search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆர்சிபி வீரர்கள்"

    • டோனி பெங்களூரு அணி வீரர்களுக்கு கை குலுக்காமல் டிரெசிங் ரூம் சென்றுவிட்டார்.
    • இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

    ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரில் சென்னை அணி தனது கடைசி லீக் போட்டியில் விளையாடியது. இந்த போட்டியில் வெற்றி பெற்றால், பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற முடியும் என்ற நிலையில் சென்னை அணி களமிறங்கியது.

    பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் சென்னை அணி கடைசி ஓவர் வரை சென்று தோல்வி அடைந்தது. இதன் மூலம் நடப்பு ஐ.பி.எல். தொடரில் இருந்து சென்னை அணி வெளியேறியது. வெற்றி பெற்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறி உள்ளது.

    போட்டி முடிந்த பிறகு சென்னை அணி வீரர்கள், ஆர்.சி.பி. வீரர்களுக்கு கை குலுக்க வரிசையில் நின்றிருந்தனர். சி.எஸ்.கே. வீரர்களில் முதல் ஆளாக நின்ற டோனி பெங்களூரு அணி வீரர்களுக்கு கை குலுக்காமல் டிரெசிங் ரூம் சென்றுவிட்டார்.

    களத்தில் இருந்து வெளியே செல்லும் போது வழியில் இருந்த ஆர்.சி.பி. அணியின் பணியாளர்களுக்கு கை கொடுத்த டோனி சோகத்துடன் டிரெசிங் ரூம் சென்றார். டோனி ஆர்.சி.பி. வீரர்களிடம் கை குலுக்காமல் சென்ற சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்துக்கு ஆதரவும் எதிர்ப்பும் வந்த வண்ணம் இருந்தது.

    இந்நிலையில் டோனி தொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் போன வருடம் நடந்த ஐபிஎல் தொடரின் இறுதி போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது. அந்த மகிழ்ச்சியில் சிஎஸ்கே வீரர்கள் கொண்டாட்டத்தில் ஈடுப்பட்டு வந்தனர்.

    அந்த கொண்டாட்டத்தில் இருந்த டோனி அனைவரையும் குஜராத் வீரர்களுக்கும் கைகுலுக்கி விட்டு வரலாம் வாங்க என அழைத்து சென்றார். இந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பதிவு செய்து டோனிக்கும் ஆர்சிபி வீரர்களுக்கு இதுதான் வித்தியாசம் என கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    ×