search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அரண்மனை குதிரை"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • லண்டனின் வெஸ்ட் மின்ஸ்டர் பகுதியில் குதிரை படை காவலர்களின் அணிவகுப்பு நடந்துள்ளது.
    • வீடியோவை பார்த்த பயனர்கள் பலரும், சில படங்களை மரியாதையுடன் எடுங்கள் என பதிவிட்டனர்.

    இங்கிலாந்தில் வரலாற்று சிறப்புமிக்க பக்கிங்ஹாம் அரண்மனை மற்றும் செயின்ட் ஜேம்ஸ் அரண்மனையை காண நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். அரண்மனையை சுற்றி உள்ள பகுதிகள் முன்பு நின்று அவர்கள் புகைப்படம் எடுத்து மகிழ்கிறார்கள்.

    இதையொட்டி அரண்மனை முன்பு ஏராளமான போலீசார் காவல் பணியிலும் ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில் லண்டனின் வெஸ்ட் மின்ஸ்டர் பகுதியில் குதிரை படை காவலர்களின் அணிவகுப்பு நடந்துள்ளது. அப்போது அங்கு சென்றிருந்த பெண் சுற்றுலா பயணி ஒருவர் குதிரை முன்பு நின்று புகைப்படம் எடுத்துள்ளார். அப்போது அந்த சுற்றுலா பயணி புகைப்படம் எடுப்பதற்காக குதிரையை தொட்டுள்ளார். இதனால் ஆவேசம் அடைந்த அந்த குதிரை கிளர்ந்தெழுந்து அந்த பெண்ணை தாக்கி உள்ளது.

    இதனால் அந்தப்பெண் தடுமாறி கீழே விழுந்தார். அவருக்கு அங்கிருந்த சிலர் உதவி செய்தனர். பின்னர் குதிரை படை வீரர் அந்த குதிரையை சாந்தப்படுத்தி உள்ளார். இதுதொடர்பான காட்சிகள் எக்ஸ் தளத்தில் வைரலாகி 10 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை குவித்தது. வீடியோவை பார்த்த பயனர்கள் பலரும், சில படங்களை மரியாதையுடன் எடுங்கள் என பதிவிட்டனர்.

    ×