search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இந்தியாவின் வளர்ச்சிப் பயணம்"

    • தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்கள் மற்றும் முதல்வர்கள் பலர் கலந்து கொண்டனர்.
    • 10 ஆண்டுகளில் காசிக்கு (வாரணாசி) உலகத்தரம் வாய்ந்த வளர்ச்சியை மோடி கொண்டு வந்துள்ளார்.

    பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் இந்தியாவின் வளர்ச்சி மற்றும் பெருமைக்கான பயணம் தடையின்றி தொடரும் என்றும் வாரணாசி மக்கள் அவருக்கு மீண்டும் ஒரு சாதனை வித்தியாசத்தில் வெற்றிப்பெற ஆசீர்வதிப்பார்கள் என்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று தெரிவித்தார்.

    வாரணாசி மக்களவைத் தொகுதியில் 3வது முறையாக மீண்டும் வெற்றிப்பெறும் நோக்கில் பிரதமர் மோடி இன்று மனுத்தாக்கல் செய்தார்.

    அப்போது தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்கள் மற்றும் முதல்வர்கள் பலர் கலந்து கொண்டனர். அமித்ஷாவும் இந்நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டார். 

    இதுகுறித்து அமித்ஷா தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    இந்திய கலாச்சாரத்தின் மையமான பாபா விஸ்வநாத்தின் நகரமான காசியில் இருந்து தொடர்ந்து மூன்றாவது முறையாக வேட்புமனு தாக்கல் செய்த 'யஷஸ்வி' பிரதமர் நரேந்திரமோடிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    10 ஆண்டுகளில் காசிக்கு (வாரணாசி) உலகத்தரம் வாய்ந்த வளர்ச்சியை மோடி கொண்டு வந்துள்ளார்.

    அவர் இந்தியாவின் ஆன்மீக மற்றும் கலாச்சார பாரம்பரியத்தையும் மேம்படுத்தியுள்ளார். மோடியின் தலைமையில் இந்தியாவின் வளர்ச்சி மற்றும் பெருமைக்கான பயணம் தடையின்றி தொடர பாபா விஸ்வநாத் மற்றும் கங்கா 'மையா' ஆகியோரை நான் பிரார்த்திக்கிறேன்.

    இந்த முறையும் காசி மக்கள் மோடியை சாதனைக்குரிய வித்தியாசத்தில் வெற்றி பெற ஆசீர்வதிப்பார்கள் என்று நான் நம்புகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×