search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உணவு தயாரிக்கும் செலவு"

    • சைவ உணவின் விலை கடந்த ஏப்ரல் மாதத்தில் 8 சதவீதம் உயர்ந்துள்ளது.
    • சைவ விலை நிலையானது மற்றும் அசைவ உணவின் விலை 3 சதவீதம் உயர்ந்தது.

    நாட்டில் சமையல் பொருட்களின் விலை உயர்வு எதிரொலியால், வீட்டில் சமைக்கப்படும் சைவ உணவின் விலை கடந்த ஏப்ரல் மாதத்தில் 8 சதவீதம் உயர்ந்துள்ளது.

    இதுகுறித்து கிரிசில் மார்கெட் இண்டெலிஜென்ஸ் மற்றும் ஆனாலிடிக்ஸ் மதிப்பீட்டின்படி, "ஆண்டு அடிப்படையில், வீட்டில் சமைக்கப்படும் சைவ உணவின் விலை ஏப்ரல் மாதத்தில் 8 சதவீதம் உயர்ந்தது, அதே சமயம் அசைவ உணவின் விலை 4 சதவீதம் குறைந்துள்ளது.

    வீட்டில் உணவு தயாரிப்பதற்கான சராசரி செலவு வடக்கு, தெற்கு, கிழக்கு மற்றும் மேற்கு இந்தியாவில் நிலவும் உள்ளீட்டு விலைகளின் அடிப்படையில் கணக்கிடப்பட்டது.

    வெங்காயம், தக்காளி மற்றும் உருளைக்கிழங்கு ஆகியவற்றின் விலைகள் ஆண்டுக்கு ஆண்டு 41 சதவீதம், 40 சதவீதம் மற்றும் 38 சதவீதம் அதிகரித்துள்ளதால் சைவ உணவின் விலை அதிகரித்துள்ளது.

    மேற்கு வங்காளத்தில் ரபி சாகுபடியில் கணிசமான வீழ்ச்சி மற்றும் உருளைக்கிழங்கு பயிர் சேதம் காரணமாக குறைந்த வெங்காயம் வரத்து விலை உயர்வுக்கு வழிவகுத்துள்ளதாக கிரிசில் அறிக்கையில் வலியுறுத்தப்பட்டது.

    குறைந்த வரத்து காரணமாக, அரிசியின் விலைகள் (சைவ தாலி விலையில் 13 சதவீதம்) மற்றும் பருப்பு வகைகள் (9 சதவீதம்) ஆண்டுக்கு ஆண்டு முறையே 14 சதவீதம் மற்றும் 20 சதவீதம் அதிகரித்துள்ளன.

    சீரகம், மிளகாய் மற்றும் தாவர எண்ணெய் விலைகள் முறையே 40 சதவீதம், 31 சதவீதம் மற்றும் 10 சதவீதம் சரிந்ததால், சைவ விலை மேலும் அதிகரிக்காமல் தடுக்கப்பட்டது.

    அசைவ தாலியை பொறுத்தவரை, கடந்த நிதியாண்டின் உயர் அடிப்படையில் கறிக்கோழி விலை ஆண்டுக்கு ஆண்டு 12 சதவீதம் சரிந்ததால், அசைவ தாலியின் விலை குறைந்தது.

    இருப்பினும், மாதாந்திர அடிப்படையில், சைவ விலை நிலையானது மற்றும் அசைவ உணவின் விலை 3 சதவீதம் உயர்ந்துள்ளது.

    ×