search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போதைப் பொருள் கைது"

    • ஐஸ் கிறிஸ்டைல் மெத்தம் பெட்டாமைன் போதைப் பொருள் பறிமுதல்.
    • போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி தென்பாகம் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் ஒரு வீட்டில் போதைப்பொருள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதைத்தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் உத்தரவின் பேரில், மதுவிலக்கு துணை போலீஸ் சூப்பிரண்டு செந்தில் இளந்தரையன், மதுவிலக்கு இன்ஸ்பெக்டர் (பொறுப்பு ) மேகா, தூத்துக்குடி நகர தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

    அப்போது இனிகோ நகர் பகுதியில் ஒரு வீட்டில் ஐஸ் கிறிஸ்டைல் மெத்தம் பெட்டாமைன் என்ற போதைப்பொருள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்ததை கண்டறிந்தனர். இதனால் போலீசார் நள்ளிரவில் அந்த வீட்டை முற்றுகையிட்டு தீவிர சோதனை நடத்தினர். அங்கு சுமார் 8 கிலோ ஐஸ் கிறிஸ்டைல் மெத்தம் பெட்டாமைன் போதைப் பொருள் இருந்தது. அதனை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    விசாரணையில் வீட்டில் இருந்த மட்டக்கடையை சேர்ந்த நிர்மல் ராஜ் என்ற நிர்மல் (வயது 29 ), அவரது மனைவி சிவானி (28) ஆகியோர் போதைப்பொருளை பதுக்கியது தெரியவந்தது. தொடர்ந்து கணவன்-மனைவி இருவரையும் கைது செய்த போலீசார் தூத்துக்குடி மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர். அங்கு 2 பேரிடமும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    அதன் பின்னரே அவர்களுக்கு போதை பொருள் எங்கிருந்து கிடைத்தது? யாரிடம் விற்பதற்காக பதுக்கி வைத்துள்ளனர்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருளின் மதிப்பு ரூ.24 கோடி என்று போலீசார் தெரிவித்தனர்.

    ×