையை பிடிக்க நடவடிக்கைகள் மேற்கொண்டனர்.
இந்நிலையில் செந்துறை அரசு மருத்துவமனையில் தென்பட்ட சிறுத்தை இன்னமும் செந்துறை பகுதியில் சுற்றி வருவதாக பொதுமக்கள் தொடர்ந்து அச்சத்தில் உள்ளனர். அதன் அடிப்படையில் நேற்று முன்தினம் சிறுகளத்தூர் தனியார் முந்திரி காட்டில் சிறுத்தை நடமாற்றம் இருப்பதாக தகவல் தெரிவித்தனர்.
அதேபோல் இரவு துளாரில் உள்ள தனியார் சிமெண்ட் ஆலை சுரங்கம் மற்றும் இருளாக்குறிச்சி ஆகிய பகுதிகளில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக அங்கு இருந்த லாரி ஓட்டுநர் ஒருவர் தகவல் தெரிவித்தார். அதன் அடிப்படையில் சமூக வலைதளங்களில் சிறுத்தை நடமாட்டம் முந்திரி காடுகளில் இருப்பதாகவும் யாரும் முந்திரி கொட்டை பறிக்க செல்ல வேண்டாம் என்றும் கால் தடங்களை வைத்து பதிவிட்டனர்.
இந்த தகவல் அப்பகுதியில் காட்டு தீயாக பரவியது. இதனால் முந்திரி விவசாயிகள் மிகவும் அச்சம் அடைந்தனர்.
இந்நிலையில் அந்த பகுதியை சேர்ந்த வாலிபர்கள் சிலர் சிறுத்தையை பிடிக்க திரண்டதால் அப்பகுதில் பரபரப்பு ஏற்பட்டது அப்பகுதிக்கு சென்ற வனத்துறையினர் இவைகள் சிறுத்தை கால் தடம் இல்லை இவைகள் நாய்கள் கால்தடம் என்று தெரிவித்தனர். இருப்பினும் இந்த பகுதி மக்கள் சிறுத்தைகள் நடமாட்டம் இருப்பதாக அச்சத்தில் உள்ளனர். இதனை போக்கு வதற்காக வனத்துறையினர் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டும் என்று இப்பகுதி பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.