search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டிக்கெட் மோசடி"

    • ரகு சாய் தேஜா தான் லட்டு கவுண்டரில் வேலை செய்வதாகவும் வி.ஐ.பி. பிரேக் தரிசனத்திற்கு ஏற்பாடு செய்வதாக கூறினார்.
    • தேவஸ்தான ஊழியர்கள் சீனிவாஸ் கொண்டு சென்ற டிக்கெட்டுகளை ஸ்கேன் செய்தபோது ஸ்கேன் ஆகவில்லை.

    திருப்பதி:

    திருப்பதி கோவிலில் இலவச நேரடி தரிசனத்திற்கு காத்திருக்க முடியாத பக்தர்கள் தரிசன டிக்கெட் பெறுவதற்காக புரோக்கர்களை நாடி செல்கின்றனர்.

    புரோக்கர்கள் பக்தர்களிடம் பல்லாயிரக்கணக்கில் பணத்தைப் பெற்றுக்கொண்டு போலி தரிசன டிக்கெட் கொடுத்து ஏமாற்றி வருவது தொடர்கதையாக உள்ளது.

    இந்த நிலையில் விசாகப்பட்டினத்தை சேர்ந்த சீனிவாஸ் என்பவர் வி.ஐ.பி. பிரேக் தரிசன டிக்கெட் பெறுவதற்காக தனது நண்பரின் மூலம் திருப்பதியை சேர்ந்த ரகு சாய் தேஜா என்ற புரோக்கரை செல்போன் மூலம் தொடர்பு கொண்டார். தனக்கு 4 வி.ஐ.பி. தரிசன டிக்கெட் வேண்டுமென தெரிவித்தார்.

    அப்போது ரகு சாய் தேஜா தான் லட்டு கவுண்டரில் வேலை செய்வதாகவும் வி.ஐ.பி. பிரேக் தரிசனத்திற்கு ஏற்பாடு செய்வதாக கூறினார். கடந்த 26-ந் தேதி ஆன்லைன் பரிவர்த்தனை மூலம் சீனிவாசிடமிருந்து ரூ.17 ஆயிரத்தை பெற்றுக் கொண்டார்.

    பின்னர் பழைய வி.ஐ.பி. பிரேக் தரிசன டிக்கெட்டை ஸ்கேன் செய்து பெயர் மற்றும் தேதிகளை மாற்றி போலி டிக்கெட் தயார் செய்தார். அதை வாட்ஸ் அப் மூலம் சீனிவாசிற்கு அனுப்பினார். அந்த டிக்கெட்டை எடுத்துக்கொண்டு நேற்று சீனிவாஸ் தரிசனம் செய்ய சென்றார்.

    தேவஸ்தான ஊழியர்கள் சீனிவாஸ் கொண்டு சென்ற டிக்கெட்டுகளை ஸ்கேன் செய்தபோது ஸ்கேன் ஆகவில்லை. இதனால் தேவஸ்தான ஊழியர்கள் போலி தரிசன டிக்கெட் என சீனிவாசை திருப்பி அனுப்பினர்.

    இதுகுறித்து சீனிவாஸ் திருப்பதி விஜிலென்ஸ் பிரிவு அதிகாரியிடம் புகார் செய்தார்.

    அவர்கள் அளித்த புகாரின்பேரில் திருப்பதி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×