search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அர்ஷ்தீப் சிங் பும்ரா"

    • சூப்பர் 8 சுற்றில் இந்திய அணி ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது.
    • நாளை நடக்கும் அரையிறுதியில் இந்திய அணி இங்கிலாந்துடன் மோதுகிறது.

    செயின்ட் வின்சென்ட்:

    செயின்ட் வின்சென்ட் நகரில் நடந்த சூப்பர் 8 போட்டியில் இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதின. முதலில் ஆடிய இந்தியா 205 ரன்களைக் குவித்தது. கேப்டன் ரோகித் சர்மா 92 ரன்கள் குவித்தார்.

    அடுத்து ஆடிய ஆஸ்திரேலியா 7 விக்கெட்டுக்கு 181 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்து டி20 உலகக் கோப்பையில் இருந்து வெளியேறியது. டிராவிஸ் ஹெட் 76 ரன்கள் எடுத்தார்.

    இந்தியா சார்பில் அதிகபட்சமாக அர்ஷ்தீப் சிங் 3 விக்கெட் எடுத்தார்.

    நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் ஜஸ்ப்ரித் பும்ராவுக்கு நிகராக இடதுகை வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். இதுவரை 6 போட்டிகளில் விளையாடி 15 விக்கெட்டுகள் எடுத்துள்ள அவர், டி20 உலகக் கோப்பையில் அதிக விக்கெட்டுகள் எடுத்த இந்திய வீரராக சாதனை படைத்துள்ளார்.

    இந்நிலையில், தான் விக்கெட்டுகள் வீழ்த்தியது குறித்து அர்ஷ்தீப் சிங் கூறியதாவது:

    அனைத்து பாராட்டுகளும் ஜஸ்பிரீத் பும்ராவுக்கு செல்லவேண்டும் என நினைக்கிறேன். ஏனெனில் அவர் பேட்ஸ்மேன்கள் மீது அதிகப்படியான அழுத்தத்தை போடுகிறார்.

    அவர் தன்னுடைய ஓவரில் 3 அல்லது 4 ரன்கள் மட்டுமே கொடுக்கிறார். எனவே எதிரணி பேட்ஸ்மேன்கள் என்னுடைய ஓவரில் ரன்கள் அடிக்க வருகிறார்கள். அப்போது நான் என்னுடைய சிறந்த பந்தை வீச முயற்சிக்கிறேன். அதனால் எனக்கு விக்கெட் விழுவதற்கான வாய்ப்பு நிறைய கிடைக்கிறது.

    ஏனெனில் எதிர்ப்புறம் ரன்கள் வருவதில்லை. அதனால் ரன் ரேட் அதிகமாக உயர்கிறது. எனவே எதிரணியினர் எனக்கு எதிராக அதிக ரிஸ்க் எடுத்து விளையாட முயற்சிக்கின்றனர். அதனால் எனக்கு அங்கே விக்கெட்டுகள் கிடைப்பதற்கான வாய்ப்பு எப்போதும் இருக்கிறது. எனவே நான் எடுத்துள்ள விக்கெட்டுகளுக்கான அனைத்து பாராட்டுக்களும் பும்ராவை சேரும் என தெரிவித்தார்.

    ×