search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பைக்காரா நீர்வீழ்ச்சி"

    • கடந்த சில தினங்களாக ஊட்டியில் பெய்த மழை காரணமாக பைக்காரா அணைக்கு நீர்வரத்து சற்று அதிகரித்துள்ளது.
    • அவ்வப்போது மின் உற்பத்திக்காக அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலாத் தலங்களில் பைக்காரா அருவியும் ஒன்று. ஊட்டி அருகே பைக்காரா என்ற ஊரில் உற்பத்தியாகும் ஆறானது, பைக்காரா அருவியாக உருவெடுத்துள்ளது.

    இயற்கை எழில் கொஞ்சும் மலைகளுக்கு நடுவே 55 மீட்டர் மற்றும் 61 மீட்டர் உயரத்தில் இருந்து கொட்டும் தொடர் அருவியாக அமைந்துள்ள இந்த பைக்காரா அருவி சுற்றுலா பயணிகளை மிகவும் கவர்ந்து இழுக்கிறது.

    இதனால் நீலகிரிக்கு சுற்றுலா வரும் சுற்றுலா பயணிகள் அனைவரும் இங்கு செல்வதையும் வழக்கமாக வைத்துள்ளனர்.

    இந்த அணையில் இருந்து தினமும் மின் உற்பத்திக்காக தண்ணீர் திறக்கப்படுகிறது. தண்ணீர் திறக்கும்போது, மின் உற்பத்தி செய்த பின்னர் தண்ணீர் அணையில் இருந்து பைக்காரா வனப்பகுதிகளின் நடுவே உள்ள ஆற்றில் உள்ள பெரிய பாறைகள் மீது பாய்ந்து செல்லும் காட்சி ரம்மியமாக காட்சியளிக்கும்.

    தற்போது கடந்த சில தினங்களாக ஊட்டியில் பெய்த மழை காரணமாக பைக்காரா அணைக்கு நீர்வரத்து சற்று அதிகரித்துள்ளது.

    அவ்வப்போது மின் உற்பத்திக்காக அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.

    இதனால் பைக்காரா நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனை இங்கு வரும் சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்பி புகைப்படம் எடுத்து மகிழ்கின்றனர்.

    ×