search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தென்மேற்கு வங்கக்கடல்"

    • மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
    • தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.

    புதுடெல்லி:

    மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதேபோல், தெற்கு ஆந்திராவை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.

    இதனால் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

    இந்நிலையில் நவம்பர் முதல் வார இறுதியில் தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகும் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி தீவிரமடைந்து காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    தமிழகத்தை நோக்கி நகரும் காற்றழுத்தத் தாழ்வு மண்டலத்தால் நவ.7-11-ம் தேதி வரை மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

    • 18, 21, 22 ஆகிய 3 தேதிகளில் மிக கனமழைக்கான ஆரஞ்சு நிற எச்சரிக்கை.
    • தென் மாவட்டங்களில் அடுத்த 24 மணிநேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு.

    தென்மேற்கு வங்கக்கடலில் வரும் 22ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    தொடர்ந்து அது வடகிழக்கு திசையில் நகர்ந்த 24ம் தேதி வாக்கில் மத்திய வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தமிழ்நாட்டில் நாளை மற்றும் நாளை மறுநாள் அதி கனமழைக்கான சிவப்பு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    18, 21, 22 ஆகிய 3 தேதிகளில் மிக கனமழைக்கான ஆரஞ்சு நிற எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.

    தமிழ்நாட்டிற்கான மழை நிலவரம் குறித்து சென்னை வானிலை ஆய்வு மையத்தின் இயக்குனர் செந்தாமரை கண்ணன் விளக்கம் அளித்துள்ளார். 

    அதில், தருமபுரி, சேலம், நாமக்கல் ஆகிய தென் மாவட்டங்களில் அடுத்த 24 மணிநேரத்திற்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

    நெல்லை, தென்காசி, குமரி உள்ளிட்ட மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது.

    நாளை முதல் 21ம் தேதி வரை தேனி, தென்காசி, கன்னியாகுமரி, நெல்லை மாவட்டங்களில் அதி கனமழைக்கு வாய்ப்புள்ளது.

    கேரள, கர்நாடக கடல் பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    சென்னை, புறநகர் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது என்று கூறினார்.

    ×