என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "துடைப்பத்தால் அடிக்கும் திருவிழா"
- மாவிளக்கு ஏற்றி அக்னிச்சட்டி எடுத்து வந்து வழிபாடு செய்தனர்.
- துடைப்பத்தால் மாமன், மைத்துனர் ஒருவரையொருவர் அடித்துக்கொண்டனர்.
ஆண்டிபட்டி:
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள மறவபட்டி முத்தாலம்மன் கோவில் சித்திரை திருவிழா நடைபெற்று வருகிறது.
திருவிழாவின் முதல் நாளில் கன்னியப்ப பிள்ளை பட்டியில் இருந்து அம்மன் சிலையை ஊர்வலமாக எடுத்து வந்து மறவபட்டி முத்தாலம்மன் கோவிலில் வைத்து சிறப்பு பூஜைகள் செய்தனர்.
2-ம் நாளில் காப்பு கட்டிய பக்தர்கள் அம்மனுக்கு பொங்கல் வைத்து மாவிளக்கு ஏற்றி அக்னிச்சட்டி எடுத்து வந்து வழிபாடு செய்தனர்.
அதன் பின்பு கிராமத்தில் உள்ள மாமன் மைத்துனன் உறவு முறை கொண்டவர்கள் உடல் முழுவதும் சகதியை பூசிக் கொண்டும், சணல் சாக்கு கட்டிக் கொண்டும், கயிற்றால் ஒருவரையொருவர் பிணைத்துக்கொண்டும் கோவில் முன்பு தரையில் விழுந்து அம்மனை வணங்கி கோவில் வளாகத்தை சுற்றி வந்து வழிபாடு செய்தனர்.
அதன் பின் துடைப்பத்தை எடுத்து சகதியில் நனைத்து மாமன், மைத்துனர் உணவுமுறை கொண்டவர்கள் ஒருவரையொருவர் அடித்துக்கொண்டனர். இவ்வாறு செய்வதால் அவர்களது உறவு வலுப்படும் என்று பல ஆண்டுகளாக இவ்வகை நேர்த்திக்கடனை செலுத்தி வருவதாக தெரிவித்தனர்.
நீண்ட நாள் பிரிந்து வாழ்ந்த உறவுகள் கூட இத்திருவிழாவின் போது ஒன்று கூடி துடைப்பத்தால் அடித்து உறவை மேம்படுத்திக் கொள்வதாகவும் தெரிவித்தனர்.
இந்த வினோத திருவிழாவை காண ஆண்டிபட்டி மட்டுமின்றி பல்வேறு ஊர்களில் இருந்தும் ஏராளமான பொதுமக்கள் வருகை தந்து கண்டு ரசித்தனர்.