search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஓட்டுவேட்டை"

    • அமித்ஷாவை பிரதமராக்க, பிரதமர் மோடி ஓட்டு கேட்கிறார்.
    • அமித்ஷாவுக்கு தடையாக இருந்த பெரிய தலைவர்களும் ஓரங்கட்டப்பட்டுள்ளனர்.

    லக்னோ:

    டெல்லி முதல்-மந்திரியும், ஆம் ஆத்மி கட்சி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் இன்று உத்தரபிரதேச மாநிலம் லக்னோவுக்கு சென்றார். அங்கு சமாஜ் வாடி கட்சி அலுவலகத்துக்கு சென்ற அரவிந்த் கெஜ்ரிவாலை அக்கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.

    பின்னர் இருவரும் கூட்டாக நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது அரவிந்த் கெஜ்ரிவால் கூறியதாவது:-

    இந்திய கூட்டணிக்கு வாக்களிக்குமாறு உத்தரபிரதேச வாக்காளர்களிடம் கோரிக்கை வைக்க இங்கு வந்துள்ளேன். நான்கு விஷயங்களைப் பற்றி நான் பேச விரும்புகிறேன். முதலில் இந்த தேர்தலில், அமித்ஷாவை பிரதமராக்க, பிரதமர் மோடி ஓட்டு கேட்கிறார்.

    பிரதமர் மோடிக்கு செப்டம்பர் 17, 2025 அன்று 75 வயதாகிறது. அன்று அவர் அமித் ஷாவை தனது வாரிசாக்கி, பிரதமராக்க முடிவு செய்துள்ளார். இதற்காக மோடி கடந்த 2 முதல் 3 ஆண்டுகளாக உழைத்து வருகிறார். அமித்ஷாவுக்கு தடையாக இருந்த அனைத்து பெரிய தலைவர்களும் ஓரங்கட்டப்பட்டுள்ளனர்.

    தற்போது அமித் ஷாவுக்கு பதிலாக ஒரே ஒரு தலைவராக யோகி ஆதித்யநாத் இருக்கிறார். 75 வயதுக்கு பிறகு ஓய்வு பெறப்போவதில்லை என்று பிரதமர் மோடி இதுவரை கூறவில்லை. இந்த விதி

    முறையை (75 வயதானால் பதவியில் இருந்து ஓய்வு பெற வேண்டும்) பா.ஜனதா கட்சியில் மோடி ஏற்படுத்தினார். இந்த விதியை அவர் பின் பற்றுவார் என்று எனக்கு முழு நம்பிக்கை உள்ளது.

    2-வதாக பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால், 2 அல்லது 3 மாதங் களில் முதல்வர் யோகி ஆதித்யநாத் பதவியில் இருந்து நீக்கப்படுவார்.

    3-வதாக, பா.ஜனதா ஆட்சிக்கு வந்தால் அரசியல் சட்டத்தை மாற்றி விடுவார்கள். போகிறார்கள். எஸ்சி, எஸ்டி இடஒதுக்கீட்டை நீக்குவார்கள்.

    பா.ஜனதாவினர் எப்போதுமே இட ஒதுக்கீட் டிற்கு எதிரானவர்கள். அவர்கள் ஆட்சிக்கு வந்தால் அரசியல் சட்டத்தை (மாற்றி) இட ஒதுக்கீட்டை முடிவுக்கு கொண்டு வந்து விடுவார்கள். நான்காவதாக, ஜூன் 4-ந்தேதி இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வருகிறது.

    பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா 220 இடங்களுக்கு குறைவாகவே பெறும் என்று தற்போதைய நிலவரங்கள் காட்டுகின்றன. அரியானா, டெல்லி, பஞ்சாப், கர்நாடகா, மகாராஷ்டிரா, மேற்கு வங்காளம், உத்தரபிரதேசம், பீகார், ஜார்கண்ட், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் அவர்களது இடங்கள் குறைய போகிறது. பா.ஜனதா ஆட்சியை அமைக்கப் போவதில்லை.

    இந்தியா கூட்டணிதான் ஆட்சி அமைக்கப் போகிறது என்றார். அகிலேஷ் யாதவ் கூறும் போது, 543 தொகுதிகளில் 143 இடங்களுக்கு மேல் கிடைக்காது என்று பா.ஜனதாவே நம்புகிறது என்றார்.

    ×