என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "கோவை சிறப்பு ரெயில்"
- ரெயிலில் பயணம் செய்ய பயணிகள் முன்பதிவு செய்யலாம்.
- கோவையில் இருந்து இரவு 10.15 மணிக்கு புறப்பட்டு காலை 6.55 மணிக்கு மங்களூரு சென்றடையும்.
கோவை:
கோடை முடிந்து ஊர்களுக்கு திரும்ப வசதியாக கோவை-மங்களூரு இடையே வாராந்திர சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.
இதுகுறித்து சேலம் ரெயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
வண்டி எண் 06041 மங்களூரு சென்ட்ரல்-கோவை வாராந்திர சிறப்பு ரெயில் வருகிற ஜூன் 1,8,15, 22,29 ஆகிய தேதிகளில் (சனிக்கிழமைகளில்) மங்களூருவில் இருந்து காலை 9.30 மணிக்கு புறப்பட்டு மாலை 5.25 மணிக்கு கோவை வந்தடையும்.
மறுமார்க்கமாக வண்டி எண் 06042 கோவை-மங்களூரு வாராந்திர சிறப்பு ரெயில் ஜூன் 1,8,15,22,29 ஆகிய தேதிகளில் கோவையில் இருந்து இரவு 10.15 மணிக்கு புறப்பட்டு காலை 6.55 மணிக்கு மங்களூரு சென்றடையும்.
இந்த சிறப்பு ரெயில் காசர்கோடு, பையனூர், கண்ணூர், தலச்சேரி, வடக்கரா, கோழிக்கோடு, திரூர், சொரணூர், ஒட்டப்பாலம், பாலக்காடு, போத்தனூர் ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த ரெயிலில் பயணம் செய்ய பயணிகள் முன்பதிவு செய்யலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.