search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டெல்லி தண்ணீர் பிரச்சனை"

    • அரியானா அரசிடம் தொடர்ந்து பேசிக் கொண்டிருக்கிறோம்.
    • ஆனால், பலமுறை பேசிய பின்னரும் அரியானா அரசு தண்ணீர் திறந்துவிடவில்லை.

    அரியானா மாநிலத்தில் உள்ள அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் டெல்லி மாநிலத்தில் உள்ள மக்களின் குடிநீரை பூர்த்தி செய்து வருகிறது. தற்போது டெல்லியில் கடுமையான வெப்பம் நிலவி வருகிறது. இன்று 45 டிகிரி செல்சியஸ் வெயில் கொளுத்தியுள்ளது.

    இதனால் டெல்லியில் குடிநீர் தேவை அதிகரித்துள்ளது. அதேவேளையில் அரியானா மாநிலம் டெல்லிக்கு திறந்து விடும் தண்ணீரை நிறுத்தியுள்ளது. இதனால் டெல்லியில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலை எட்டியுள்ளது.

    இதனால் டெல்லி மாநில அரசு தொடர்ந்து அரியானா மாநிலத்திடம் தண்ணீர் திறந்து விடக்கோரி வலியுறுத்தி வருகிறது. என்றபோதிலும் அரியானா அரசு தண்ணீர் திறந்துவிடவில்லை. அரியானா மாநிலத்தில் பா.ஜனதா ஆட்சி நடைபெற்று வருகிறது. பா.ஜனதா டெல்லி அரசுக்கு எதிராக சதி செய்கிறது என டெல்லி மாநில அரசு குற்றம்சாட்டியது.

    இந்த நிலையில் தண்ணீர் திறக்கவில்லை என்றால் நீதிமன்றம் செல்ல இருப்பதாக டெல்லி மாநில மந்திரி அதிஷி தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அதிஷி கூறுகையில் "அரியானா அரசிடம் தொடர்ந்து பேசிக் கொண்டிருக்கிறோம். ஆனால், பலமுறை பேசிய பின்னரும் அரியானா அரசு தண்ணீர் திறந்துவிடவில்லை. இன்னும் ஒன்றிரண்டு நாட்களில் தண்ணீர் வினியோகம் முன்னேற்றம் அடையவில்லை என்றால், அதன்பின் நாங்கள் நீதிமன்றத்திற்கு செல்வோம். உச்சநீதிமன்றத்திற்கும் செல்வோம். கடுமையான வெப்ப அலை காரணமாக நீர் அளவு குறையும்போது, டெல்லி மிகப்பெரிய பிரச்சனையை எதிர்கொள்ளும்" என்றார்.

    ×